சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Aug 2013

தினசரி 30 லிட்டர் பால்... 25 லட்சத்துக்கு விலைபோன எருமை!!

தினசரி 30 லிட்டர் பால்... 25 லட்சத்துக்கு விலைபோன எருமை!!

ஒரு எருமை மாடு ரூ. 25 லட்சத்துக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் சிங்க்வா காஸ் கிராமத்தில்தான் இந்த காஸ்ட்லி எருமை மாடு உள்ளது. தினசரி 30 லிட்டர் பால் கொடுக்கும் இந்த எருமை மாடு, மாடுகளுக்காக நடத்தப்படும் பல்வேறு அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும் வாரிக் குவித்து பேரழகியாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. 

                          
   


இது உண்மையாக நடந்ததுதான், கதையல்ல. அந்த காஸ்ட்லியான எருமையின் பெயர் லட்சுமி என்பதாகும். 2 ஆண்டுகளுக்கு முன்புதான் லட்சுமியை ரூ. 2.5 லட்சத்துக்கு வாங்கியிருந்தார் அதன் உரிமையாளர் கபூர் சிங். லட்சுமி மகா ராசிக்கார எருமை மாடாக திகழ்கிறது. ஒரு நாளைக்கு 30 லிட்டர் பால் கொடுக்கிறதாம். வீட்டுக்கு வந்தது முதலே கபூர் சிங்குக்கு நிறைய நல்லது நடந்துள்ளதாம். மேலும் மாடுகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டிகளுக்கும் தவறாமல் போய் நின்று விடுமாம் லட்சுமி. இது போய் விட்டாலே முதல் பரிசுதானாம். அப்படி ஒரு வெற்றி ராசியும் கூட. 

இந்த மாட்டின் பெருமை, மகாத்மியம் கேள்விப்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜீவ் சர்பான்ச் என்பவர் ஹரியானா விரைந்தார். கபூர் சிங்கைச் சந்தித்தார். லட்சுமியை தனக்குத் தந்து விடுமாறும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றும் கூறினார் ராஜீவ். இதைப் பார்த்த கபூர் சிங், ரூ. 25 லட்சம் கொடுத்து விட்டு மாட்டை ஓட்டிச் செல்லுங்கள் என்று கூற, அதை உடனே ஏற்றுக் கொண்டாராம் ராஜீவ் சர்பான்ச். 

ஒரு கிலோ தங்கம் வெல்லுமா லட்சுமி! 
மாட்டை வாங்கிய புதிய ஓனரான ராஜீவ் சர்பான்ச் கூறுகையில், லட்சுமி ரொம்ப ராசியானவள். இவள் வந்த நேரம் எனக்கு நன்றாக இருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆந்திராவில் மாடுகளுக்கான அழகிப் போட்டி நடக்கிறது. அதில் முதல் பரிசு ஒரு கிலோ தங்கமாகும். அதை என் லட்சுமி நிச்சயம் வெல்வாள் என்று நம்பிக்கை தெரிவித்தார். 


இந்த நிலையில் லட்சுமியை விற்று விட்டு இப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கிறார் கபூர் சிங். இதுகுறித்து அவர் கூறுகையில், கன்றுக் குட்டியுடன் என் வீட்டுக்கு முதல் முறையாக லட்சுமி வந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. அதை மறக்க முடியாது. தனது முதல் போட்டியிலேயே அது ரூ. 21,000 பரிசைப் பெற்றுக் கொடுத்தது என்றார்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு 
பகிர்ந்து  கொள்கிறேன்.பிடித்திருந்தால்  நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !     




No comments:

Post a Comment