இது என் வலைப்பதிவின் 500 வது பதிவு. இந்த 500 வது பதிவில் மிக சில பேர் மட்டுமே அறிந்த இவரை பற்றி எழுதுவதில் நான் பெருமைபடுகிறேன். அனைத்து தரப்பு
மக்களும் இப்படி ஒருவர் நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று நினைக்கும் ஒருவர். நல்ல மனிதர். நேர்மையான அரசியல்வாதியும் கூட. இந்தியாவின் இப்போதைய நிலைமையில் இவரை போல நேர்மையானவர்கள்
சில பேர் மட்டுமே உள்ளனர்.
அவர் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு. திரு. மாணிக் சர்க்கார் அவர்கள். திரிபுரா மாநிலத்தில் 1998 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை
தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வராக இருக்கிறார். ( நம் எம்.ஜி.ஆரை விடவும் அதிக நாட்கள் தொடர்து முதல்வராக இருக்கிறார். )
அப்படி இருந்தும் இன்னும்
இவருக்கு சொந்த வீடு
இல்லை. இவரது வங்கிகணக்கில் 6500 ரூபாய் மட்டுமே வைத்துள்ளார். முதல்வருக்கு அரசு தரும் ஊதியமாக 9200 ரூபாயும் அலவன்சாக 1200 ரூபாயும் மாதாமாதம் கிடைக்கிறது. அதை அப்படியே கம்யுனிஸ்ட் கட்சிக்கு தந்து விடுகிறார். கட்சியிலிருந்து தரும் 5000 ரூபாயில் தான் வாழ்க்கையை நடத்துகிறார்.
இவரது மனைவி பாஞ்சாலி பாட்டாசார்ஜி மத்திய சமூக நலத்துறையில் பணிபுரிகிறார். இவரை அகர்தாலா நகர தெருக்களில் ரிக்ஷாவில் செல்வதை தினமும் பார்க்கலாம். அவ்வளவு எளிமையானவர்.
கடந்த 20 வருடங்களாக மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் கஷ்டங்களை நேராக பார்த்து உணர்ந்து அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து தன அரசை மக்கள் அரசாக நடத்தியாதால் மட்டுமே திரிபுரா மக்கள் நான்காவது முறையாக அவரை முதல்வர் அரியணையில் அமர்த்தி அவருக்கு பெருமை சேர்க்கின்றனர். இந்தியாவின்
மிக ஏழ்மையான, ஆனால் மிக நேர்மையான முதல்வரின் சேவைகள் தொடர
விஸ்வரூபம் மனதார வாழ்த்துகிறது
விறுவிறுப்பாக
வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன்பெற்றுக் கொள்வதற்காக
பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல கருத்துக்களை உங்களோடு
பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !
No comments:
Post a Comment