சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Apr 2013

ஐ.பி.எல். சீசன். - ஒரு கலகல டிரெய்லர்


ரம்பமாயிடுச்சு .பி.எல். சீசன். அரசியல்வாதிகளும் புதுவிதமான .பி.எல். போட்டியில் களமிறங்கினால் எப்படி இருக்கும் என்று ஒரு கலகல டிரெய்லர் .

அம்மா ஆக்ஷன் ராக்ஸ்:
இந்த அணி ஏறக்குறைய 1990-களில் சச்சினை மட்டுமே நம்பி இருந்த இந்திய அணி போல. வெற்றி, தோல்வி எல்லாவற்றுக்குமே அம்மாதான் பொறுப்பு. இவரது அணியில் எல்லோருமே ஆல்ரவுண்டர்கள்தான். தலைவி பந்து வீசச் சொன்னால், வீச வேண்டும். பேட்டிங் பிடிக்கச் சொன்னால், பிடிக்க வேண்டும். இந்த முறை இந்த அணிக்கு சியர் கேர்ள்ஸ், ஸாரி, சியர் பாய்ஸ் ஆக ஆடப்போகிறவர்கள் சரத்குமார் மற்றும் தா.பாண்டியன்!

கழகக் கட்டுமரக் காளையர்கள்:
இந்த அணியின் தலைமைப் பதவிக்குப் பலத்த போட்டி இருந்தாலும், அனைத்தையும் தனது அசாதாரண நடவடிக்கைகளால் முறியடித்து  அப்பரசண்டிகள் லீக் வரலாற்றில் அதிக முறை கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார் அணியின் தலைவர் கலைஞர். 15 பேர் கொண்ட அணியில் 10 பேர் நிரந்தரமாக இடம் பிடித்திருப்பார்கள். அணியில் இடம் இல்லாத சிலருக்கு கிரவுண்டிலும் சிலருக்கு இதயத்திலும் இடம் வழங்கப்படும். சென்ற முறை கோப்பையைப் பறிகொடுத்ததால், இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தாலும் கிரிக்கெட் கிரவுண்டிலேயே காலை வாரி அழகிரி கபடி விளையாடுவது சிக்கல்தான். இந்த அணியின் சியர் பாய்ஸ் வீரமணி, சுப.வீரபாண்டியன் மற்றும் திருமாவளவன்!

வால்ட்டர் வாக்மேன் வாரியர்ஸ்:
தனது அணியைத் தவிர மற்ற அணிகளுக்கு ஏதேனும் ஒன்று என் றால், ஓடோடி உதவும் பெருந்தன்மைகொண்டவர் இந்த அணியின் கேப்டன் வைகோ . ஆடுகளத்தில் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதும் எதிராளி தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சரியான தருணத்தில் தவறான முடிவெடுப்பதும்  வாரியர் அணித் தலைவரின்  மிகப் பெரிய மைனஸ். ஆடுகளத்தில் இந்த அணியினர் நடப்பதே ஓடுவதுபோல்தான் இருக்கும். அதனால், ஃபீல்டிங்கில் கில்லியாக இருந்தாலும் ஒரு சில வீரர்கள் கார் ஹார்ன் சத்தம் கேட்டால், மைதானத்தை விட்டே வெறித்தனமாக ஓடுவதால், அணியின் பலம் மிஸ்ஸிங். இவர்களுக்கு சியர் கேர்ள்ஸ் கிடையாது. அந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொண்ட அணித் தலைவர் அவ்வப்போது சோகப் பாடல்களைப் பாடி, அணியை உற்சாகப்படுத்துவார்!

தைலாபுரம் தடாலடி சேலஞ்சர்ஸ் :
மற்ற அணியினரை வம்புக்கு இழுப்பதை விட்டுவிட்டு, அணியின் தலைவர் தன் அணியை முன்னேற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தால் ஒழிய, இந்த அணியை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்த அணியின் சியர் பாய் காடுவெட்டி குரு அவ்வப்போது டெரர் பெர்ஃபார்மன்ஸ் காட்டுவ  தோடு, எதிர் அணியின் பந்தையும் எடுத்துக்கொண்டு ஓடுவதில் சூரர்!

சொதப்பல் சொக்கத் தங்கம் சண்டியர்ஸ் :
இந்த அணியின் கேப்டன் பெயரே கேப்டன்தான். பந்து வரும்போது பக்க வாட்டில் உள்ள ஸ்டம்ப் மீது ஒரு காலை வைத்து பந்தை எகிறி அடித்தால் பந்து ஸ்டேடியம் அப்பால் விழும். கூட இருந்தால் அடி விழும் என எச்சரிக்கையாக இருப்பதற்காக, கேப்டனை விட்டு வெகு தொலைவில் வீரர்கள் ஓடுவதால் எளிதில் கிடைக்க வேண்டிய வெற்றி கூட எட்டாக் கனியாகி விடுகிறது. ஆடுகளத்தை போர்க்களம் ஆக்கும் சக்தி கேப்டனுக்கு உண்டு. நாக்கை மடித்து இவர் 'ஏய்ய்ய்ய்என அடிக்கடி சவுண்டு விடுவதால், எந்த சியர் கேர்ள்ஸும் சியர் பாய்ஸும் சீக்கிரத்தில் நெருங்க முடியாது!

கள்ளாட்டம் கோஷ்டி கானா சிங்கர்ஸ் :
இந்த அணி மிகவும் சிக்கலானது. கேப்டன் பதவிக்கு மட்டுமே கிட்டத்தட்ட 15 பேர் போட்டியில் உள்ளனர். அணியை இறுதிப்படுத்தி அறிவிப்பதற்குள் பலர் சட்டை கிழிந்திருக்கும். எதிர் அணியினர் அவுட் செய்கிறார்களோ இல்லையோ, ஆனால், அடிக்கடி தங்கள் சொந்த அணியாலேயே அவுட் ஆகும் வீரர்கள்தான் அதிகம். எவ்வளவு முறை சட்டை கிழிந்தாலும் 'சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு?’ என சமாளிப்பதில் வல்லவர்கள். இவர்களின் என்டர்டெயின்மென்டுக்கு இப்போது இருக்கும் ஒரே சியர் பெரிசு நாராயணசாமி!

ன்றி  வின்

No comments:

Post a Comment