சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Aug 2013

கோபம் - கொலைவெறி இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசம்?"

பவர் ஸ்டாரிடம் ஒருமுறை நிருபர் கேட்ட கேள்வி-
"
கோபம் என்றால் என்ன கொலைவெறி என்றால் என்ன? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசம்?"

பவர் ஸ்டார் ஒருகணம் யோசித்தார் பிறகுஇதை விளக்குவதைவிட செயல்முறை செய்து காட்டுகிறேன்என்று நிருபரை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

                              

இப்போ கோபம்னா என்னனு காட்டுகிறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.மறுமுன ையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

ஹலோராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.
சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்க ீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”
போன் கட்டானதும் நிருபர் பவர்ஸ்டாரிடம் கேட்டார்
பவர் இதுதான் கோபமா…?’

இல்லைகொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஹலோராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.
சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”
போன் கட்டானதும் மீண்டும் நிருபர்
இதுதான் கோபமா…?’
இல்லை கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஹலோராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
ஏங்கஉங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதாஎத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவதயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”
போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட பவர் ஸ்டார் நிருபரிடம்'இப்பதான் கோபத்தை பார்க்க போறோம்'என்று அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.

                    

ஹலோராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.

டேய்அறிவு கெட்டவனேநீயெல்லாம் சோத்தத் திங்கறியாஇல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோஅப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்கவைடா போனை…!”

உடனே நிருபர் சொன்னான்.
கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சுகொலைவெறின்னா என்ன?”

இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
...
லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

ஹலோநான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.


No comments:

Post a Comment