சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Apr 2014

ரஜினிக்கு அடுத்து விஜய்.சில காரணங்களால் என்னால் தொடர்ந்து வலைபதிவில் பதிவு செய்ய முடியவில்லை.தற்போது இந்த ஏப்ரல் முதல் புத்தம் புதிய பொலிவுடன் வருகிறது உங்கள் "விஸ்வரூபம்"

கடந்த ஞாயிறு அன்று சென்னை வந்த மோடி ரஜினியை சந்தித்த மோடி அவர் நினைத்தது நடக்காததால் அடுத்து ஒரு சினிமா நடிகரை சந்திக்கிறார்.

இன்று மீண்டும் தமிழகம் வரும் மோடி மாலை நான்கு மணியளவில் கிருஷ்ணகிரி - பர்கூர் நெடுஞ்சாலை கந்திகுப்பம் அருகே பா.ம.க.தலைவர் மணியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பின்னர் சேலம் இரும்பாலை மைதானத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் L.K.சுதிசை ஆதரித்து பேசுகிறார். அந்த பொது கூட்டத்தில் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என தெரிகிறது.

அடுத்து ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்லும் மோடி கோவை - அவினாசி சாலையிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் தங்குகிறார்.

அங்கு தான் அவர் நடிகர் விஜயை சந்தித்து பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.


 
       
இதனிடையே இந்த சந்திப்பு குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ள நடிகர் விஜய் " மிகப்பெரிய தலைவரான மோடி அவர்கள் என்னை சந்திக்க விரும்பினார்.அவரது விருப்பத்தை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கிறேன். இந்த சந்திப்புக்கும், அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனபதை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.


No comments:

Post a Comment