சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Apr 2013

நடிகர்,நடிகைகளின் உண்ணாவிரத நாடகம்

நடிகர்,நடிகைகளின் உண்ணாவிரதப்  போராட்டத்தில் நடந்த சில கேவலமான  தகவல்களை நான் கேள்விப்பட்டேன். காலை சுமார் 9 மணிவாக்கில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியது.அதற்குள் நடிகர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவரவர் விருப்பம் போல் அவர்களுக்கு தகுந்த நேரத்திற்கு வந்தனர்.

நடிகர்கள் வரிசையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், வாகை சந்திரசேகர் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் காலையில் வந்து விட்டார்கள்.உண்ணாவிரதம் தொடங்கிய உடனே வந்து பந்தலில் அமர்ந்த முதல் நடிகை தன்ஷிகா மட்டும் தான். அதன் பிறகு சில சீனியர் நடிகைகள் வந்தனர். ராதிகா, ஊர்வசி, அம்பிகா, ரேகா, கோவை சரளா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அடுத்தடுத்து வந்தனர்.



உண்ணாவிரதம் ஆரம்பித்த வேளையில் ஈழ ஆதரவு பரப்புரை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் சுமார் 11 மணி வாக்கில் அந்த பாடல்கள் ஒலிபரப்புவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இது எந்த அதிகார வர்க்கத்தின் உத்தரவோ தெரியவில்லை. அல்லது பதவியில் இருக்கும் நடிகர்கள் தங்களுக்கும் மத்தியிலிருந்து ரெய்டு வந்துவிடும் என்று பயந்து நிறுத்தி விட்டார்களா? தெரியவில்லை.

நடிகர் ரஜினி சுமார் 11 மணி வாக்கில் உண்ணாவிரதப்பந்தலுக்கு வந்தார். ரஜினி ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர் என்பதை உணர்ந்து அவரை பலரும்வேண்டாம். நீங்கள் வீட்டிற்கு சென்றுவிடுங்கள்என கேட்டுக்கொண்டபடியே இருந்தார்கள். ஆனாலும் அவர் மதியம் 2 மணிவரை போராட்டத்தில் இருந்துவிட்டு பிறகுதான் வீட்டுக்குச் சென்றார். சஞ்சய் தத்துக்கு தானாக போய் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கூறிய ரஜினி இதுவரை ஈழ தமிழர்களுக்காக எந்த ஆதரவும் தந்ததில்லை. தன் படம் வரும் போதெல்லாம் ஏதாவது அரசியல் பஞ்ச் விட்டுவிட்டு படம் நன்றாக ஓடியது எதுவும் தெரியாதது போல் இருப்பது அவரது குணம். நல்ல வேளை காவிரி பிரச்சனையில் வீராவேசமாக பேசிவிட்டு பின் மன்னிப்பு கேட்டது போல் இந்த முறை எதுவும் பேசாமல் இருந்துவிட்டார்.

                                

காலையிலேயே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் கமல் மாலை 4 மணி வாக்கில் தான் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார்வந்தவர் எதுவும் பேசாமல் சக நடிகர்களுடன் பந்தலில் அமர்ந்திருந்தார்சுமார் 5 மணி வாக்கில் உண்ணாவிரதம் முடிந்ததும் முதல் ஆளாக அவர் வெளியே சென்று விட்டார். இவருடைய படத்திற்கு அரசியல் மதரீதியாக ஆபத்து வந்த போது நம் தமிழர்கள் கேரளா சென்றும் ,அவருக்கு நஷ்டம் வரும் என்றதும் பல ரசிகர்கள் செக் அனுப்பியும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.  இந்த  பிரச்சனைகள் இல்லாமல் படம் வெளியாகியிருந்தால் படம் தமிழ் நாட்டில் எந்த தியேட்டரிலும் ஒரு வாரத்திற்கு மேல் ஓடியிருக்காதுகாசை பார்த்ததும் தமிழன்    வேண்டாதவனாகி  விட்டான் இவருக்குஒரு மணி நேரம் "உண்ணாவிரதம்இருந்ததற்கு வராமலே இருந்திருக்கலாம்.



நடிகர் அஜித் மற்றும் கன்னடரான அர்ஜுன் இருவரும் ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் போராட வேண்டியதில்லை, அவர்களை நம்பி எங்கள் படம் ஓடுவதில்லை  என முன்பு அறிக்கை கொடுத்திருந்தார்கள். ஆனால் அஜித் காலில் ஒரு பிசியோதெரபி கருவியை மாட்டிக் கொண்டு அனுதாப அலையை முகத்தில் மாட்டி கொண்டு உன்னாவிரதத்திருக்கு வந்தார்.இப்போது எதற்கு தமிழனின் ஆதரவு வேண்டுமாம் அஜித்திற்கு. அஜித்தை ஒரு மனிதனாக எனக்கு பிடிக்கும். ஆனால் அவரே அவர் மரியாதையை கெடுத்து கொள்கிறார்.

நடிகர் சிம்புவும்,தனுஷும் அருகருகே உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.நடிகர்கள் ஜெய்,சிம்பு,தனுஷ் ஆகியோர் மதிய இரண்டு மணிக்குப் பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் மற்றவர்களுடன் சிரித்துப் பேசியும், கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

                               


நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி,நடிகைகள் லட்சுமிராய், த்ரிஷா ஆகியோர் 2 மணிக்குப் பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். அதிலும் நடிகை த்ரிஷா காலையில் ஒரு புதிய மேக்னம் ஐஸ்க்ரீம் பிராண்ட்டை அறிமுகப்படுத்தி ஒரு ஐஸ்க்ரீமை சப்பி சாப்பிட்டு விட்டு அதன்பிறகு நண்பகல் 3 மணி வாக்கில் தான் உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகர்,நடிகைகளின் உண்ணாவிரதப் போராட்டம் எந்தவித சூடும், சுவையும் இல்லாமல் வெறுமனே சப்பென்று தான் நடந்து முடிந்தது.


காலையில் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து விட்டு மதியம் கிளம்பி சென்றவர்களும், மதியம் இரண்டு மணிக்கு மேல் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தவர்களும் நிஜாமாகவே உண்ணாவிரதம்  இருந்தார்கள் என்று நாம் நினைக்க முடியுமா? கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது அதை மக்களிடம்  கொண்டு சென்றது " புதிய தலைமுறை " உள்ளிட்ட சில தொலைக்காட்சிகள் தான். ஆனால் இந்த நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம் இருந்த போது தமிழ் மீடியாக்கள் மட்டுமல்லாது வடஇந்திய தொலைக்காட்சிகளான NDTV , CNN போன்றவைகளும்  இருந்தன. இவர்கள் உண்ணாவிரதம் இருந்த லட்சணத்தை பார்த்து வட இந்திய  மக்களும், அரசியல்வாதிகளும் கைகொட்டி சிரிப்பார்கள். தமிழனின் மானத்தை வாங்கவே இவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்களோ?

காலையில் சாப்பிட்டுவிட்டு மதியம் 2 மணிக்குமேல் உண்ணாவிரதத்திற்கு வந்திருந்தால் அதுதான் இவர்கள் செய்யும் உண்ணாவிரதமா? லயோலா கல்லூரி மாணவர்கள் பல நாளாக  தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்கள்.அதுதான் உண்மையான அறப்போராட்டம். இவர்கள் செய்வது எல்லாம் விளம்பரம் மட்டுமே. நாம் இவர்களை நிழல் ஹீரோக்கள் என்று எண்ணாமல் நிஜ ஹீரோக்கள் என்று நினைத்ததன் விளைவுதான் இவர்கள் நம்மையெல்லாம் முட்டாளாக்குகிறார்கள்.
எதுவும் செய்யாமல் கோடிகோடியாக சம்பளம் வாங்கிவிட்டு வருமானவரி கட்டாமல் அரசை ஏமாற்றுவதும், சேவை வரி விதித்தால் அதை கட்டமுடியாது , அந்தளவு நாங்கள் வசதி இல்லாதவர்கள்,எங்கள் தொழில் நஷ்டமடையும் என ஒன்றாக சேர்ந்து கூப்பாடு போட மட்டும் தெரியும் இவர்களுக்கு. கோயமுத்தூர்,திருப்பூர் மாவட்டங்களில் வந்து பாருங்கள். இருக்கும் தொழிற்சாலை எல்லாம் எந்த நிலைமையில் உள்ளது என்று. ஆனாலும் எல்லாரும் வரி கட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். வரி விதித்ததும் இருக்கும் முதல்வருக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் இளம் நடிகைகளை ஆடவிட்டு ஏமாற்றவில்லை

இதுவரை எப்படியோ இனி உங்கள் ஆட்டம் தமிழக மக்களிடம் எடுபடாது.இது நடிகர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து கட்சி அரசியல்வாதிகளுக்கும்தான்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! 



No comments:

Post a Comment