சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 May 2013

அடுத்து என்ன செய்வது?



இன்று பன்னிரெண்டாம் வகுப்பு  மாணவ மாணவிகளுக்கு ரிசல்ட்.ஒவ்வொருவரும் பல கனவுகளோடு ரிசல்டை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள்.நண்பர்களுடன் சேர்ந்து  கொண்டு நெட் சென்டர்களுக்கும், தான் படித்த பள்ளியிலும் ரிசல்ட்டுக்காக காத்து இருப்பார்கள்.பள்ளி முதல் மதிப்பெண் பெற்றவனை கொண்டாடுவார்கள. அதிலும் மாணவிகள் தான் அநேகமாக முதல் மதிப்பெண் எடுப்பார்கள்

                               


 அடுத்து என்ன செய்வது? என்று  நகர்புற மாணவ மாணவிகளுக்கு தெரியும்.மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு அல்லது மற்ற மேற்படிப்புகளுக்கு தயார் ஆவார்கள். ஆனால் கிராம புற மாணவ மாணவிகளுக்கு கடந்த சில வருடங்களாக தான்  அந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன.  "தினமலர், தினத்தந்தி, தினகரன், போன்ற நாளிதழ்களும் மற்ற சமூக சேவை அமைப்புகளும் நடத்தும் பல நிகழ்ச்சிகளால் இப்போது கிராமப்புற மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என தெரிந்து கொள்கின்றனர்.

மருத்துவ,மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் முடியும் வரை இந்த பரபரப்பு  இருக்கும்.பின் அடுத்த வருட தேர்வு முடிவுகள் வெளியிடும் போதுதான் மாணவர்களின் நினைவு வரும். கடந்த இரண்டு வருடங்களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?
எப்படி இருக்கிறார்கள்? என்று யாரும் நினைத்து பார்ப்பது கிடையாது. மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களே கண்டுகொள்ள படாத நிலையில் 
தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலைமை என்ன?

வருடா வருடம் தேர்வு முடிவுகளுக்கு பின் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்க்கு காரணம் இந்த சமூகம்தான். தன் மகனை, அல்லது மகளை மதிப்பெண் வாங்கும் மெஷினாக பார்ப்பது, அதிக மதிப்பெண் எடுத்தால் தான் நல்ல வேலைக்கு போக முடியும் என்று டார்ச்சர் செய்வது,தேர்வில் வெற்றி பெற்ற மாணவனோடு ஒப்பிட்டு பேசி அவமான படுத்துவதும் மாணவர்களை இத்தகைய முடிவுகளை நோக்கி தள்ளுகிறது. இந்த கட்டுரையை எழுதி முடிப்பதற்குள் இணையத்தில் கீழ்க்காணும் இரண்டு செய்திகள் வந்து என்னை கவலை கொள்ள செய்து விட்டன. எது இனிமேல் நடக்ககூடாது என்று நினைக்கிறோமோ? அதுவே வெகு சீக்கிரம் நடக்கிறது.

பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. 
 
                        

தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார் சிந்துஜா. டாக்டர் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்று பெரும் வருத்தமடைந்தார். 

இந்த நிலையில் திடீரென வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டார் சிந்துஜா. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் மாணவி தற்கொலை.  இதேபோல் கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி 990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த கட்டுரையை எழுதும் நான் ஒன்றும் மெத்த படித்தவன் அல்ல. எங்கள் ஊரில் என்னோடு மூன்று பேர் +2 படித்தனர். நான் என் நண்பர்கள் மற்றொரு பெண்ணும் படித்தோம். அதில் நான் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. என் நண்பர்கள் இரண்டு பேர் கல்லூரியில் சேர்ந்தனர். தோழி திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். தேர்ச்சி பெறாதா நான் அவர்களை விட இன்று நல்ல வேலையிலும், நல்ல நிலையிலும் உள்ளேன். அதனால் தேர்வில் தோல்வியடைவது என்பது யாரும் செய்யக்கூடாத குற்றம் அல்ல. தவறும் அல்ல.

 அதனால் நம் வாழ்க்கையில் சில வசதிகளை நாம் பெறப்போவதில்லை. அவ்வளவே. எனவே தோல்வியை கண்டு பயந்து ஒதுங்கிவிடாமல் தோல்வி நம்மை விட்டு விலகி செல்ல இன்னும் வேகத்துடன் உழைத்து " உங்கள் வாழ்வில் " முன்னேறுங்கள். அதற்க்கு  என்னுடைய வாழ்த்துக்கள். 

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !


No comments:

Post a Comment