சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Aug 2013

துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை

நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.

1.
ஏண்டா லேட் ?
லேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்)

2.
எங்க இருக்க?
பஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க ?)

3.
எப்ப முடியும்?
இதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்)

4.
சாயங்காலம் எப்ப வருவ?
வந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் )

5.
சாப்புட என்ன வேணும்?
எதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா?)

6.
எங்க கிளம்பிட்ட?
வந்து சொல்றேன் (ச்ஷப்பா.....நீ வரதுக்குள்ள எனக்கு வயசாயிரும் டா)

7.
காலைல எப்ப எழுந்தறிப்ப?
முழிப்பு எப்ப வருதோ அப்பத்தான் ( முழிக்காத, அப்படியே மூடிரு கண்ண..)

8.
இங்க இருந்த தைலத்த பாத்தியா?
பாத்தேன் போனமாசம் எனக்கு தலைவலி வந்தப்ப.
(
இப்படியே பதில் சொல்லு.என் தலை கொஞ்ச நாளைல வெடிச்சுரும்



ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. 

அக்கடையில் முதலாளியே தொழிலாளி.

ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான். 

அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.

இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ...ேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.

நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.

கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், 

"
முதலாளி மூளையிருக்கா?" என்று வழக்கம் போலக் கேட்டான்.

அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, 

"
இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை" என்றான்.

திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!!!!!!!



No comments:

Post a Comment