சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 May 2013

அமெரிக்க "குண்டம்மா”



ஒரு முறை நான் அமெரிக்கா செல்லும்பொது ஜன்னல் சீட் அருகில் அமர்ந்திருந்தேன் அப்போது ஒரு பெரிய உருவம் என் அருகில் வந்து அமர்ந்தது.என்னுடைய சீட்டின் முக்கால்வாசி இடத்தை அடைத்து கொண்டு உட்கார்ந்திருந்தார்.நான் வேறு வழி இல்லாமல் ஜன்னல் ஓரம் ஒண்டிக்கொண்டேன்.

                            


அந்த பெண்மனி என்னை பார்த்து ஹாய் என்றார், நானும் வேண்டாவெறுப்பாக ஹாய் என்றேன்.இந்த அம்மாவோட எப்படி தான் உட்கார்ந்து போவதோ என்று எண்ணியபடி ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு பெரிய கை என் முகத்துக்கு நேராக நீட்டியது என் பெயர் லாரா என்றாள் நான் அமேரிக்கா நீங்களும் அமேரிக்காவா என்றாள்.இல்லை மலேசியா என்றேன் சலிப்போடு. சாரி நீங்க அமெரிக்கான்னு நினைச்சேன் ,இன்னும் 6 மணி நேரம் ஒன்றாக பிரயானம் பண்ணப்போகிறோம் கை கொடுங்க ஜாலியா பேசிட்டே போகலாம் என்றாள்.நானும் வேறி வழி இல்லாமல் கையை நீட்டினேன்.

அந்த அம்மா அவர்களை பத்தி பேச ஆரம்பித்தார்கள் தான் ஒரு டீச்சர் என்றும் தன் மாணவர்களுக்கு நிறைய பொருட்கள் வாங்கி கொண்டு போவதாகவும் தன் குடும்பத்தார் தனக்காக ஏர்போர்டில் காத்து கொண்டு இருப்பார்கள் என்றும் சொல்லிகொண்டே வந்தாள் .நான் எல்லாவற்றிற்கும் ஒரு வரியில் பதில் சொல்லி கொண்டு வந்தேன்.

அவர் பேசும்போது நன்கு படித்தவர் என்பதும் சைக்காலஜி நன்கு தெரிந்தவர் என்பதும் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்படுத்தியது.பணிப்பெண் எங்களுக்கு உணவு கொண்டு வந்தார்.இருவரும் எடுத்து கொண்டோம்.பணிப்பெண்னிடம் உங்கள் இந்த சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்க்ள் என்றார்.பணிப்பெண் சிரித்துக்கொண்டே போனார்.யானை மாதிரி இடத்தை அடைத்து கொண்டு உட்கார்ந்து இருக்கேன் நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள்கிறேன் நீங்கள் ப்ரீயா சாப்பிடுங்கள் என்றார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அந்த பெண் மேல் எரிச்சலடைந்த
நான் இப்போது அவர் பேசபேச சிரித்து ரசித்து கேட்டு கொண்டு வருகிறேன்.

அந்த அம்மா பேசுவதை எல்லாரும் ரசித்து கேட்டு கொண்டு வந்தனர்.ஆரம்பத்தில் அவர் உருவத்தை பார்த்து கேலி செய்தவர்கள் இப்போது அவருடன் ஆவலாக பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் வந்தார்கள்.அந்த விமானத்திலேயே அவர் தான் Centre of attraction .

                              

நீங்கள் உங்கள் உடம்பை குறைக்க எதாவது முயற்சி எடுத்தீர்களா என்று கேட்டேன்.இல்லையே நான் ஏன் என் உடம்பை குறைக்கனும்.குண்டாக இருந்தால் இதய நோய் வரும் அதுனாலத்தான் சொன்னேன் என்றேன்.கண்டிப்பாக கிடையாது ,முழு நேரமும் எடையை பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்களுக்கு தான் இதய நோய் வரும்.

விளம்பரங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்உங்கள் உடல் குண்டாக இருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மையா எங்களிடம் வாருங்கள்என்று விளம்பரப்படுத்துவார்கள்.நான் பிறக்கும்போதே குண்டாக பிறந்தேன் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன் நன்றாக நடக்கிறேன்.எனக்கு எந்த கவலையும் கிடையாது.எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது உடல் இடையை குறைக்க நான் ஏன் என் நேரத்தை வீணடிக்க வேண்டும்.

மற்றவர்கள் தான் என்னை பார்க்கும்போது குண்டு என்றும் சோம்பேறியாக இருப்பாள் என்றும் நினைக்கிறார்கள்.நான் உடல் அளவில் தான் பெரியவள் ஆனால் மனதளவில் நான் குழந்தை.உங்களைவிட எனக்கு மனதளவில் தைரியம் ஜாஸ்தி.


உங்கள் பின்னாடி ஆண்கள் துரத்தி இருக்கிறார்களா என்று விளையாட்டாக கேட்டேன்.ஆமாம் துரத்தி இருக்கிறார்கள் என்றார்.நிறைய ஆண்கள் உருவத்தை பார்ப்பதில்லை மனதை மட்டுமே பார்ப்பவர்கள்.எனக்கு திருமணம் ஆகிவிட்டது இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர் என்றார்.நான் டீச்சராக இல்லாமல் இருந்தால் பெரிய ஆலோசகராக மாறி இருப்பேன்.நிறைய ஆண்கள் என்னிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள்.

கடவுள் எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார் அதை என் பெரிய உருவத்தில் வைத்து மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.என் எடையை குறைத்து என் சந்தோஷத்தை நான் இழக்க விரும்பவில்லை.நிறைய பெண்கள் திருமணத்திற்கு பிறகு குண்டாகி விடுகிறார்கள் அதற்காக அவர்கள் கணவர்கள் அவர்களை வெறுப்பதில்லை.

லாரா பேச்சை கேட்டு விமானத்தில் இருந்த அனைவரும் கை தட்டினர்.விமானம் தரை இறங்கியதும் லாராவை அழைத்து செல்ல பெரிய உருவம் கொண்ட அவர் உறவினர்கள் வந்திருந்தனர்.பயணம் செய்த அனைவரும் லாராவுக்கு டாட்டா காட்டி வழி அனுப்பி வைத்தனர்.லாரா போகும்போது என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றாள்.

நான் பார்த்த பெண்களிலே இவளை போன்று ஒரு அழகியை பர்த்தது இல்லை என்று என் மனம் சொல்லியது.

நண்பர்களே பெண்களின் உடலை பார்க்காதீர்கள் உள்ளத்தை மற்றும் பாருங்கள்.உடல் பருமன் ஒரு குறை அல்ல.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !


No comments:

Post a Comment