பன்னாட்டு நிறுவனங்களில், "ஏசி' அறையில் அமர்ந்து சம்பாதிக்காமல், வெட்டிக்குளம் என்ற குக்கிராமத்தின் கரிசல் காட்டில், வெயிலில் காய்ந்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் இந்த அமெரிக்க டியூக் பல்கலையில் எம்.எஸ்., இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்த இந்த ஹைடெக் விவசாயி
இன்ஜினியர் என்பதை விட விவசாயி என்பதே எனக்கு பெருமை. ஏனென்றால், விவசாயம் எனக்கு உயிர். என்னை பார்த்து, சில இளைஞர்களாவது விவசாயத்திற்கு வந்தால் அதுவே சந்தோஷம், என்கிறார் இந்த, "ஹைடெக் விவசாயி!
"என் குடும்பத்தில் யாரும் விவசாயி இல்லை; எனவே, நான், "முதல் தலைமுறை' விவசாயி."
விவசாயம் என்றாலே எல்லாரும் ஓடி ஒளியும் போது, அமெரிக்காவில் இன்ஜினியரிங் பட்டமேற்படிப்பு படித்து, ஐ.டி.,தொழில் நுட்பத்துறையில் லட்சம் லட்சமாக சம்பாதிப்பதை விட்டு விட்டு, தமிழகத்தின் குக்கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் இளைஞர் ஒருவர். ஆச்சரியமாக இருக் கிறதா? அவர்தான் கஸ்தூப் ஜோரி.
இந்த இளைஞரின் பூர்வீகம் உத்தரபிர தேசம்; வசிப்பது சென்னையில். அப்பா என்.கே.ஜோரி, இன்டீரியர் டெக்கரேஷன் தொழில் செய்கிறார். பிரபலமான டூன் பள்ளியில் படிப்பு, பின் அமெரிக்காவில் ஜார்ஜியா பல்கலையில் பி.எஸ்.இ.இ., எலக்ட்ரிடிகல் இன்ஜினியரிங், தொடர்ந்து அமெரிக்க டியூக் பல்கலையில் எம்.எஸ்., இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட் படிப்பு.
இத்தனை படித்தும், அமெரிக்காவில் பத்தாண்டுகள் வசித்தேன். ஓர் அறைக்குள் அமர்ந்து பணி செய்ய எனக்கு விருப்பம் இல்லை. எனவே, ஐ.டி., நிறுவன வேலையை உதறினேன். எதாவது புதிதாக செய்ய வேண்டும், பெரிய அளவில் விவசாயம் செய்ய வேண்டும், பண்ணை அமைக்க வேண்டும் என்பது என் மனதில் தீராத ஆசை. படிப்பு முடிந்ததும், அப்பாவிடம் சொன்னேன். அவர் மறுக்காமல் எனக்கு ஊக்கமளித்தார். அதற்கான நிலம், குறைந்தது 100 ஏக்கராவது வேண்டும். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலம் தேடி அலைந்தோம். பிரச்னை இல்லாத நிலம், மொத்தமாக கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்,சிவகங்கை மாவட்டம், பேச்சாத்தக்குடி அருகே வெட்டிக்குளம் என்ற இந்த கிராமத்தில் 145 ஏக்கர் நிலம் வாங்கினேன். "வறண்ட பூமி' என முத்திரை குத்தி, யாரும் விவசாயம் செய்யாத பகுதி இது.
இந்த, "நெகட்டிவ்' விஷயத்தை, எனக்கு "பாசிட்டிவாக' மாற்றினேன். ஆம்...யாரும் விவசாயம் செய்யவில்லை என்றால், நிலத்தடி நீர் தாராளமாய் நமக்கு கிடைக்கும் என்று முடிவு செய்தேன். 200 அடி ஆழத்தில், ஆழ்குழாய் போட்டதில், தண்ணீர் எளிதாக கிடைத்தது. அப்படி எட்டு எட்டுபோர்வெல் @பாட்டு. 30 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைத்தேன்.
என் முதல் திட்டம், "பயோமாஸ்'(உயிரி எரிபொருள்) மூலம் மின்சாரம் தயாரிப்பது. அதற்காக, 7,000 நிலவேம்பு மரம் வளர்க்கிறேன். 9,000 உயர்ரக குட்டை மாமரக் கன்றுகள், 800 முருங்கைச் செடிகள் நட்டுள்ளேன். தர்பூசணி, கத்திரி பயிரிட்டுள் ளேன். புல் ரகங்கள் வளர்க்கிறேன்; சிறிய ஆட்டுப் பண்ணையும் வைத்துள்ளேன். மொத்தம் 90 ஏக்கரில், பல வகை விவசாயம் நடக்கிறது.
இங்கேயே வீடுகட்டி தங்க போகிறேன்.
விரைவில் பதப்படுத்தும் யூனிட் துவங்க உள்ளேன். இடைத்தரகர்களிடம் விவசாயிகள் சிக்கி உள்ளதால், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனை மாற்ற, "விவசாயிகள் குழு' அமைக்க விரும்புகிறேன். குழுவாக இணைந்தால், நிறைய தொழில் நுட்பங்களை அறிந்து, விவசாயிகள் செயல்பட முடியும்.
தொழில்நுட்ப உதவியுடன், இன்னும் நிறைய பயிரிட வேண்டும். இந்த வறண்ட நிலத்தை வளமாக்க வேண்டும். சில ஆண்டுகள் கழித்து தான் வருமானம் கிடைக்கும்; பரவாயில்லை. நான் சோர்வடைய போவது இல்லை என்கிறார் இந்த, "ஹைடெக் விவசாயி!'
தொடர்புக்கு 94450 76595.

No comments:
Post a Comment