நாம் எப்படி இருக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்பட்டார்கள்!
”இந்தியாவில், நீள அகலத்திலும் குறுக்கு நெடுக்கிலும் நான் பயணித்திருக்கிறேன். ஒரே ஒரு திருடனையோ, ஒரு பிச்சைக்காரரையோ நான் கண்டதில்லை. அப்படியொரு, செல்வத்தை, உயர் அற மதிப்பீடுகளை, செம்மாந்து வாழும் மக்களை இங்கு காண்கிறேன். இந்த நாட்டை, ஒருபோதும் நம்மால் வெற்றிகொள்ள முடியாது. அவ்வாறு வெற்றி கொள்ளத்தான் வேண்டுமெனில், இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கும், அக ஒழுக்கத்தை, பண்பாட்டு மரபுச் செழிப்பை முறிக்க வேண்டும்.

ஆகவே, இந்தியாவின் தொன்மையான கல்வி முறையை, பண்பாட்டுக் கூறுகளை அகற்றிவிட்டு, அவற்றிற்கு பதிலாக நமது முறைகளைக் கொண்டுவர வேண்டும்.
எவையெல்லாம், அயல்நாட்டிலிருந்து வருகின்றனவோ அவை எல்லாம் தம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை என இந்தியர்கள் நம்பும்படிச் செய்ய வேண்டும். தங்கள் மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலம் உயர்வானது என எண்ணச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் மாறத் துவங்கிய பின்னால், தமது சுய பெருமிதத்தை இழப்பார்கள்; தமது சொந்தப் பண்பாட்டை இழப்பார்கள்; பின்னர் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள். இந்தியா, ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும்!”
-மெக்காலே பிரபு (1835)வின் கருத்துச் சுருக்கம்!
No comments:
Post a Comment