தமிழ்த் திரையுலகில் நடிகர் என்றால் அது அஜீத்குமார் என்பதை அவரை பிடிக்காதவர்களும் ஒப்புக்கொள்ளும் உண்மை. அஜீத்குமார் நடித்து படம் வருகிறதென்றால் ரசிகர்களுக்கு தீபாவளி என்றே சொல்லலாம்.
1990ல் தமிழ் சினிமாவை அப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த சினிமா பிரபலங்கள் தங்களின் வாரிசுகளை களத்தில் இறக்கிக் கொண்டிருந்த காலம். சொல்லப்போனால் கடின முயற்சி எடுத்து கம்பெனி கம்பெனியா நடிக்க வாய்ப்பு கேட்டு கதாநாயகர்களாக நடிக்க வேண்டிய காலம் மாறி, வாரிசுகளும் பண முதலாளிகளும் எளிதாக கதாநாயகர்களாக நடிக்க ஆரம்பித்த காலம் அது.
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் மூத்த நடிகர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டபிறகு அடுத்த ரஜினி -கமல் யார் என்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் அஜீத் குமார் அறிமுகமானார்.முன்னணி நடிகர்களிலேயே அதிகமாக தோல்வி படம் கொடுத்தவர் இவராக தான் இருக்க முடியும். அதையும் மீறி இவர் இந்த போட்டியில் இருக்கின்றார் என்றால் அது அஜித்தால் கூட விளங்கி கொள்ளமுடியாத ரகசியம் தான். ஆனாலும் அவர் தேவையான போது ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்து தன்னை பற்றிய விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பார்.
அல்டிமேட் ஸ்டார் மற்றும் தல என்று அடைமொழியில் கூப்பிடும் பெயருக்கு சொந்தமானவர்.ஆரம்பத்தில் மென்மையான படங்களில் நடித்த இவர் பின்னர் மாஸ் ஹீரோவுக்கான மோகம் கொண்டு நடித்த ஜனா,ஆஞ்சநேயா, அட்டகாசம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல படிப்பினையை கொடுத்தன.
ஆசை,காதல் கோட்டை, வாலி, அமர்க்;களம், தினா, வில்லன், வரலாறு,பில்லா, மங்காத்தா என பேர் சொல்ல கூடிய படங்களில் அவ்வபோது நடிப்பதன் மூலம் தான் இவர் தனது ரசிகர்களை தக்க வைத்து கொண்டுள்ளார்.
இவருடைய வாழ்க்கை பயணத்தில் யாருடைய சிபாரிசு இல்லாமல் தன்னிச்சையாக சொந்த முயற்சியால் தடம் பதித்து முன்னேறி வெற்றி பெற்றவர்களில் இவரை முன்னுதாரணமாக குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தமிழ் சினிமா செக்கசெவே லென்று இருப்பவர்களை முழுமையான நாயகனாக அங்கீகரித்ததில்லை அதில் தப்பித்தவர் அஜீத் ஒருவர் மட்டுமே. சரி. நன்றாக நடிக்கும் நடிகர்களில் ஒருவராகவும் பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் அஜித்குமாரின் படங்கள் ஏன் தொடர் தோல்வியைத் தருகின்றன என்ற கேள்விக்கு பதிலாய் ஒரே மாதிரியான கதையம்சம் உள்ள படங்களிலேயே நடிக்கிறார். மூன்றாம் தர ரசிகனுக்கான படம் நடிப்பதில்லை.தனிப்பட்ட ரசிகர்களை மனதில் வைத்து கதைகளை தீர்மானிக்கிறார். அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான கதையை தேர்வு செய்யவில்லை போன்றவை வந்து நிற்கின்றன..
இன்றைய சினிமா ரசிகர்கள் பிரபலங்களின் படங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் கதையம்சமுள்ள புதிய நடிகர்களின் படங்களையும் பார்க்கிறார்கள். எனவே எந்த நடிகர் நடித்தாலும் கதையம்சம் இருந்தால் தான் படம் ஓடும் என்பதற்கு ரஜினிகாந்தின் சில படங்கள் உதாரணம்.
தொடர் தோல்வியை சந்தித்து வரும் அஜீத்குமார் ரீமேக் படத்தில் நடித்திருக்ககூடாது.நன்றாக நடிக்கும் ஆற்றலை கொண்ட ஒரு நடிகர் ரீமேக்கில் நடிக்கும் அவசியம் இல்லை என்றே பலர் கருதுகின்றனர்.
முதல் காட்சியில் விசிலடிக்கும் ரசிகர்கள் எந்த ஒரு படத்தையும் வெற்றிப் படமாக மாற்ற முடியாது. பொதுமக்கள் பார்த்து ரசித்தாலே ஒரு படம் வெற்றியடைகிறது. அப்படியானால் ஒரு படம் அவர்களுக்கான படமாகத்தான் இருக்க வேண்டும். குறிப்பிட்ட ரசிகர்களுக்கானதாக இருக்க கூடாது.இதுவே அஜீத்தின் தொடர் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என யோசிக்கத் தோன்றுகிறது. அஜீத்குமார் நடிக்கும் படங்கள் அவருடைய ரசிகர்களுக்;கான படமாக இருக்கிறது. சமீபத்திய அவரது படங்களின் விமர்சனங் களைப் பார்த்தால் ‘இது அவரது ரசிகர்களுக்கான படம்” என்றே இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.
தற்போது வெளியான பல படங்கள் அதிரி புதிரி வெற்றி என்றாலும் அடுத்து அவர் எந்த மாதிரி கதையை தேர்ந்தெடுப்பார் என்பது அவருக்கே தெரியாது. கதை தேர்வில் அஜித் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.
விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார். அதில் சரண், எஸ்.ஜே.சூர்யா,துரை போன்றவர்கள் வரிசையில் இந்தி மார்க்கெட்டையே கலக்கி வரும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் குறிப்பிடத் தக்கவர்;.
மேலும் புது இயக்குனர்கள் பெரும்பாலும் இமேஜ் வட்டத்தை தாண்டி யோசிக்காததாலும், அஜித்தும் வட்டத்தை தாண்டி வெளியே வராததாலும் நிறைய தோல்வி படங்களே மிஞ்சின. ரெட், ஜனா போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.
தற்போது வெளியான பல படங்கள் அதிரி புதிரி வெற்றி என்றாலும் அடுத்து அவர் எந்த மாதிரி கதையை தேர்ந்தெடுப்பார் என்பது அவருக்கே தெரியாது. கதை தேர்வில் அஜித் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.
விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார். அதில் சரண், எஸ்.ஜே.சூர்யா,துரை போன்றவர்கள் வரிசையில் இந்தி மார்க்கெட்டையே கலக்கி வரும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் குறிப்பிடத் தக்கவர்;.
மேலும் புது இயக்குனர்கள் பெரும்பாலும் இமேஜ் வட்டத்தை தாண்டி யோசிக்காததாலும், அஜித்தும் வட்டத்தை தாண்டி வெளியே வராததாலும் நிறைய தோல்வி படங்களே மிஞ்சின. ரெட், ஜனா போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.
அவருக்கு இருக்கும் முதல் வாரத்திற்கானவசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது. அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள்.
தோல்விகளுக்கு பிறகு அஜித் முகவரி, ஜி, கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் இமேஜ் வட்டத்தை தாண்டி நடித்திருந்தது வரவேற்ப்பை பெற்றது.
சிவாஜி, ரஜினி,கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த பெருமையும் அஜித்திற்கு உண்டு. அதில் வாலி,வரலாறு,வில்லன், பில்லா உட்பட பெரும்பாலான படங்கள் வெற்றிபடங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித் ஒரு சிறந்த தொழிலாளி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது வேலையை செய்கிறார். நல்ல குடும்பத்தோடு வாழ்கிறார். தன் ரசிகர்களையும் குடும்பத்தை கவனிக்க சொல்கிறார். எனக்கு கட்அவுட் வைப்பதை விட உன்னுடைய வீட்டுக்கு உழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறினார். தான் படிக்காத கல்வியை, தன் ரசிகர்களை படிக்க சொல்கிறார். தனது ரசிகர்களை தேவையில்லாத பாதைகளுக்கு வழிகாட்ட அவர் விரும்பவில்லை. எனது சினிமாவை விட உனது வாழ்க்கையே சிறந்தது என்று ரசிகனுக்கு உணர்த்துகிறார்.
நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி,உழைப்பு,துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல் நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார் அஜித்.
தமிழ் சினிமாவில் எந்த துணை மற்றும் வழிகாட்டல் இல்லாமல் இத்தனை தூரம் வெற்றிகரமாக பயணம் செய்ய ஒரு தனி துணிச்சலும், தன்னம்பிக்கையும் ஆண்டவனின் ஆசியும் தேவை. இவரைப் பொறுத்தவரை அந்த மூன்றும் அஜித்திற்கு உண்டு.
முன்னணி நடிகராக இருக்கும் போதே தனது ரசிகர் மன்றத்தை கலைத்த முதல் நடிகர் இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே கூட இவராகதான் இருக்க முடியும்.
அஜித்தின் பேச்சில் யதார்த்தம் அதிரடியாக இருக்கும். சில உண்மைகள் சரவெடியாக வெடிக்கும். முன்னணி நடிகர்களில் டைன் டூ இர்த் சிம்பிளான, அடக்கமானவர், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் இமேஜ், பந்தா என்ற அகந்தை இல்லாதவர், பாஸிடிவ் திங்கிங், மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடும் மனோபாவம்,வெற்றிகள், தோல்விகள், வெறுப்பு, கோபம், நம்பிக்கைத்துரோகம் ஆகியவற்றை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற பவர்புல் எனர்ஜி கொண்ட நடிகர் நம் தல அஜீத் தான் என்றால் மிகையாகாது.
உழைப்பாளர் தினமன்று தன் பிறந்த நாள் காணும் அஜித் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால், தன்னம்பிக்கையால், மனோபலத்தால் முன்னுக்கு வந்தவர்.
அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்தாக எதிர்காலத்தில் நல்ல உடல் நலம் பெற்று அஜீத் இதே தன்னம்பிக்கையோடு வீர நடை போட்டு மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று விஸ்வரூபம் வலைப்பதிவு வாழ்த்துகிறது
No comments:
Post a Comment