சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 May 2013

அரசியல் ஜோக்.............!!!!!!!!!

குனிந்து நின்னு கும்பிடுபவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா அது அம்மா.

குஷ்புவிற்கு மேடையிலும் உண்மையான தொண்டனுக்கு இதயத்திலும் இடம் கொடுத்தால் அது தலிவர்.

தொண்டர்களுக்கு தர்ம அடி கொடுத்து நாயே! நாயே! என திட்டினால் அது கேப்டன்.

டாஸ்மார்க் வாசலில் பூட்டுடன் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் சாதி சான்றிதழ் கேட்டால் அது மருத்துவர் ஐயா!

தன் பிறந்த நாளுக்காக தொண்டர்களிடம் தங்கக் காசு கேட்டு நச்சரித்தால் அவர் திருமா.

வயிற்று வலி வந்தவனையும் வாந்தி,பேதியில் கிடப்பவனையும் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனால் அது வைகோ.

பாம்புக்கும் நோகாமல் குச்சிக்கும் வலிக்காமல் அரசியல் செய்வதுபோல் நடித்தால் அது தா.பாண்டியன்.

இவர் ஜெயித்தாரா? தோத்தாரா? என தெரியும் முன்பே கப்பை தூக்கிக்கொண்டு ஓடினால் அது .சிதம்பரம்.

தமிழ் பெண்களின் தாலியை அறுப்பதை முழு நேர தொழிலாகவும் வெளிநாட்டுக்காரனுக்கு நாட்டை கூறு போட்டு விற்பதை பார்ட் டைம் ஆகவும் செய்தால் அது சோனியா காந்தி.

"
சப்பாணி என யார் கூப்பிட்டாலும் அவுங்க கண்ணத்துல சப்புனு அடிச்சிடு" என புரோகிராம் செய்யப்பட்டும் அமைதியாக இருக்கும் ஹியூமனாய்டு ரோபோ மன்மோகன் சிங்.

MLA
ஆனதை மறந்துவிட்டு ஈமு கோழி விளம்பரத்திலும், பனியன்ஜட்டி, கம்பீ  விளம்பரத்திலும்  நடித்துக் கொண்டிருந்தால் அது சரத்குமார்.

கோயில் மணியை அடிப்பதுபோல் போகிறவன்,வருகிறவன் எல்லாம் அடித்திவிட்டு போனால் அது மதுரை ஆதீனம்

மக்களும், பத்திரிக்கைகளும் பல முறை காறி உமிழ்ந்தாலும் 'அது போன மாசம்,இது இந்த மாசம்' என்றபடியே 15 நாளீல் கூடங்குளம் திறக்கப்படும் என்று பேட்டி கொடுத்தால் அது நாராயண சாமி.

# 2013
ன் அரசியல் கலாட்டா! யாரும் சீரியசா எடுத்துக்காதீங்க!  ஃபிரீயா விடுங்க....

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !

No comments:

Post a Comment