சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 May 2013

பேஸ்புக் ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க



உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க :

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.



இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

https://www.facebook.com/hacked

வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். 
அந்த விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).

ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள். 
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும். 

உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும். 
பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இப்பொழுது புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும். 
இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்..:-(

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !


No comments:

Post a Comment