சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Apr 2013

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் நம்ம நாராயணசாமி. 

ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . . 

1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது? 
a)116 b)99 c)100 d)150

முதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், நாராயணசாமி இதை choiceஇல் விட்டு விட்டார்.

2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன?
a)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்

நாராயணசாமி நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார்.

3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்?
a)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்

நாராயணசாமி மக்கள் கருத்தைக்கேட்டு விடையளித்தார்.

4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)?
a)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்

நாராயணசாமி 50-50 சான்ஸ் எடுத்தார்.

5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் "கானெரித் தீவு", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?
a)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி

நாராயணசாமி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

நாராயணசாமி முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிக்கிறீர்களா? அப்படியானால் கொஞ்சம் கீழே போங்கள்.

. .


. .


. .


. .


. .


. .

சரியான விடைகள் :

1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.
2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.
5) பப்பி. "இன்சுலாரியா கானெரி" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு'(பப்பிக்கு சரியான தமிழ் வார்த்தை என்னப்பா?) என்று அர்த்தமாம்.


இப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள்?

இனிமேலாவது நாராயணசாமியை முட்டாள் என்று நினைக்காதிருங்கள்...ஹி...ஹி



No comments:

Post a Comment