சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 May 2013

அணுகுண்டை விட மோசமான ஆயுதம்???

புதிய தலைமுறை தொலைக் காட்சியில் ஆயுதம் செய்வோம் என்ற நிகழ்ச்சியில் காற்றிலுள்ள ஈரப் பதத்திலிருந்து குடி நீர் யாரிக்கும் முறையினை ஒரு தனியார் நிறுவனம் செயல் முறை விளக்கத்துடன் காட்டினார்கள். இது இயற்கை உணவு உலகம் போன்ற சமூக ஆர்வலர்களின் மனதை சற்று பாதித்து விட்டது என்று சொல்லலாம். இவர்களின் கோரிக்கை நியாயமானது என்றால் பொன் முட்டையிடும்வாத்தினை பேராசை காரணமாக அறுக்கும் செயலுக்கு ஒத்ததாகும். இதைப் பற்றி இயற்கை உணவு உலகம் பின் வரும் விதத்தில் தனது வாதத்தினை இங்கு பதிவு செய்துள்ளது.

அணுகுண்டை விட மோசமான ஆயுதம் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சும் முயற்சி :

நம் வருங்கால சந்ததியினருக்கு காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையாவது விட்டு வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்தப்பதிவை எழுதுகிறோம்.

காற்றில் இருக்கும் ஈரப்பதம் என்றால் என்ன ?
தாவரங்களும் மனிதர்களுக்கும் தண்ணீர் ( ஊற்றினால்) குடித்தால் மட்டும் போதும் உடலில் நீர் சத்து வந்துவிடும் என்று நினைக்கிறோம் ஆனால் அதையும் தாண்டி காற்றில் இருக்கும் ஈரப்பதம் மூலம் தான் தாவரங்களும் பல பெரிய மரங்களும் கூட தண்ணீர் இல்லாமல் இருக்கின்றன.காற்றிலிருந்து கிடைக்கும் ஈரப்பதத்தை வைத்து தான் அவைகள் வாழ்கின்றன.அறிவியல் வளர்ச்சி ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும் சில நேரங்களில் அவைகள் நமக்கு மட்டுமல்ல நம் வருங்கால சந்ததியினருக்கும் பெரும் பாதிப்பை உண்டு  பண்ணுவதாகவே இருக்கிறது.  அந்த வகையில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிஎடுத்து அதை தண்ணீராக 
மாற்றி கொடுக்க வந்திருக்கும் இயந்திரத்தால் நாமும் நம் சமூகமும் அடையும் நன்மை தீமைகள்  பற்றி பார்ப்போம்.

நன்மைகள்.
1.
பாலைவனத்தில் கூட இந்த இயந்திரத்தின் உதவியால் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை  தண்ணீராக மாற்ற முடியும்.
2.
சுத்தமான தண்ணீர் கிடைக்கும்.
3.
எங்கு வேண்டுமானாலும் மின்சாரத்தின் உதவியுடன் இந்த இயந்திரத்தை வைத்து தண்ணீர்  பெற்றுக் கொள்ளலாம்.

தீமைகள் : 

1.
காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் அருகில் இருக்கும் மரம் மற்றும் செடிகள் முழுமையாக பாதிக்கப்படும். இதே நிலை தொடர்ந்தால் அவை காய்ந்து போகக்கூட வாய்ப்புகள்  அதிகம். 

2.
மனிதனின் சருமம் மற்றும் தோல் வரண்டு போக வாய்ப்புகள் அதிகம்.

3.
காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறைவதால் மழை வளம் குறையும்.

4.
ஒரு ஊரில் 100 இயந்திரம் இருப்பதாக வைத்துக்கொண்டால் காற்றில் இருக்கும் ஈரப்பதம் மிக  மிக சிறிய அளவில் தான் குறையும் , ஆனால் நகரத்தை எடுத்துக்கொண்டால் ஆயிரம் அல்லது  லட்சம் இயந்திரங்கள் பயன்படுத்தினால் நகரம் நரகமாக மாறி பாலவனமாகக்கூட மாறும். ஆரம்ப கால கட்டத்திலே இது போன்ற இயந்திரங்களைத் தடை செய்வதற்கு அரசாங்கமும்  மக்களும் முயற்சி செய்ய வேண்டும்.   இது போன்ற இயந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கான படமும் , காற்றில் ஈரப்பதம்  குறைவதால் மனிதருக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பதை அடுத்த படம் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

இயற்கை உணவு உலகம்.
http://naturalfoodworld.wordpress.com/
மேற்கண்ட விடயமாக இயற்கை உணவு உலகம் உடனடியாக தனது ஆதங்கக் குரலை புதிய தலை முறை தொலைக் காட்சியில் பதிவு செய்தது.அதன் விவரத்தையும் அதற்கு புதிய தலை முறை தொலைக் காட்சி அளித்துள்ள பதிலையும் கீழே தந்துள்ளேன். இந்த பதிவு சம்பந்தமாக நம் வாசகர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் இந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யலாம். 

புதியதலைமுறை நிர்வாகத்தினருக்கு வணக்கம் ,

இன்று ( 31-03-2013) பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பானஆயுதம் செய்வோம்நிகழ்ச்சியில்ஒரு தனியார் நிறுவனம்,, காற்றிலுள்ள ஈரப்பதத்தை எடுத்து குடிநீராக்கும் மிஷின் பற்றி விரிவாக கூறி இருந்தது. இது விஷயமாக இயற்கைக்கு மாற்றமாக ஏற்படும் சில பாதகங்களை, சில அடிப்படையான விசயங்களுடன் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1.
காற்றிலுள்ள ஈரப்பதத்தினால் தான் தாவரங்களும் மரங்களும் தண்ணீர் இல்லாமல் கூட பல நாட்கள் உயிர் வாழ்கிறது. இப்படி நாம் காற்றிலுள்ள ஈரப்பத்தை எடுப்பது இயற்கைக்கும்  மரங்களுக்கும் செய்யும் துரோகம் அல்லவா ? மரம் செடிகொடிகளே இல்லாவிட்டால் மனிதனின்  நிலை என்ன ?

2.
வெயில் காலத்தில் கூட காற்றில் இருக்கும் ஈரப்பதத்தினால் தான் நம் உடல் கருவாடு ஆகாமலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலும் இருக்கிறது. இப்படி காற்றிலுள்ள   ஈரப்பதத்தை ஊறிஞ்சுவதால் என்ன நடக்கும் என்பதை நாம் சொல்லத்தேவையில்லை.

3.
கருவேல மரம் என்ற ஒரு மரம் காற்றிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக ஊறிஞ்சுவதால வெளிநாடுகளில் இம்மரத்தை முழுமையாக தடை செய்தே விட்டனர். இப்போது நமக்குத்தெரியும்  காற்றிலுள்ள ஈரப்பத்தின் முக்கியத்துவம்.

4.
அத்துடன் ஈரப்பதத்தை தண்ணீராக்கி கொடுக்கும் மிஷின் பற்றி கூறியவர் பல பெரிய   நிறுவனங்கள் அதிகமான லிட்டர் தண்ணீர் வேண்டும் என்று கேட்கின்றனர் ஆதலால் நாங்கள் பல  மிஷின்களை ஒன்றினைத்து அவர்கள் தேவைக்கான தண்ணீர் கொடுக்க இருக்கிறோம் என்ற  கூறினார். நகரத்தில் இது பொன்ற மிஷின்கள் வந்தால் கண்டிப்பாக நகரம் பாலைவனம் ஆகிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

5.
ஒருவர் தும்மல் செய்யும் போது 40 ஆயிரம் நுன்னிய நச்சுக்கிருமிகள் வெளிவருவதாக  சொல்கின்றனர். இந்த நச்சுக்கிருமிகள் காற்றில் இருப்பதால் , அந்த காற்றில் இருந்து தண்ணீர்  எடுப்பதால் நேரடியாக நச்சுக்கிருமிகளை நம் உடலில் செல்லும் வாய்ப்பும் ஏற்படும் அல்லவா ? கிருமிகளைச்சுத்தப்படுத்தி கொடுப்பதாக இருந்தாலும் நுன்கிருமிகளை எந்த அளவிற்கு கொல்லும்  என்பதை ஆய்வுக்குட்படுத்தித் தான் பார்க்க வேண்டும்.

6.
அரசாங்கமும் உங்களைப்போன்ற சமூக விழிப்புணர்வு கொண்ட மீடியாக்களும் இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதகங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் நம்  நோக்கம். இது போன்ற நிகழ்ச்சிகளை வெளியிடும் போதும் இன்னும் கவனமாக செயல்பட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

இதற்கு புதிய தலைமுறை தொலைக் காட்சி அளித்துள்ள பதில் இதோ:

உங்கள் கருத்துக்கு நன்றி.. இனி வரும் நாட்களில் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கிறோம். தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி.

புதிய தலைமுறை அளித்த இந்தப்பதில் இயற்கை உணவு உலகத்தினர் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கும் திருப்திகரமாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். இவர்கள் புதியதலைமுறை நிர்வாகத்தினருக்கு தனிப்பட்ட முறையில் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment