இதபாருங்க மிஸ், என் பையன் டைரில என் கிட்டே சைனே வாங்குறது இல்லே. நீங்க என் கிட்டே ஏன் சொல்லலை? உங்க ஸ்டூடண்ட் தப்பு பண்றான்னு தெரியுது இல்லை? என்னை கூப்பிட்டு சொல்லி இருந்தா நான் கவனிச்சி இருப்பேனே?
-மேடம், நான் இந்த மாசத்தில நாலு முறை ரிமார்க் போட்டு இருக்கேன். பேரண்ட் கம் அண்ட் மீட் க்ளாஸ் டீச்சர் னு. ஆனா நீங்க தான் ஒரு நாளும் வந்தது இல்லே. பேரண்டஸ் டீச்சர் மீட்டிங் மட்டும் வரீங்க. உங்க பையன் டைரியை நீங்க பார்க்காதது உங்க தப்பு. இங்கே வந்து சத்தம் போட்டா எப்படி? மத்த பேரண்ட்ஸையும் நான் பார்க்கணும் இல்லை. ப்ளீஸ் மேம்.
-யாரு நான் கூச்சல் போடறேனா? நாங்க கட்டுற பீஸ் பணத்தில தான் நீ சம்பளம் வாங்குற ஞாபகம் வைச்சுக்க, என் வீட்டு தோட்டக்காரனை விட சம்பளம் கம்மியா வாங்குற நீ என்னை பஜாரிங்கிறீயா? உன்னை என்ன பண்றேன் பாரு.
-மேடம், இப்போ என்ன சொல்லிட்டேனு இப்படி பேசுறீங்க?
-இரு, உன்னைய வேலையை விட்டு தூக்கலை, வாடா ரமேஷ் என தன் மகனை அழைத்துக் கொண்டு வேகமாக சென்றாள் அந்தப் பெண்மணி.
ப்ராக்ரஸ் கார்டு வாங்க வந்த சில பெற்றோர்கள் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தனர்.
முட்டிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அவர்களின் பிள்ளைகளின் கார்டை கொடுத்து கொண்டிருந்த போது, ஆயாம்மா வந்து பிரின்சிபல் அழைப்பதாக சொன்னாள். வருகிறேன் என்று தலையசைப்பில் சொல்லி விட்டு கார்டுகளை விநியோகித்து முடித்தபோது ஆயசமாக இருந்தது பவித்ராவிற்கு. சில நிமிடங்கள் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
எழுந்து கைப்பையை எடுத்துக் கொண்டு பிரின்சிபல் அறை நோக்கி நடந்தாள்.
பிரின்சிபல் அறையை சமீபிக்கும் போதே அந்தப் பெண்மணியின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. பியூன் ஒரு சிநேக புன்னகை செய்தபடி கதவை தள்ளினான்.
அறையினுள் சென்று, பிரின்சிபலுக்கு வணக்கம் வைத்தாள்.
தலையசைப்பில் ஏற்றுக் கொண்ட பானுமதி, பவித்ரா இவங்க புகாருக்கு உங்க பதில் என்ன? என கேட்டாள்.
பவித்ரா பொறுமையாக நடந்ததை விவரித்தாள். அந்த பெண்மணி மீண்டும் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.
-இங்கே பாருங்க மேடம். நீங்க புகார் தந்தீங்க நான் கூப்பிட்டு விசாரிக்கிறேன். நீங்க இடையில பேசினா எப்படி?
நீங்க கொஞ்ச நேரம் வெளியே வெயிட் செய்ங்க என பானுமதி சொல்ல அந்த பெண்மணி பவித்ராவை முறைத்த படி வெளியேறினாள்.
-இதப்பாரும்மா பவித்ரா, உங்களை பத்தி தெரியும். இது அந்த அம்மாவை சமாதானப் படுத்த மட்டும் தான் உங்களை கூப்பிட்டு விசாரிக்க செய்றேன். அந்த அம்மாவோட வீட்டுக்காரர் சிட்டில பெரிய மனுஷன். அந்த பையனை வேற செக்ஷனுக்கு மாத்தவும் கூடாதுங்கிறாங்க.
அதனால நீங்க வேற செக்ஷன் பாருங்க.
-என்ன மேடம் இது, நான் தப்பே செய்யலயே, இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு ஆன்வல் எக்ஸாமுக்கு, இப்போ வேற செக்ஷன் போய் அந்த பிள்ளைகளோட பழகி எப்படி மேம் முடியும்?
-எனக்கும் புரியுது பவித்ரா. ஆனா இந்த அம்மா நாளைக்கு ஏதாவது ஏடாகூடம் செய்யுமே? நம்ம பள்ளிக்கூடத்தோட ரெகுலர் ஸ்பான்சர்கள் அவங்க வீட்டுக் காரரு, நீ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோமா.
சட்டென தீர்மானத்திற்கு வந்தவள் போல் சொன்னாள் பவித்ரா.
-நான் கிளாஸ் மாற மாட்டேன் மேடம், ரிசைன் பண்ணிடறேன். நான் வரேன் மேடம் என வேகமாக வெளியேறச் சென்றாள்.
-இது தான் உன் முடிவாம்மா?
-ஆமாம் மேடம். என சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.
அந்த அம்மாள் பவித்ராவை கேலி சிரிப்போடு பார்த்தாள்.
பவித்ரா அவளிடம் சென்று, சந்தோஷம் மேடம். ரமேஷ் நீ நல்லா படி. இனிமே வர்ற மிஸ் கிட்டேயாவது குறும்புத் தனம் பண்ணாதே, அம்மா கிட்டே டெய்லி டைரியில சைன் வாங்கிட்டு வாப்பா. சரியா என ரமேஷை இழுத்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு கண்களை துடைத்து கொண்டு விலகினாள்.
அந்த அம்மாள் திகைத்து, பவித்ரா மிஸ் நில்லுங்க நில்லுங்க என கூச்சலிடுவதை பொருட்படுத்தாமல் பள்ளி வாசலை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தாள் பவித்ரா.

முகநூலில் படித்தது.
விறுவிறுப்பாக
வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன்பெற்றுக் கொள்வதற்காக
பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல கருத்துக்களை உங்களோடு
பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !
No comments:
Post a Comment