விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி இப்போது அதிகம் பார்க்கப்படுகிறது. விஜய் டிவி ஆரம்ப காலங்களில் பல புதிய நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து ( அதுவும் பல ஹிந்தி சேனல்களில் வரும் சில நிகழ்ச்சிகளை காப்பி அடித்து தான் )ஒரு ட்ரென்ட் செட்டர் என்ற பெயரை மக்கள் மத்தியில் உருவாக்கியது. விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1, கலக்க போவது யாரு? , உங்களில் யார் பிரபுதேவா , சூப்பர் சிங்கர், தமிழ் பேச்சு, பட்டிமன்றத்தையே சிறிது மாற்றங்கள் செய்து கோபிநாத்தின் நீயா? நானா? போன்ற நிகழ்ச்சிகள் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியது.
சில வருடங்கள் முன்பு சன் டிவியில் டீலா? நோ டீலா? என்ற நிகழ்ச்சி தொடங்க பட்டது.அப்போது முதல் இரண்டு மூன்று எபிசோடுகள் கொஞ்சம் வசதியானவர்கள் விளையாடினார்கள். அடுத்து வந்த எபிசோடுகள் முழுவதும் கீழ்த்தட்டு மக்கள் தான் வாய்ப்புகளை பெற்றனர். அப்பா அம்மா இல்லாத ஒரு பெண் தன் தங்கையை படிக்க வைப்பதற்காகவும், இன்னொருவர் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஒரு பெரியவரும் பங்கேற்றது எனக்கு நினைவில் உள்ளது. அதில் எனக்கு தெரிந்து எந்த பிரபலமும் போட்டியில் கலந்து கொண்டதில்லை. அதனால் அந்த நிகழ்ச்சியின் டீஆர்பி ரேட்டிங்கும் சரிந்ததில்லை. ஒரு பணப்பரிசு கொடுக்கும் விளையாட்டு நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற சிறு உதவி செய்தது சன்டிவி.
சில பேர் கேக்கலாம். அவர்களுக்கு லாபமில்லாமல் எந்த நிகழ்ச்சியை நடத்த மாட்டார்கள்.அதில் பல மடங்கு லாபம் வந்திருக்கும். அது எனக்கும் தெரியும். சன்டிவி மட்டுமல்ல மற்ற எந்த சேனலும் லாபமில்லாத சேவை செய்ய அவர்கள் நிகழ்ச்சி நடத்தவில்லை. அனைத்து சேனல்களும் நொடிக்கு இத்தனை ஆயிரம் என்று லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் கஷ்டபடுபவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது சன்டிவிதான்.
ஆனால் ட்ரென்ட் செட்டர் என்றும் தமிழக தொலைக்காட்டசிகளுக்கு எல்லாம் தான் தான் தலைவன் என்று தன்னை தானே சொல்லி கொள்ளும் விஜய் டிவி
( " ஒரு வழியை உருவாக்கி அனைவருக்கும் முன்னே செல்பவன் தலைவன் " அதை விஜய் டிவி சிறப்பாக செய்கிறது -# இது ஒரு நிகழ்ச்சியில் விஜய் டிவியை பற்றி கோபிநாத் சொன்ன வரிகள் ) என்ன செய்கிறது.
பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் சரத்குமார் நடத்திய " கோடிஸ்வரன் " ( பஞ்ச் டையலாக் நான் ரெடி? நீங்க ரெடியா? ) நிகழ்ச்சியைத்தான் இப்போது " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி " நிகழ்ச்சியாக நடத்துகிறது விஜய் டிவி. போன சீசனில் அனைத்து தரப்புக்கும் பிடித்த சூர்யா நிகழ்ச்சியை நடத்தினார்.இந்த நிகழ்ச்சி வெற்றி பெற சூர்யா முக்கிய காரணம். அப்போதும் சரி இப்போதும் இப்போதும் சரி நடுத்தர , மற்றும் வசதி படைத்த மக்கள்களே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு பெறுகிறார்கள்.
ஆடிட்டர், சாப்ட்வேர் இஞ்சீனியர், மெடிக்கல் ஸ்டுடென்ட் , என வசதி படைத்த சிட்டியிலுள்ளவர்களே வாய்ப்பு பெறுகிறார்கள். அப்படியும் சில கஷ்டப்படும் ஏழை மக்கள் வாய்ப்பு பெற்றாலும் ஹாட் சீட் செல்வது கிடையாது. இங்குதான் இருக்கிறது விஷயம். குறைவான நேரத்தில் பதில் அளிப்பது யார் என்று அவர்கள் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும். முன்னேற்பாடாக ஒருவரை ஹாட் சீட்டிற்கு கொண்டு செல்ல முடியாதா?
இதையெல்லாம் விட ஒரு கேள்வி எனக்கு இருக்கிறது. ஏழை மக்கள் என்றால் படிப்பறிவில்லாதவர்கள், பொது அறிவு , கேள்வி அறிவில்லாதவர்கள் என்பது விஜய் டிவியின் நினைப்பா? என்பது தெரியவில்லை. சரி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் முழுவதும் மக்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே..! அதை விட்டு விட்டு சினிமா பிரபலங்களை அழைப்பது எதற்காக? அவர்களும் எதாவது ஒரு நல்ல விஷயத்திற்கு உதவ தான் பங்கேற்கிறார்கள். ஆனால் அவர்கள் போட்டியில் பங்கேற்று அதில் வரும் பணத்தை கொடுப்பார்களே தவிர தங்கள் உழைப்பால் சம்பாதித்த பணத்தை யாருக்கும் தரமாட்டார்கள்.
தற்போது எல்லா சேனல்களிலும் ஒரே அழுகை சீரியல்கலாகவே ஓடிகொண்டிருக்கும் பொது விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகள் மக்களை கவர்கின்றன. ஆனால் சில நிகழ்ச்சிகள் விஜய் டிவியின் மீதான நம்பகத்தன்மையை குலைக்கின்றன. அவை
1) கல்லூரி மாணவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற மாணவர்களை எங்கே பிடித்தார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற மாயை உருவாக்கினார்கள். வாய்சொல் வீரர் கோபிநாத் எவ்வளவு பேசமுடியுமோ பேசினார்.
சில நாட்களில் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர்களுக்காக போராட்டத்தில் இறங்கினர். அப்போது விஜய் டிவியும் , கோபிநாத்தும் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.
2) அதே போல சாதியை மையபடுத்தி ஒரு நிகழ்வு நடந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவாக மட்டுமே கோபிநாத் பேசினார். ஏனென்றால் அந்த சமூகத்தினரை தான் கிறிஸ்துவர்களாக மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள் கிறிஸ்துவர்கள். நீயா? நானா?வின் இயக்குனர் ஆண்டனி ஒரு கிறிஸ்துவர். மற்றதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
3) இது போல பல ரியாலிட்டி ஷோக்களில் ஒருவரை மேலே கொண்டு செல்வதும், ஒருவரை மிகவும் கேவலப்படுத்துவதும் பல நேரங்கள் நடந்துள்ளது. அங்கேயே பலபேர் முன்னிலையில் நீ அப்படி பண்ணல, இப்படி பாடியிருக்கலாம், இந்த ஸ்டேப் இப்படி போட்டுருக்கலாம் என சொல்பவர்கள் ஒரு வரியை ஒன்பதுமுறை பாடியும் ஒழுங்காக பாட முடியாதவர்களும், ஆடத் தெரியாமல் ஆடி காலை ஒடித்து கொண்டவர்களும் தான்.
இப்படி பல விதமான சூழ்நிலைகளில் தான் விஜய் டிவி ஓடிக்கொண்டிருக்கிறது. எது எப்படியோ இவர்கள் காட்டும் கண்ட கருமங்களையும் தான் நாம் பார்த்து தொலைக்க வேண்டியது இருக்கு.
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..!
மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக
முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
No comments:
Post a Comment