சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Aug 2013

இயக்குனர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம்

காதல் என்பது புனிதமானது என்ற நிலை மாறி சுயநலத்தோடும் பணம்,வசதி, புகழ், அந்தஸ்து ஆகியவைகளுக்கு ஆசைப்பட்டு மட்டுமே இன்றைய இளையதலைமுறை " ஆள்பார்த்து" காதல் செய்கிறது. ஒரு செல்போன் இருந்தால் போதும் எந்த பெண்ணையும் தன் காதல் வலையில் வீழ்த்தி விடலாம் என்று நினைக்கின்றனர்.

                        

அதேபோல இளம்பெண்களும் எதோ சில காரணங்களால் அந்த போலித்தனமான காதலை கண்டுகொள்ள தெரியாமல் மாட்டிக் கொள்கின்றனர். கடந்த சில மாதங்களாக இளவரசன் - திவ்யா காதல் 
மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டன. இப்போது இயக்குனர் சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் வந்துவிட்டது. 


இயக்குனர் சேரன் தன் மகள் தாமினியின் காதல்  விவகாரத்தில் படும் துயரங்கள் என் மனதை வருத்துகிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து திரைப்பட உலகில் சுயமாக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர் சேரன்.திரைத்துறையில் எத்தனையோ சோதனைகளை கண்ட சேரன் தற்போது தன சொந்த வாழ்க்கையிலும் அதுவும் தான் பெற்ற மகளாலேயே சோதனைகளை அனுபவிக்கிறார்.தன் மகள் காதலிப்பதாக சொல்லும் சந்துருவின் நடவடிக்கைகளிலும் பழக்கங்களிலும் சந்தேகம் கொண்டு தன் மகளின் வாழ்க்கை கெட்டுபோய் விடக்கூடாது என்ற காரணத்தினால் தான் போராடுகிறார்.

காதல் என்பது யார் மீது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு   தன்னைவிட உயர்ந்த சாதி, அல்லது தன்னைவிட வசதியான வீட்டு பெண்கள் மீதுதான் வருகிறது. தலித் சமுதாயத்தை சேர்ந்த இளவரசன் வன்னிய சமுகத்தை சேர்ந்த திவ்யாவை காதல் செய்தான். இன்னும் இதுபோல அந்தஸ்து பார்த்து வரும் காதல்கள்  நிறைய  இருக்கிறது. 

தாமினி எதோ ஒரு சில சூழ்நிலைகளால் தற்போது காதலனோடு போவதாக கூறலாம். ஆனால் அது அவருடைய வாழ்க்கையை எப்படி திசை மாற்றி செல்லும் என்று தெரியாது. அந்த பக்குவப்பட்ட வயது அவர்க்கு இல்லை. இத்தனை வருடமாக தன்னை படிக்க வைத்து நல்லபடியாக பார்த்துக் கொண்ட  தன் பெற்றோரை விட்டுவிட்டு தன் காதலன் சந்துருவுடன் 
( அவனை பார்த்தாலே முகத்தில் கிரிமினல் என்று எழுதி வைத்திருப்பது போன்று  உள்ளது ) தான் செல்வேன்   என்று கூறுவது சரியல்ல.

                          

தாமினிக்கு அவரின் தந்தையின் பாடல் வரிகளை இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

                     ஊரே வந்து பூ தூவ , ஊர்வலம் போகும் கல்யாணம் 
                  அம்மா அப்பா கைசேர்த்து அக்ஷதை போடு சந்தோசம் 
                               ஒருமுறைதான் ஒருமுறை தான் 
                           ஒருசில மகிழ்ச்சிகள் ஒருமுறைதான்.
              பெற்றவர்க்கு பிள்ளைகளால் சந்தோசம் சிலமுறைதான்...

"தவமாய் தவமிருந்து "  படம் பார்த்து எத்தனையோ பேர்கள் தங்கள் காதலை துறந்து பெற்றோர் மனசுகோணாமல் நடந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். ஆனால் உலகத்துக்கே பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்ன மனிதனுக்கே இப்போது  இந்த நிலைமை என்று நினைக்கும்போது மனம் வருந்துகிறேன்.

நான் வேண்டுவதெல்லாம் ஒன்றுதான். இறைவா ஏதும் அறியா பெண்ணை அந்த கயவனிடம் இருந்து காப்பாற்றி பெற்றோரிடம் விட்டுவிடு என்றுதான். இது என் வேண்டுதல் மட்டுமல்ல.பெண்களை பெற்ற அனைத்து பெற்றோர்களும் சேரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். 
அவர்களின் வேண்டுதலும் கூட.


No comments:

Post a Comment