சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Apr 2013

டி.கே.இராமமூர்த்தி - இசைச்சக்கரவர்த்தி


 டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி 1922 - 17 ஏப்ரல் 2013) இசையமைப்பாளர் மற்றும் வயலின்  கலைஞர். இவரும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 ஆம் வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விஸ்வநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.




சாது மிரண்டால், தேன்மழை, மறக்கமுடியுமா உள்ளிட்ட 19  படங்களுக்கு தனியாகவும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் இணைந்து 700 படங்களுக்கு மேலும் இசை அமைத்துள்ளார்
இரட்டையர்களாக இசையமைக்க ஆரம்பித்த போது மூத்தவரான ராமமூர்த்தி அவர்களின்  பெயரே முதலில் வரவேண்டும் என்று விரும்பினார் எம்.எஸ்.வி. அவர்கள். ஆனால், "விஸ்வநாதன் ராமமூர்த்தி" என வரும்போதுதான் அழகாக, உச்சரிக்கச் சுவையாக இருக்கிறதென்று கலைவாணர் என்.எஸ்.கே. கேட்டுக்கொண்டதற்கிணங்க - அடக்கமாக விட்டுக் கொடுத்த பெருந்தகை.

இவர் கைகளில் வயலினும், தபேலாவும் களிநடம் புரிவதைப் பார்த்து அசந்து போனவர்கள் ஏராளம் பேர். மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் வயலினும், தபேலாவும் தனியாகத் தெரிகிறதென்றால், அந்தப் பெருமை இவருக்கே.

காலமும், சூழ்நிலையும் பிரித்து வைத்தாலும், எந்த இடத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் இவர் எம்.எஸ்.வி. அவர்களைக் குறை சொன்னதுமில்லை, விட்டுக் கொடுத்ததும் இல்லை. அதேபோல் எம்.எஸ்.வி. அவர்களும் இவரை, இவரின் அசாத்திய திறமையை வாயாரப் புகழத் தவறியதே இல்லை.

இவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த காலம், தமிழ்த் திரை இசை உலகின் பொற்காலம். அந்தக் காலத்தில் வாழ்ந்து, இவர்களின் இசையை ரசிக்க, அனுபவிக்கக் கொடுத்து வைத்த அனைவரும்  உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள் என்பதில் ஐயமில்லை.

                            

"
" வரிசை, "" வரிசை, "" வரிசை என்று இவர்கள் இசையில், மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன் உட்பட அனைத்துக் கலைஞர்களின் படங்களும் வெற்றிக்கொடி நாட்டியதற்கு இவர்களின் இசை உறுதுணையாக, அச்சாணியாக இருந்ததை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

அப்படிப்பட்ட இரட்டையர்களில் மூத்தவரான ராமமூர்த்தி அவர்களை, எம்.எஸ்.வி. அவர்களிடம் இருந்து பிரித்து வேடிக்கை பார்த்து, நம்மை கலங்க வைத்த காலம், இன்று நம் எல்லோரிடமும் இருந்து அவரைப் பிரித்து அழவும், ஏங்கவும் வைத்துவிட்டது.

பிறப்பும், இறப்பும் இயற்கைதான் என்றாலும், நம்மை ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சிப்படுத்தியவர்கள் நம்மை விட்டுப் பிரியும்போது ஏற்படும் ரணம் இலேசாக மாறக் கூடியதல்ல. அதேவிதமாய், வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததைப்போல், பி.பி.எஸ். அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த ரணம் ஆறுமுன்னே காலம் அந்த ரணத்தை இன்னும் மோசமாக்கி நம்மை சோதிக்கிறது.

தமிழ் இசைக்கு மெருகூட்டி, உலகம் உள்ளவரை நினைவில் இருக்கச் செய்த இவர்கள் நம் இதயங்களில் என்றும் வாழ்வார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் நன்றிக் கடன் பட்டிருக்கும், அமரர் ராமமூர்த்தி அவர்களுக்கு கண்ணீரால் அஞ்சலி செய்து, அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் .

No comments:

Post a Comment