சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2013

வலைபதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.


தங்கள் வலைப்பதிவில் திரை விமர்சனம் எழுதும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களால் முடிந்தவரை அந்த திரைப்படத்தில் உள்ள நல்ல விசயங்களை சொல்லுங்கள். நீங்கள் தான் உலகின் மிகப்பெரிய அறிவாளி என்றும் உங்களுக்கு தெரியாதது இந்த உலகில் எதுவும் இல்லை என்றும் நினைத்துக் கொண்டு எழுதாதீர்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு படமும் மிகுந்த பொருட் செலவில், பல மனிதர்களின் உழைப்பில் உருவாகிறது. அந்த படம் நன்றாக ஓடினால் தான் அந்த படத்தின் தயாரிப்பாளர் முதல் திரை அரங்குகளில் வாசலில் நின்று டிக்கெட் கழிப்பவன் வரை நன்றாக இருக்க முடியும். இது எதுவும் தெரியாமல் ( அது மிக மோசமான படமாகவே இருக்கட்டும் ) நீங்கள் நான்கு சுவற்றுக்குள் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் என்ற பெயரில் அந்த படம் நன்றாக இல்லை என்று எழுதுவது நியாயமல்ல.

இதைவிட இன்னும் கொடுமை என்னவென்றால் ஒரு படம் இன்றுதான் வெளியாகிறது என்றால் அன்று  காலை 11 மணிக்கு படத்தின் விமர்சனத்தை 
சில வலைபதிவர்கள் எழுதிவிடுகிறார்கள். இவர்கள் உண்மையில் படம் முழுவதும் பார்த்து விட்டு தான் விமர்சனம் எழுதுகிறார்களா? என்று தெரியவில்லை. நடிகர் ரஜினிகாந்தின் படம் பூஜை போடும் போதே அதன் வியாபாரம் முடிந்து விடும் என்ற பேச்சு இருக்கிறது. அது போல சில நடிகர்கள் தங்கள் புது படத்தை பற்றி முதலில் அறிக்கை விடும்போதே இந்த வலைபதிவர்கள் அந்த படத்தின் 
" விமர்சனத்தை" எழுதி விடுகிறார்களாம்.

அதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் நடிகர் அஜித்தின் 53 வது படம் ஆரம்பம் என்று பெயரிடப்பட்டதும் ஒரு வலைபதிவர் (ஆ)ரம்பம் என்று ஒரே வார்த்தையில் விமர்சனம் எழுதி விட்டாராம். என்ன கொடுமை சார் இது? இது போல எழுதுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் படம் நன்றாக இருந்தால் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்வது போல இருந்தால் தானே நாங்களும் நன்றாக இருக்கிறது என்று எழுத முடியும் என்கிறார்கள். இதை சொல்லும் வலைபதிவர்கள் குறைந்த பட்சம் அந்நியன் படம் பார்த்து விட்டு ரோட்டில் செல்லும் போது நடுக்கோட்டை கடந்து வலது பக்கம் செல்லாமல் தவிர்த்திருக்கிரார்களா?


யாரும் இங்கு மக்களுக்கு கருத்து சொல்லவோ அல்லது ஒரு சமூக  பிரச்சனையையோ இங்கு திரைப்படமாக எடுப்பது இல்லை.அதே போல யாரும் திரைப்படங்களில் வரும் கருத்தை பார்த்து கொண்டு திருந்தி அதை பின்பற்றுவதுமில்லை. ஒரு பொழுது போக்கிற்காக மட்டுமே படம் பார்க்கிறார்கள்.

அதனால் உங்கள் வழியை கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள். இன்னும் ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்.

முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் மாணவர்களுக்கு ஓவியம் வரைய கற்று கொடுத்தார். அவரின் சீடன் ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டு பல நாள் இரவு பகலாக கண் முழித்து ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டு வந்து தன குருவிடம் காண்பித்தான்.

" குருவே இந்த ஓவியத்தை நான் மிகவும் கவனமாக தீட்டியிருக்கிறேன். இதில் ஏதும் குறையிருந்தால் கூறுங்கள் " என்று பணிவாக கூறினான்.

குருவும்  புன்சிரிப்புடன் " நீ என் சீடன். அதனால் உன் ஓவியத்தை நானே பாராட்டினால் அது நான் என்னையே பாராட்டி கொள்வதை போலாகும். எனவே நீ உன் ஓவியத்தை மக்கள் கூடும் இடங்களில் வைத்து கொண்டு அதன் அருகில் இந்த ஓவியத்தில் ஏதும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் " என்று எழுதிவிடு என்றாராம்.

அது போல சீடனும் மறுநாள் காலை மக்கள் கூடும் இடம் பார்த்து தன் குரு  சொன்னது போல வைத்து விட்டு வந்துவிட்டான். மாலை சென்று தன் ஓவியத்தை  கண்டவனுக்கு பெரிய அதிர்ச்சி.  ஓவியத்தின் அனைத்து இடங்களிலும் தவறு இருப்பதாக அம்புக்குறியிட்டு இருந்தனர் மக்கள். மிகுந்த சோகத்துடன் தன்  குருவிடம் சென்று ஓவியத்தை காண்பித்தான்.அதை பார்த்த குரு " வருத்தபடாதே இன்னும் ஒருமுறை முயன்று பார். ஆனால் இப்போது அந்த ஓவியத்தில் தவறு ஏதேனும் இருந்தால் அதை திருத்துங்கள்" என்று எழுதி வை என்றார்.

சீடனும் மறுநாள் அதே இடத்தில் குரு சொன்னது போல ஓவியத்தை வைத்து விட்டு வந்துவிட்டான். மாலை சென்று பார்க்கையில் அந்த ஓவியம் அப்படியே இருந்தது. யாரும் அதை திருத்தவில்லை. மகிழ்ச்சியோடு அதை குருவிடம் எடுத்து  சென்றான். குருவே முன்பு குறை சொன்ன மக்கள் இன்று அதே ஓவியத்தில் குறைகளை ஏதும் திருத்தவில்லையே என்று கேட்டான்.

அதற்க்கு குரு சொன்னார். மக்களுக்கு தவறை சுட்டிகாட்ட  மட்டுமே தெரியும்.அந்த தவறை திருத்த யாருக்கும் தெரியாது. அதனால் உன் திறைமையை நீ யாருக்கும் நிருபிக்க தேவை இல்லை என்றாராம். அது போல ஒரு திரைப்படம் எடுப்பதில் உள்ள கஷ்டங்களை உணராதவர்கள் தான் இன்னும் சொல்ல போனால் கேமராவையோ அல்லது சூட்டிங் எடுப்பதை நேரில் கூட பாத்திராதவர்கள் தான் விமர்சனம் என்ற பெயரில் குறை கூறுகிறார்கள்.


ஒரு படத்தை திருட்டு விசிடியாக எடுத்து கொள்ளை அடித்து அந்த படத்தின் உழைப்பை உறிஞ்சுபவனும் இது போல விமர்சனம் எழுதி அந்த படத்தின் வசூலை கெடுப்பவனுக்கும் வித்தியாசமில்லை.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு 
பகிர்ந்து  கொள்கிறேன்.பிடித்திருந்தால்  நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !     

No comments:

Post a Comment