சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 May 2013

அண்ணன் தங்கை பாசம்னா இப்படித்தான் இருக்கணும்.


துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம்...

இரண்டு வயதே ஆன தன் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர்.ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்படவேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.

                              

பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது.

மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி "உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா?" என்று கேட்டனர்.

சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு என் ரத்தம் எடுத்து அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவள் காப்பாற்றப்படுவாள் என்றால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றான்.

சிறுவனிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறுவனுக்குப் பக்கத்தில் பெற்றோரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர் சிறுவனை தைரியமூட்டி கொண்டிருந்தனர் ,பின்னர் இரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.சிறுவன் புன்முறுவலுடன் தனது தங்கையுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் செல்லச்செல்ல குழந்தையிடமிருந்து அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆனால் சிறுவனது முகம் வாடிக்கொண்டே சென்றது.

சிறுவன் மருத்துவரை பார்த்து "டாக்டர், இறக்கும் போது கஷ்டமாக இருக்குமா!?" என்று சோகமான குரலில் கேட்டான்.

சிறுவனின் இந்த கேள்வியால் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே டாக்டர், ’ரத்தம் கொடுப்பதால் இறப்பதற்கு வாய்ப்பு இல்லைஎன்பதை சிறுவனிடம் எடுத்துக் கூறினார்.

"
சிறுவன், ஆரம்பத்தில் தனது உடம்பிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக நிணைத்திருந்தான், தன் தங்கைக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முன்வந்திருந்தான்." யாருக்கு வரும் இந்த தியாக உணர்வு.

அவன் தியாக உணர்வை கண்டு பெற்றோர்களும்,செவிலியர்களும் மருத்துவரும் கண்ணீர் சிந்தினர்.

அண்ணன் தங்கை பாசம்னா இப்படித்தான் இருக்கணும்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !


No comments:

Post a Comment