சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Apr 2014

நவீன கிருஷ்ணர் - நிதிஷ் பரத்வாஜ்



ராமாராவ் அவர்களுக்கு பின் கிருஷ்ணர் வேடம் பூண்டு புகழ் பெற்றவர்களில் ஒருவர் நடிகர் நிதிஷ் பரத்வாஜ். நடிப்பு முதலில் இவருக்கு பொழுதுபோக்காகத்தான் இருந்தது. இவர் படித்தது கால்நடை டாக்டர் படிப்புக்கு. சிறுவயதிலேயே மராத்தி நாடகங்களை இயக்கி நடித்து பெயர் வாங்கி இருக்கிறார். ஒருசில இந்தி சினிமாக்களிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்திருந்தாலும் மகாபாரதம் தொடரில் கிருஷ்ணர் வேடம் அணிந்து நடித்தபோதுதான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.



மகாபாரதத்தின் இயக்குனர்.பி.ஆர்.சோப்ரா முதலில் விதுரர் வேடத்திற்க்கு தான் அழைத்தார். ஆனால் அவருக்கே திருப்தி இல்லாமல் நிதிஷ் பரத்வாஜை பல வேடங்கள் கொடுத்து பார்த்து விட்டு இறுதியாக தான் கிருஷ்ணர் வேடத்தை கொடுத்தார். பின்னர் நிதிஷ் பரத்வாஜ் கிருஷ்ணர் வேடத்திற்காக நிறைய உழைத்தார். குரு, வழிக்காட்டி, தேரொட்டி, காதலன், சகோதரன், ஆலோசகர், என பல குணாதிசயங்களை உடைய கிருஷ்ணராக நடிக்க பல நூல்களை படித்து அறிந்து கொண்டார். ஆனாலும் தன்னுடைய தனிப்பட்ட குணாதிசயங்களை மாற்றிக் கொள்ளவில்லை. எப்போதும் போல் பார்ட்டிகளில் பங்கேற்றார். நடனம் ஆடினார். இயற்கையாகவே இவர் மது, புகைபழக்கம் இல்லை என்பதால் அவருக்கு அது ஒரு பிரச்சனையாக இல்லை.



மகாபாரதம் தொடரில் நடித்த பின் இவருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. காதல் கடிதங்கள், கல்யாணத்திற்க்கு விரும்பும் கடிதங்கள், எல்லாம் அதில் இருந்தன. பரோடாவில் இருந்து வந்த இளம்பெண் ஒருவர் நான் உங்களுடன் வாழ விரும்புகிறேண் என்றார். மனிதர்கள் பெரும்பாலும் இன்று பார்க்கும் மனிதர்களை நாளையே மறந்துவிடுகிறார்கள்.ஆனால் மகாபாரதம் தொடரில் கிருஷ்ணராக நடித்த நிதிஷ் பரத்வாஜை மக்கள் என்றும் மறப்பதில்லை.

நிதிஷ் பரத்வாஜ் தன் முதல் மனைவி மோனிஷாவுடன் லண்டன் சென்றார். அவர் பரத நாட்டிய கலைஞர்.அங்கு நடன பள்ளி மற்றும் நாட்டிய பள்ளியை  தொடங்கினார்கள். பின்பு இந்தியா திரும்பிய நிதிஷ் அரசியலில் இறங்கினார்.பாரதீய கட்சியில் இணைந்து எம்.பி.ஆனார். ஆனால் சீக்கிரமே அவருக்கு அரசியல் வெறுத்துவிட்டது. அதை பற்றி கூறும் நிதிஷ் " நான் வாழும் சமூகத்திற்க்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்க முடிவு செய்தேன். அரசியலில் நான் வெளியே இருந்து பார்ப்பது வேறு.உள்ளே நடப்பது வேறு. அரசியலில் அடிமைகள் மிக அதிகம். மனசாட்சியை அடமானம் வைத்து அப்படி ஒரு அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. அதனால் நான் தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டேன்" என்கிறார்.

தற்போது நிதிஷ் இயக்குனர் வேடம் ஏற்று இருக்கிறார். இயக்குனர் ஆசை பற்றி கூறும் போது " சினிமாவை இயக்கும் ஆசை எனக்கு முன்பே உண்டு. இன்போசிஸ் நிறுவனர் நாரயணமூர்த்தியின் மனைவி சுதாமூர்த்தி கன்னட மொழியில் எழுதிய கதையை, மராத்தி மொழி சினிமாவாக நடக்கிறேன். சமூகத்தால் எவ்வளவோ இன்னல்களை எதிர்கொள்ளும் பெண், தன்னம்பிக்கையை மட்டும் மூலதனமாக கொண்டு வாழ்ந்து காட்டுவதுதான் கதை. தனுஜா கதாநாயகியாக நடிக்கிறார். நான் முப்பது வயது பெண்ணை கதாநாயகியாக்கிருக்கிறேன். தொடர்ந்து நடிக்கவும் விரும்புகிறேன்.



நிதிஷ் பரத்வாஜின் அம்மாதான் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார். கிருஷ்ணரை நினைத்து தியானம் செய்யும் அனைவரது சிந்தையிலும் வருவது தான் பிரசவித்த மகன் அல்லவா! இந்த கிருஷ்ணரை பெற்றெடுத்த தாயாக பூரிப்பில் புல்லரித்து போய் இருக்கிறார் நிதிஷின் தாயார்.

நிதிஷ் பரத்வாஜ் தற்போது தன் இரண்டாவது மனைவி ஸ்மிதா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கிருஷ்ணருக்கு ஏற்ற ராதையாக ஸ்மிதா வாழ்ந்து வருவதால் இவர்கள் வாழ்க்கை கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment