அண்மைகாலமாக ஊழல் குற்றசட்டுக்களில் அதிகம் சிக்கிய திமுகவில் இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும். இவரைப்போல் தமிழகத்தில் வேறு எங்கேனும் ஒரு MLA இருக்கிறாரா என்பதை அறியேன். நல்லது எங்கு இருந்தாலும், அதைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இவரைப் பற்றியப் பதிவு.
நான் பார்த்து வியக்கும், ரசிக்கும் ஒரே ஒரு தி மு க MLA, இவர் தான் AMH நாஜீம்.
1) காரைக்கால் தெற்கு தொகுதியில் ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து 25 வருடங்களாக தோல்வியே இல்லாமல் சட்ட மன்ற உறுப்பினராய் நிலைத்து நிற்கும் MLA இவர் ஒருவர் மட்டுமே.
இவரின் தொடர் வெற்றிக்கு சாதி, மத ஓட்டுக்கள் என்று எந்த வித குறுக்கு வழியுமில்லை.பணம் சம்பாரிக்க வேண்டியும் இவர் அரசியலுக்கு வரவில்லை. பரம்பரை பணக்காரர். அரசியலுக்கு வரும் முன்னரே தேவைக்கேற்ற வாழ்வாதாரத்தோடு இருந்தவர். இவர் மக்கள் மனதில் பிடித்த இடம் மட்டும் சற்றும் மங்காமல் இன்று வரை அப்படியே இருக்கிறது.
2) நான் கல்லூரி படிக்கும் காலத்திலேயே , என் தோழியின் சகோதரரின் புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு லட்சம் வரையில் உதவி செய்தார்.அவன் கடைசி காலம் வரை, மருத்துவ உதவிகள் அனைத்திற்கும் செவி சாய்த்தார்.
3) கிட்டதட்ட ஐந்து ஆறு வருடங்கள் கழித்து நான் இம்முறை ஊர் சென்ற போதும், அவரின் பெயரும் சேவையும் சற்றும் மாறவில்லை.அப்படியே இருக்கின்றன.
4) 40 வருடங்கள் கழித்து இன்று காரைக்கால் அம்மையார் தெப்பகுளம் புதுபிக்கப் பட்டு ஜொலிக்கிறது. தெப்பத் திருவிழா மீண்டும் நடைபெறுகிறது.இதனை சாதித்ததும் இவர் தான்.
5) எங்கள் தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில், கும்பாபிசேகம் நடத்துவதற்காக வசூலிக்கப்பட்ட 3லட்சம் ரூபாய் திருடுபோய்விட்டது. அதில் பாதி தொகையை கொடுத்து உதவி செய்திருக்கிறார்.
6) தெருவில் மின் விளக்குகள் எரியவில்லை, நாம் செல்லும் அரசாங்க அலுவலகங்களில் நமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை போன்ற எண்ணற்ற முறையீடுகளை நிவர்த்தி செய்கிறார்.இவரை எளிதில் மக்களால் சந்திக்க முடிகிறது.இவரே முன்வந்தும் அடிக்கடி தொகுதி மக்களை சந்திக்கிறார் ( தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல , எல்லா நேரங்களிலும் )
7)ஆளுங்கட்சி என்ன செய்யுது? யாரை எப்போது குறை சொல்லலாம் என்று பொழுதைக் கழிக்காமல் அட்டவணை முறையில் பணிகளைப் பிரித்து அவர் தொகுதி முன்னேற்றத்தில் கவனம் கொள்கிறார்.
8. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு என்று இருக்கும் ஒரே ஒரு அரசு பொறியியல் கல்லூரி PEC (Pondicherry Engineering College) மட்டுமே.அங்கு காரைக்கால் மாணவர்களுக்கு பொதுப்பிரிவில் ( general quota ) ஒதுக்கபட்ட இடங்கள் வெறும் 22. வருடத்திற்கு 250 மாணவர்களுக்கு மேல் நுழைவுத் தேர்வு எழுதி, அதில் வெறும் 30 அல்லது 40 மாணவர்களால் மட்டுமே அந்த கல்லூரியில் நுழைய முடியும்.இதனை எதிர்த்து முயற்சி செய்து இப்போது காரைக்கால் வேளாண் கல்லோரியிலேயே எங்களுகென்று அரசு பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
9)இவ்வளவு ஏன் , சிறிது நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்கள் இலங்கைப் படையால் கைது செய்ப்பட்டனர்.இவரின் தலைமையில் நடந்த அறப் போராட்டங்களால் மேலிடங்களுக்கு அழுத்தம் தரப்பட்டு அத்தனை பேரும் விரைவில் மீட்கப்பட்டு ஊர் வந்து சேர்ந்தனர். (இவரின் போராட்டம் மட்டுமே காரணமில்லை , அதுவும் ஒரு காரணம்). இப்போது மீண்டும் 29 மீனவர்கள் இலங்கையில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள
10) அம்மன் கூழ் கசக்குது, நோன்பு கஞ்சி இனிக்குது என்னும் தலைவர்கள் இருக்கும் இதே கட்சியில் தான் இப்படி ஒரு மதச்சார்பற்ற மனிதரும் இருக்கிறார்.இவர் மற்ற மதத்தவருடன் சகஜமாக இருப்பதையும் அவர்கள் கோவில் பூஜையில் கலந்துக் கொள்ளுவதையும் இவர் மதத்தை சேர்ந்த சிலரே தூற்றுகின்றனர்.
ஒரு மனித நேயமிக்க, தொகுதி மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட சட்ட மன்ற உறுப்பினரைப் பார்ப்பதே அரிதாகி விட்டக் காலத்தில், இவரை ஊக்குவிப்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு.
ஜாதி, மதங்களைக் கடந்து மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி தான் அரசியல் என்பதை நீங்கள் நம்பினால் இதனை பகிர்ந்து இவரை ஊக்கப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment