சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Apr 2013

P.B.ஸ்ரீநிவாஸ் - மனிதன் என்பவன் தெய்வமாகலாம்


மெல்லிசை பாடல்களுக்கு சொந்தகாரர் P.B.ஸ்ரீநிவாஸ் அய்யா அவர்கள்.1930 ஆம் வருடம் செப்டம்பர் 30 ஆம் நாள் ஆந்திராவின் காக்கிநாடாவில் பிறந்தவர். தமிழ்,தெலுங்கு,மலையாளம் உட்பட 12 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான  பாடல்களை பாடியுள்ளார்.அய்யாவின் முதல் பாடல் 1951 ல் ஹிந்தி மொழியில் வெளியான சம்பத் என்ற படத்தில் இடம்பெற்றது. தமிழில் முதன்முறையாக 1953 ஆம் வருடம் வெளியான  "ஜாதகம்என்ற திரைப்படத்தில் " சிந்தனை என் செல்வமே " என்ற பாடலை பாடினார்.

                                        

தமிழ் திரை இசை உலகின் சக்கரவர்த்தியான T.M.சௌந்தராஜன் அவர்கள் புகழின் உச்சியில் இருந்தபோது இவரும் தனக்கான நிலையான இடத்தை தக்க வைத்திருந்தார். T.M.சௌந்தராஜன்  அவர்கள் உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருந்த போது இவரின் மென்மையான குரல் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக " காதல் மன்னன்"  ஜெமினி கணேசன் அவர்களுக்கு பல காதல் பாடல்களை பாடியுள்ளார். ஜெமினிகணேசன் அவர்கள் " காதல் மன்னன் " பட்டம் பெற இவர் பாடிய பாடல்களும் ஒரு காரணம் என நான் கூறுவேன். கன்னட நடிகர் மறைந்த ராஜ்குமார் அவர்களுக்கும் பல பாடல்களை  பாடியுள்ளார்.



 “ஆயிரம் வாசல் இதயம் -அதில் 
ஆயிரம் எண்ணங்கள் உதயம் 
யாரோ வருவார், யாரோ போவார் 
வருவதும் போவதும் தெரியாது,”

“எங்கே வாழ்க்கை தொடங்கும் - அது 
எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை ,இதுதான் பயணம் 
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் 
பயணம் முடிந்துவிடும்.”

“காலங்களில் அவள் வசந்தம் 
கலைகளிலே  அவள் ஓவியம் 
மாதங்களில் அவள் மார்கழி 
மலர்களிலே அவள் மல்லிகை,”

“மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பாமா?
வாழ்க்கையில் நடுக்கமா? “

“யார் யார் யார் இவர் யாரோ ?”

“அழகிய மிதிலை நகரினிலே “

என்ற பாடல் வரிகள் தமிழ் ரசிகர்களால்  எப்போதும் மறக்கமுடியாத வரிகளாக இருக்கும்.

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து 
தாயின் கனவை மிதிக்கலாமா?

ஊமைவிழிகள் படத்தில் வரும் இந்த பாடல் சோர்வுற்று விரக்தியில் இருக்கும் மனிதர்களுக்கு  ஒரு புத்துணர்ச்சியை தரும் என்பது உறுதி. மேலும் இவர் பல பக்தி பாடல்களையும் ஆல்பமாக வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது பல பாடல்களை 
இவரே இயற்றி பாடியும் உள்ளார்.

இவர் பாடிய " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் " என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப 
தற்போது மக்கள் மனதில் தெய்வமாக எங்கும் நிறைந்துவிட்டார்.




1 comment:

  1. எனது பல பதிவுகளில் அவரது பாடல் வரிகள் உண்டு... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete