சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Apr 2013

சென்னையில் ஒருநாள் - காலம் கடந்து வந்துவிட்டது.


சென்னையில் ஒருநாள் - திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். " தெய்வத்திருமகள் " படத்திற்கு பின் இந்த படத்தின் சில காட்சிகள் என்னை அழ வைத்து விட்டது. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மலையாளத்தில் எடுக்க பட்ட படம் " டிராபிக் " . அதை தான் ரீமேக்கியிருக்கிறாரர்கள். கேரளாவில் ஒரு நல்ல கருத்தை உலகுக்கு சொல்ல எடுத்த படம். ஆனால் தமிழில் " NAADAAR " மன்னிக்கவும் RAADAAN நிறுவனத்தால் பணம் சம்பாதிப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு எடுக்கபட்டுள்ளது.



இந்த படம் தயாரிப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வந்துவிட்டது. அதற்க்கு பல உதாரணங்கள் உள்ளது. போன ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மாலை திருப்பூர் மாவட்டம் நல்லூர் ராக்கியாபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது  மகன் சஞ்சய் (15)  திருப்பூர் காங்கயம் ரோட்டில் ற்பட்ட சாலை விபத்தில் சஞ்சய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி கோவை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சஞ்சயை சேர்த்தனர்.

அங்கு நினைவு இழந்த நிலையில் இருந்த சஞ்சய்க்கு மீண்டும் நினைவை கொண்டுவர டாக்டர்கள் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இறுதியில் மூளைச்சாவு குறித்த ஆய்வு மருந்தை செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில், சஞ்சய்க்கு மூளைச் சாவு ஏற்பட்டது கடந்த 7-ந் தேதி தெரிய வந்தது. இதனால் சஞ்சயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய பெற்றோர் முடிவு செய்தனர்.




சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள், சஞ்சயின் 2 கண்கள், 2 சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வுகள் ஆகியவற்றை எடுத்து தானமாகப் பெற்றனர்.

பின்னர் சஞ்சயின் 2 கண்கள் கோவை சங்கரா மருத்துவமனைக்கும், 2 சிறுநீரங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கல்லீரல், சென்னை குளோபல் மருத்துவமனைக்கும், இதய வால்வுகள் சென்னைபிராண்டியர் லைப் லைன் மருத்துவ மனைக்கும் தானமாகக் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளை நான் அந்த மருத்துவமனைக்கு சென்றிருந்த போது  கண்கூடாக நேரிலேயே பார்த்தேன். அதற்க்கு பின்பும் பல உறுப்பு தான அறுவைசிகிச்சைகள் தமிழகம் எங்கும் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போது பல பெரிய நடிகர்களை வைத்து இவர்கள் எடுத்திருப்பது வெறும் விளம்பரத்துக்காகவும், பணத்திற்காகவும் மட்டுமே . அதுவும் ஒரிஜினல் கதையை மாற்றி  கிளைமாக்சில் புகளின் உச்சியில் இருக்கும் சூர்யாவை படத்தினுள் கொண்டு வந்திருப்பது  விளம்பரத்திற்காக  அல்லாமல் வேறு எதற்காகவாம்? இதற்காக சூர்யாவை குற்றம் சொல்ல முடியாது.



                             


சச்சின் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் மட்டும் பார்க்க அனுமதிக்க  படும் போது அஜ்மல் சச்சினின் காதலி பார்வதியை பார்க்க சொல்வதும், பின் பார்வதி உள்ளே சென்று பார்ப்பதும் அதை தொடர்ந்து ஜெயபிரகாஷ் , லட்சுமி ராமகிருஷ்ணன் இருவரும் சென்று பார்க்கும் காட்சிகள் உருக்கமானவை. மிஷன் தொடங்கியவுடன் அரங்கில் உள்ள அனைவருக்கும் திக் திக் இதயம் தான்.

ஒரு பெரிய நடிகனை சட்டையை பிடித்து கேள்வி கேக்க தகுதியுள்ள ஒரே நடிகை ராதிகாதான்.
பேரும் புகழும் , ஓய்ந்து வாய்ப்பில்லாமல் உட்காரும் போது அப்பா யாருமே எட்டி பார்க்க மாட்டாங்க, நாங்க தான் உங்க கூட இருப்போம். வசனம் யாருன்னு கவனிக்கவில்லை மன்னிக்கவும்.இந்த
வசனத்தை  ஒரு கெத்து உள்ள நடிகை தான் பேசமுடியும்.அந்த கெத்து ராதிகாவிடம்   இருக்கிறது.

 மேஜோ ஜோசப்பின் இசையில் திக்திக் மிஷனின்  நிமிடங்கள்  இன்னும் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. சேரனின் வேனுடன் சேஹநாத் ஜே லாலின் கேமரா வேகம் கூட்டுகிறது. எடிட்டிங் கும் படத்திற்கு விறுவிறுப்பு சேர்க்கிறது.

மகனின் காதலியை பார்க்க வரசொல்லும் ஜெயபிரகாஷ் பார்த்தாரா? இல்லையா? என்று சொல்லவில்லை. அல்லது கதைக்கு தேவையில்லை என்று கட் பண்ணிவிட்டார்களா? என்று தெரியவில்லை . சில சின்ன சின்ன குறைகள், சினிமாத்தனங்கள் இல்லாமல் படம் எடுக்க முடியாதோ


கனத்த மனதுடன் படம் முடிந்து வரும்போது சிக்னலில் நின்றால் எதிர்முனையில் 5 செகண்ட் இருக்கும் இடைவெளியில்  சிக்னலை தாண்டி செல்ல தூரத்தில் ஒரு பல்சர் உறுமிக்கொண்டு வந்தது. நம் மக்கள் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். பட்டால்தான் திருந்துவார்கள்.


No comments:

Post a Comment