சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Apr 2013

அன்பு வாழ்க்கைக்குத் தேவையான மஞ்ச தந்திரங்கள்.....


கணவன் மனைவி உறவு என்பது மிகவும் உன்னதமானது.அந்த காலத்தில் நம் முன்னோர்கள் .. தனக்குப்பிடிக்காத துணை தன் வாழ்வில் இணைந்துவிட்டாலும்…. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். அல்லது பிடிக்காத துணையை நேசிக்கக் கற்றுக்கொண்டர்கள்.

                       

அவர்களுக்குள்ளேயும் சண்டைசச்சரவுகள் கண்டிப்பாக வந்திருக்கும், ஆனால் தன் குழந்தைகளின் நலனையும் எதிர் காலத்தையும் நினைத்து அனுசரித்துச் சென்றதால்,..பிள்ளைகள் பேரன் பேத்திகள் எடுத்து குடும்பத்தோட சந்தோஷமா வாழ்ந்தார்கள்…..!.
 


அதனால் தான் நாமும்தாய், தந்தை, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்ற உறவுகளோடு சேர்ந்து வாழ முடிந்தது……. அப்படி உறவுகளோடு வளர்ந்த நாம், நம் பிள்ளைகளுக்கு அந்த ஒரு அன்பான சூழலை அமைத்துக்கொடுக்க முன்வருவதில்லை என்பது தான் வேதனை.
சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு விவாகரத்து வரை போய்விடுகிறோம்.

மேலும் இன்றைய கலாச்சாரத்தில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

இந்தப்பிரிவு ஏன் வருகிறது? காரணம் ஈகோ என்று பலரும் சொல்வாங்க. கண்டிப்பா இல்லிங்க. அதிக அன்பு இருக்குமிடத்தில் ஈகோவுக்கு இடமே இல்லை. இரு உள்ளங்களுக்கிடையே நல்ல புரிதல் வரும்போது அன்பு தானா வரும். அன்பு வந்தா விட்டுக்கொடுத்தலும், பொறுத்துப்போறதும் கூடவே வரும்.

இந்தப் புரிதல் ……..இதப்பத்தி தாங்க இப்ப பார்க்கப்போறோம்.

ஆண்களுக்கு :-

முதல் விஷயம், வீட்டுக்குள்ள நிழையும்போது செருப்பைக்கழட்டி வாசல்லயே விட்டுட்டு வரமாதிரி அலுவலகப் பிரச்சனைகளையும் வெளியவே விட்டுட்டு வரணும். வீட்டுக்குள்ளக் கொண்டு வரக்கூடாது.

                      

இரண்டாவது…..மனைவிகிட்ட நிறைய நேரம் மனசுவிட்டுப் பேசுங்க. மனைவி சொல்லுறதை காதுகுடுத்துக் கேளுங்க. அவங்க செய்யிற சின்னச்சின்ன விஷயங்களையும் பாராட்டித் தட்டிக்குடுங்க. காலைல இருந்து மாலை வரை என்ன நடந்துதுன்னு எல்லாத்தையும் பகிர்ந்துக்கோங்க. அதே மாதிரி வீட்டுல அவங்க முழு நேரமும் என்ன பண்ணாங்கன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க. இந்தப் பகிர்தல் நல்ல உறவுக்கு உரமா அமையும்.

(
இப்படிப் பகிர்தல் இல்லாத போதுதான் ……எந்த ஒரு ஆணும் பெண்ணும் வேறு துணையையோ, நட்பையோ நாடிப்போறாங்க. அதுக்கு ஒரு போதும் இடம் கொடுக்கக்கூடாது…….. இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்)
மூன்றாவது…….. முக்கியமா வீட்டில் இருக்கும்போது பெண் நண்பிகள்கிட்ட போனில் பேசவே பேசாதிங்க. என் மனைவி நல்லவ புரிஞ்சிக்குவா இந்த கதையே வேண்டாம்.

(
சில நேரம் மனைவிகிட்ட சரியா பேச முடியாமல் போனால்…… உங்க ஃப்ரெண்டுகிட்ட எல்லாம் பேச நேரமிருக்கும் என்கிட்ட பேச நேரமிருக்காதேன்னு, என்னைக்கோ நீங்க உங்க தோழிகிட்ட பேசினதை குத்திக்காட்டலாம்)

நான்காவது……..உங்க வருமானம், செலவு, சேமிப்புன்னு எல்லா விபரங்களையும் மனைவியிடம் சொல்லி டைரியில அவங்க கையாலயே எழுத வைங்க.

பட்ஜெட்ல துண்டு விழுந்தா எப்படி சமாளிக்கலாம்னு அவங்க கிட்டயே சஜஷன் கேளுங்க. இதனால தன் கணவன் பல பொருப்பான விஷயங்களை தன்கிட்ட பகிர்ந்துக்குறாரே, நம்மகிட்ட சஜஷன் கேக்குறாரேன்னு பெருமையா நினைப்பாங்க அதோட கூட பக்கத்துவீட்டுல அது வாங்கிருக்காங்க இது வாங்கிருக்காங்க நாமும் வாங்கணும்னு உங்க நிலமை தெரியமல் உங்களை தொல்லை பண்ண மாட்டாங்க.

                           

ஐந்தாவது………… வாரத்துல ஒரு நாள் லீவு….. தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்னு நீங்க நினைக்கலாம் ஆனால் வாரம் முழுதும் வீட்டுக்குள்ளையே வீட்டுவேலைல மூழ்கிப்போன மனைவி, அன்னைக்கு ஒரு நாள் அவங்களை வெளியக்கூட்டிட்டுப் போயி அவங்க கூட நீங்க நேரம் கழிக்கணும்னு விரும்புவாங்க.

அப்படி வெளியப்போக இருவருக்குமே விருப்பமில்லைன்னா……. மனைவிகூட ரொமான்ஸ் பண்ணிகிட்டே கிச்சன்ல அவங்களுக்கு சமையல்ல உதவி பண்ணுங்க. அதுவும் சந்தோஷம் தரும்.

இப்படி அன்பா மனைவிகிட்ட இருந்து பாருங்க . என் புருஷன் மாதிரி அன்பானவர் உலகத்துலயே இல்லைன்னு சொல்லி அனைவரும் பொறாமைப்படும்படி உங்ககிட்ட அன்பைப் பொழிவங்க.

பெண்களுக்கு:-

1.
பியூட்டி பார்லர் போயி ஃபேசியல் பண்ண வேண்டாம். கணவன் வேலை முடித்து வீடு திரும்பும்போது, அள்ளி முடித்த கொண்டையும், எண்ணைவழியும் முகமா இல்லாமல் , சுத்தமா முகம் கழுவி பவுடர் குங்குமம்னு வெச்சி மங்களகரமா இருந்தாலே போதும்.

2.
களைத்து வீட்டிற்குவரும் கணவனிடம் வந்ததும் வராததுமா, முகத்தை தூக்கிகிட்டு வீட்டில் நடந்த சண்டை, மாமியார், பிள்ளைகள் பிரச்சினையை ஆரம்பிக்காமல் காபி எதாவது கொடுத்து அவங்களை ரிலாக்ஸ் பண்ணவிட்டு மெதுவா விஷயத்தை சொல்லிப்பருங்க கேட்பாங்க.

                            

3. மீந்து போகுதேன்னு எல்லாத்தையும் குப்பை தொட்டியில கொட்டுற மாதிரி வயத்துல கொட்டிக்காமல் அளவா டயட்டா சாப்பிடுங்க. அழகுக்காக இல்லைன்னாலும் ஆரோக்கியத்துக்காகவாவது தினமும் ( நேரம் கிடைக்கும்போது) ½ மணி நேரமாவது யோகா உடற்பயிற்சி செஞ்சி அழகை நிலை நிறுத்திகோங்க.

4.
எப்பவும் சிரித்தமுகமா இருங்க அளவா நாம சிரிக்கும் புன்னகையில் தான் நம்ம அழகு வெளிப்படும்.
5.
கணவன் கோவமா திட்டும்போது பதில் பேசாமல் அமைதியா இருங்க. அவர் கோவம் தீர்ந்ததும் பொறுமையா அவருக்கு எடுத்து சொல்லி புரிய வைங்க. ரெண்டுபேரும் கோவபட்டால் பிரச்சனைதான் அதிகமாகும்.

இந்த 5 விஷயங்களை கடைபிடிச்சி பாருங்க…………. உங்க கணவன் மனதில் இருக்கும் உங்கள் இடத்தை யாரும் பங்கு போடவோ ஆக்ரமிக்கவோ முடியவே முடியாது. உண்மையாவே நீங்க உங்கள் கணவர் மனதில் அரசியாய் என்றும் நிலைத்திருப்பீங்க.


No comments:

Post a Comment