சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Apr 2013

சைதன்யா - சாதனை சிறுமி


ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த 8 வயது சிறுமியின் சாதனை..!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்த ஆரம்பித்தால் அடிக்க வருவீர்கள். காரணம், தமிழ் வாசகர்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். தரமாகவும், அதேசமயம் பரந்துபட்ட வாசகர்களுக்கு புரியும்படியும் எழுதுவதில் அவருக்கு நிகர் அவர்தான். தமிழ்ச் சிறுகதை உலகில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பவர். அவர் அளவுக்கு தமிழில் சிறுகதைகள் எழுதியவர், எழுதி வருபவர் யாருமில்லை.

                                  


அப்படிப்பட்டவரின் எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பலரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சிறுவர்களுக்காக அவர் எழுதியகால் முளைத்த கதைகள்சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது பாருங்கள்... அது சம்திங் ஸ்பெஷல். காரணம், இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்திருப்பவர் சைதன்யா. இவருக்கு வயது, அதிகமில்லை எட்டுதான்! மூன்றாம் வகுப்புதான் படித்து வருகிறார்.

தன் தங்கை தேஜாஸ்ரீயுடன் விளையாடியபடியே மழலை மாறாமல் பேசுகிறார் சைதன்யா. ‘‘எனக்கு புக்ஸ் படிக்க ரொம்பப் பிடிக்கும். அதுக்கு அப்பாதான் காரணம். டிவி பார்க்கிற நேரத்துல புக்ஸ் படிக்கச் சொல்லுவாரு. அதே நேரம், நல்ல புரோக்ராம் வந்தா அதையும் பார்க்கச் சொல்வார். காமிக்ஸ்தான் முதல்ல படிக்க ஆரம்பிச்சேன். படங்களோட கதை சொல்ற விதம் ரொம்ப பிடிச்சிருந்தது. அப்புறம் ஆங்கிலத்துல சின்னச் சின்ன கதைகளை படிக்கத் தொடங்கினேன். 

ஸ்கூல்ல தமிழ் பாடம் வர ஆரம்பிச்சதும் அப்பா, தமிழ்க் கதைகளை படிக்கத் தந்தாரு. அரிச்சந்திரன் கதை, பஞ்சதந்திர கதைகள்னு எதையும் விட்டு வைக்கலை. அப்பதான் ஒருமுறை எஸ்.ராமகிருஷ்ணன் அங்கிள் எழுதினகால் முளைத்த கதைகள்தொகுப்பை அப்பா வாங்கிக் கொடுத்தாரு. சாதாரணமா படிக்க ஆரம்பிச்ச நான், அப்படியே அசந்து போயிட்டேன். ஒவ்வொரு கதையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லாமே குட்டிக் குட்டிக் கதைகளா... கேப் விடாம படிச்சு முடிச்சேன்.

அந்த புக்கை முடிச்ச பிறகும் கதைகள் எனக்குள்ளயே இருந்தது. அதனால லீவ் நாள்ல சும்மா எழுதிப் பார்க்கலாம்னு ஒரு கதையை இங்கிலீஷ்ல டிரான்ஸ்லேட் பண்ணி அப்பாகிட்ட காட்டினேன்... “ஏய் தேஜூ ஓடாத...’’ என்றபடி தன் தங்கையை நோக்கி சைதன்யா ஓட, மகளை பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் வினோத். ‘‘முப்பது வயசு வரை புக்ஸ் படிக்கிறதுல எனக்கு பெரிசா ஆர்வம் இருந்ததில்லை. 

வேலைக்காக அமெரிக்கா போயிருந்தேன். அப்ப கடுமையான குளிர்காலம். வீட்டை விட்டு எங்கயும் நகர முடியாத நிலமை. வேற வழியில்லாம புக்ஸ் படிக்க ஆரம்பிச்சேன். நல்ல புத்தகங்களை படிச்சா வாழ்க்கையை புரிஞ்சுக்க முடியும்னு அனுபவப்பூர்வமா உணர்ந்தேன். சொல்லப்போனா புத்தகங்கள்தான் வாழ்க்கைக்கான வழிகாட்டியே.அதனால என் பொண்ணுக்கு சின்ன வயசுலயே படிக்கிற ஆசையை தூண்டிவிட்டேன். 

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதின கதையை சைதன்யா ஆங்கிலத்துல டிரான்ஸ்லேட் பண்ணி என்கிட்ட காண்பிச்சதும் சந்தோஷமா இருந்தது. சின்னச் சின்ன இலக்கண பிழைகள் தவிர, மத்தபடி ரொம்ப சரியா மொழிபெயர்த்திருந்தா. ஆனாலும் இதை நான் பெரிசா நினைக்கலை. ‘இன்னும் பத்து கதைகள் பண்ணுமானு சொல்லிட்டு விட்டுட்டேன். ஆனா, ஒரு வாரத்துல பத்து கதைகளை டிரான்ஸ்லேட் பண்ணி சைதன்யா காண்பிச்சப்பதான் எனக்குள்ள பொறி தட்டுச்சு.

எழுத்தாளர் ஜெயகாந்தன்கிட்ட காட்டினேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். ‘மொத்த கதைகளையும் பண்ணச் சொல்னு தட்டிக் கொடுத்தார். சைதன்யாவும் அதே மாதிரி செஞ்சு முடிச்சா. அதை எஸ்.ராமகிருஷ்ணன்கிட்ட காண்பிச்சேன். மகிழ்ச்சியில அவர் துள்ளிக் குதிச்சார்.‘குழந்தைகளுக்காக நான் எழுதின கதைகள், ஒரு குழந்தையாலயே ஆங்கிலத்துல மொழிபெயர்க்கப்பட்டிருக்கு. 

இதை விட சிறந்த பரிசோ, விருதோ வேற எதுவும் இல்லைனு சொல்லி அந்த டிரான்ஸ்லேஷனை அப்படியே தூக்கிவம்சி பதிப்பகத்திடம் கொடுத்தாரு. அவங்க, ‘நத்திங் பட் வாட்டர்என்ற பேர்ல அந்த மொழிபெயர்ப்பை கொண்டு வந்திருக்காங்க...’’ என்று வினோத் சொல்லி முடிக்கவும் சைதன்யா வரவும் சரியாக இருந்தது.‘‘தமிழ், இங்கிலீஷ், மலையாளம் எனக்கு தெரியும். 

இந்த மூணு மொழியிலயும் பேசவும், எழுதவும் செய்வேன். ஸ்கூல்ல தமிழ், இங்கிலீஷை கத்துக் கொடுத்தாங்க. மலையாளத்தை எங்கம்மா சொல்லித் தந்தாங்க. மூணு லேங்வேஜ் புக்ஸையும் அப்பா வாங்கிக் கொடுப்பாரு. ஆனா, இங்கிலீஷ்ல எழுதறதுதான் ஈசியா இருக்கு...’’ என்று சிரிக்கும் சைதன்யா, பாட்டு, கராத்தே, ஓவியம் ஆகியவற்றிலும் புலியாம்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment