சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Apr 2013

திருநங்கைகளின் வேதனைகடவுளால் எழுதப்பட்ட புத்தகங்கள்தான் ஆணும் பெண்ணும் .அவைகள் இரண்டும் தன் குடும்பம் , பிள்ளைகள்னு ஆனதும் சந்தோசத்துல தன்னை மறந்துடுராங்கனு கடவுளுக்கு கோவம் என்றுதான் நினைக்கிறேன் . அதனால்தான் " என்னை எதுக்குடா படைச்சே ?" அப்டின்னு வாழ்நாள் முழுவதும் தன்னையே நினைக்கணும்னு , கடவுள் தனக்காக எழுதிய மூன்றாவது புத்தகம்தான் "திருநங்கைகள்." அதைமட்டும் அவர்களே கிறுக்கிக் கொண்டதாக நினைத்து, புத்தகத்தை பெற்றெடுத்த சொந்தமே வீதியில் வீசும்போது ஏற்படும் காயத்தையும் வலியையும்புத்தகமாய் இருந்து, வீதியில் விழுந்தால்மட்டுமே முழுமையாக உணரமுடியும் - (வலியை )"

                                         

திருநங்கைகள் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் இல்லை . ஆணின் உடலில் மலர்ந்த பெண்கள் என்றுதான் சொல்வேன். கூடுவிட்டு கூடு பாய்ந்ததைப்போல் உடலுக்கும் மனசுக்கும் பொருந்தாது தவிக்கும் திருநங்கைகளின் வேதனையை திருநங்கைகளாக இருந்தால் மட்டுமே உணர முடியும் ....

ஒரு ஆணை பெண்ணின் உடையணிந்தோ இல்லை ஒரு பெண்ணை ஆணின் உடையணிந்தோ வெளியில் போகசொல்லுங்கள். அப்படி சொன்னால் அவர்களுக்கு கண்டிப்பாக வெக்கமும் கோவமும் வரும் . (உடையே இல்லாமல் போகவும் சிலர் தயாராக இருக்கிறார்கள் என்று எனக்கும் தெரியும். நாகரீக வளர்ச்சியை இங்கு பேசவேண்டாம் )
"
கழட்டிபோடும் துணியைகூட அணிய நம் மனம் கூசும்போது . ஒரு பெண், கழட்டவே முடியாத ஒரு ஆணின் உடலை சுமந்துக்கொண்டு ஆயுசு முழுக்க சுத்தினால் எப்படிக்கூசும் ?எவ்வளவு வேதனை இருக்கும் ?"

தன்னுடைய மகன் பெண்ணாக மாறுவதை எந்தத் தாய், தந்தையாலும் தாங்கமுடியாத ஒன்றுதான். அந்தநிலை எந்தக் குடும்பதுக்கும் வரக்கூடாது. திருநங்கைகளாக மாற திருநங்கைகளே விரும்புவதில்லை. அதுதான் உண்மை. தான் ஒரு பெண்தான் என நிருபிக்க முடியாமல் தற்கொலை நிலைக்குகூட போகிறார்கள் .அதையும் தாண்டி குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்டு, வாழவேண்டும் என்ற பயணத்தின் முதல் தேவை என்னதெரியுமா? மனம் பெண்ணாக இருந்தாலும் உடல் ஆணாக இருந்தாலும் வயிறு ஒன்றுதானே ? , பசி ஒன்றுதானே? அந்த நிலையில் காட்டப்படும், அல்லது தேர்ந்தெடுக்கப்படும் வழிகள்தான் யாசித்தலும் பாலியல் தொழிலும். படிப்பறிவும் சரியான வழிக்காட்டிகளும் இல்லாதவர்களே இந்த நிலைக்கு போகிறார்கள் . இப்போது இந்தநிலை குறைவு என்றுதான் சொல்வேன் இதை வைத்து ஒட்டுமொத்த திருநங்கைகளையும் நாம் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்தல் தவறு .


"
ஆணோ , பெண்ணோ , இல்லை திருநங்கயோ ஒருவரின் தனிமனித ஒழுக்கத்தை அவரவரின் மனசாட்சி மட்டுமே துல்லியமாய் சொல்லமுடியும் ..."

                               

நான் சிறுவயதில் பார்த்த திருநங்கைகள் . கைகளை தட்டி காசுவாங்குவார்கள். ஒரு விசித்திரமாய் இருப்பார்கள். அதற்க்கு காரணம் அறியாமையும் குடும்ப , சமுதாயத்தின் ஒதுக்குதலுமே காரணம். பசங்கலாம் அவர்களை கேலி செய்திருக்கிறோம் அதற்க்கு காரணமும் எங்களின் அறியாமைதான்,
ஆனால் இப்போது நகரத்தில் இருக்கும் திருநங்கைகள் அப்படியில்லை தன்னம்பிக்கையும் படிப்பறிவும் பெற்றவர்களாக இருக்கிறார்கள் . நான் இங்கு பார்ப்பவர்கள்கூட திருநங்கைகள் என்று அவர்களே சொன்னாலும் நம்பமுடியாத அளவுக்கு அழகும் திறமையும் உள்ளவர்களாகவும் உயர் பதவியில் வேலைபார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள் குரல் கூட அவளவு இனிமையாக இருக்கும்.

நம் முக அழகை அழகுப்படுத்த கண்ணாடியைக்கூட அழவைக்கும் அளவுக்கு நேரமெடுக்கிறோம் . " நாம் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா ? ஒவ்வொரு திருநங்கையும் தன் உடலை முழுப் பெண்ணாக மாற்ற மருத்துவ ரீதியாகவும் ஒப்பனைகளாலும் எப்படி தன்னை வருத்திக்கொள்கிறார்கள் என்று ?"

இந்தப்பதிவின் நோக்கம், திருநங்கைகளுக்காக ஆதரவு திரட்டியோ இல்லை திருநங்கைகளுக்கு வாழ்க்கை குடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தோ இல்லை அவர்களுக்கும் நம்மைபோன்ற ஒரு மனம் உண்டு அதை அவர்கள் குடும்பத்தார் முதலில் புரிந்துகொள்ள வேண்டுமென்றும்தான். கடைசிகாலங்களில் தன் பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்களுக்கு திருநங்கைகள் பிள்ளைகளாக இருந்தால் நிச்சயம் அவர்களை கைவிடமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு என்று குடும்பமோ பிள்ளையோ வரப்போவதில்லை அவர்களின் குடும்பம் அவர்களின் பெற்றோர்களே. அதனால் நிச்சயம் காப்பாற்றுவார்கள் .

திருநங்கைகள் சுயமாக சம்பாதித்து வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இந்த புகைபடத்தில் இருக்கும் வைஷ்ணவி . இவர் சென்னையில் ஆட்டோ ஒட்டி சுயமாக சம்பாதிக்கிறார் .

                                            

"
இந்த பிரபஞ்சத்தில் மனித எண்ணங்களுக்குள் ஒரு தொடர்பு உண்டு என்பதை இதுபோல் நிகழ்வுகள் உணர்த்தும் - (நம்புபவர்களுக்கு மட்டும் )

தன்னிடம் இருப்பது மூன்றாவது புத்தகம் என்றுதெரிந்து வீதியில் எறிந்த ஒரு பெற்றோராவாது இதை படிக்க நேர்ந்தால் ...

"
நீங்கள் வீதியில் எறிந்தப் புத்தகத்தை திரும்ப வீட்டுக்கு எடுத்துவர சொல்லவில்லை , பிரித்து வாசிக்ககூட சொல்லவில்லை. ஒரே ஒருமுறை வீதியிலேயே வைத்து அந்தப் புத்தகத்தை உங்கள் மார்போடு சாய்த்து, உங்கள் கைகளால் அனைத்துப் பாருங்கள் . உங்கள் கருணைக்கு காணிக்கையாய் புத்தகத்தின் கண்ணீர்த்துளிகள் உங்கள் மார்பை நனைக்கும் ..."

அதுபோதும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்...

No comments:

Post a Comment