சமையல் "காஸ்' சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு, 4,000 ரூபாய்வரவு வைக்கப்படும்.
வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், சமையல் "காஸ்' சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு, 4,000 ரூபாய், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதன் மூலம், சமையல் காஸ் மானியத்தை முறைப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், சமையல் "காஸ்' சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு, 4,000 ரூபாய், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதன் மூலம், சமையல் காஸ் மானியத்தை முறைப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசின், மானிய பலன்கள் மற்றும் நிதியுதவி அனைத்தும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வகை செய்யும், "உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்திற்கு, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இடைத்தரகர் தொல்லையில்லை:உணவு, உரம், எரிபொருள் மானியங்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை போன்ற, அனைத்து விதமான பணப்பலன்களையும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுமானால், இடைத் தரகர்களால், சுரண்டல் இருக்காது என்பது மத்திய அரசின் எண்ணம்.அந்த வகையில், "ஆதார்' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள, 32 கோடி பேரில், 80 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் மட்டுமே, "ஆதார்' அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இப்பணியை துரிதப்படுத்தினால், இவ்வாண்டு அக்டோபர் முதல், சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
எனவே, ஆதார் அடையாள அட்டை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, அந்த அட்டையுடன், வங்கிக் கணக்கையும்இணைக்க, பொதுத் துறை வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், 14 கோடி பேர், சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு, சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம், ஆண்டுக்கு, 4,000 ரூபாய், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.மொத்தமாக வழங்கப்படுமா? மாதந்தோறும் வழங்கப்படுமா? எந்த தேதியில் வரவு வைக்கப்படும், போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. அடுத்த மாதம், 15ம் தேதி, 20 மாவட்டங்களில், சமையல் காஸ் சிலிண்டர் மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது. அதையடுத்து, படிப்படியாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.
மொத்த விலை கொடுக்கணும்:அத்தகைய நிலையில், சமையல் காஸ் சிலிண்டரின் மொத்த விலையை, வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டி இருக்கும். அதாவது, ஒவ்வொரு முறை சமையல் காஸ் சிலிண்டர் மாற்றும்போதும், அதன் மொத்த விலையை கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர்கள் மானியத்துடன் வழங்கப்படுவதால், அதற்கான மானியத்தொகை, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதுபோல, பிற மானியங்கள் மற்றும் உதவித் தொகைகளும் வரவு வைக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம், பெட்ரோலியத் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் துணைத் தலைவர், மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர், சந்தித்து பேசி உள்ளனர்.
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..!
மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக
முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
No comments:
Post a Comment