சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Apr 2014

ஸ்வீட் கிரேவிங் - சஞ்சனா கேக் தேவதையின் கனவுகள்


எங்கே கேக் ஷாப்? என்று தேடி அலைந்து தோழிகளுடன் சேர்ந்து வாங்கி அரட்டையடித்து சாப்பிடும் கல்லூரி மாணவிகளுக்கு மத்தியில் கோவை ஜி.ஆர்.டி.கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவியான சஞ்சனா தானே பல வகையான கேக்குகளை தயாரித்து பேஸ்புக்கில் விளம்பரபடுத்தி விற்பனை செய்து பணமும் சம்பாதித்து கொண்டு இருக்கிறார். பணத்தை விரயம் செய்யும் பெண்களுக்கு மத்தியில் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் பெண்களுக்கு மத்தியில் மாணவி சஞ்சனா வித்தியாசமான பெண்தானே!!! மேலும் அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தானே?

           
Baribe girl Cake 
கோவை சிவானந்தா காலனியில் பெற்றோர் சிவக்குமார் - சாந்தியுடன் வசித்து வருகிறார். மேலும் அவர் கூறியதாவது " 15 வயதில் தன்னுடைய முதல் கேக்கை தயாரித்து இருக்கிறார். அந்த வயதிலேயே கலர் கலராக கேக் தயாரிப்பதில் தான் ஆர்வம் இருந்தது.எனக்கு தெரிந்த முறையில் கேக்கை தயாரித்து தன் உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாட்களின் போது அன்பளிப்பாக வழங்கினேன். அதை சாப்பிட்டவர்கள் " அருமையான ருசியுடன் இருக்கிறது. இதையே நீ ஒரு தொழிலாக செய்தால் என்ன என்று ஊக்க படுத்த வீட்டிலேயே கேக்கை தயாரித்து விற்பனை செய்ய முன் வந்தேன்.

 




என் சிறு வயது முதல் சேமித்த பணம் பத்தாயிரத்தை இதற்காக முதலீடு செய்தேன். என் அப்பா என் முயற்சிக்கு துணையாக இருந்தார்.அவரின் மூலம் கேக் தயாரிக்க தேவையான இயந்திரங்களை மும்பையிலிருந்து வாங்கி வந்தேன். நான்  முதலாவதாக தயாரித்த கேக்குக்கு " பிளாக் அவுட் " என்று பெயரிட்டேன். அதற்க்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சியை தொடர்ந்து விடாமல் கோவையில் நடைபெற்ற கண்காட்சிகளில் விற்பனை ஸ்டாலை அமைத்து என் கேக் வகைகளை பிரபலபடுத்தினேன். அதுபோக பேஸ்புக்கில் " ஸ்வீட் கிரேவிங் " என்ற பெயரில் ஒரு பிசினஸ் பேஜ் தொடங்கி என் கேக் வகைகளை படங்களாக பதிவேற்றினேன். அதுவே என் கேக் வகைகள் பிரபலமாகவும் விற்பனை சூடுபிடிக்கவும் காரணமாயிற்று.

உடனே அதிக அளவிலான கேக் வகைகளை தயாரிக்க தொடங்கினேன். ராஸ்பெரி, பிலாஸ்டர், ட்விஸ்ட் , நட்டி கேரமல் நோகேட், பிளாக் பாரஸ்ட் , பைனாப்பிள் பேஸ்ட் , பீட்ஸ்ப்ரெலைன் போன்ற விதவிதமான கேக் வகைகளை உருவாக்கினேன். அவை நாம் சாதாரணமாக பேக்கரிகளில் கிடைக்கும் கேக் வகைகளைவிட விலை அதிகம் தான் என்றாலும் நிறைய பேர் விரும்பி வாங்குகிறார்கள்.பெரியவர்களை விட குழந்தைகளை அதிகம் கவரும் வகையில் கேக்குகளை தயாரிக்கிறேன். ஆங்கிரி பேர்ட்ஸ், சோட்டா பீம் , டோரா போன்ற குழந்தகளுக்கு பிடித்த கார்ட்டூன் வடிவங்களில் கேக் வடிவமைப்பதால் அவை குழந்தகளுக்கு மிகவும் பிடிக்கிறது. அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் என்ன வடிவத்தில் கேட்கிறாரோ அந்த வடிவத்தில் கொடுக்கவும் என்னால் முடியும் .



கேக் தயாரிப்பதற்க்கு மைதா, சர்க்கரை , வெண்ணை ,வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர், ஆகியவை முக்கியத்தேவை. இந்த பொருட்களை சரியான விகிதத்தில் கலப்பதில் தான் முக்கியமான விஷயமே. அப்படி கலந்தால் கேக்கின் சுவையும், ருசியும் நன்றாக அமையும். கேக் தயாரிப்பில் பாண்டண்டண்ட் சுகர் கிராப்ட் என்ற தொழில் நுட்பம் முக்கியமானது. இது சர்க்கரையை கொண்டு தயார் செய்வது, பார்ப்பதற்க்கு மைதா மாவினை போல இருக்கும். சுவைக்கும் போது தித்திப்பாக இனிக்கும். என் அக்கா ஹரிணி மூலமாக அமெரிக்காவில் இருந்து கேக் தயாரிக்க பயன்படுத்தும் சாய பொருட்களை இறக்குமதி செய்கிறேன். அதில் தயாரிக்கும் கேக்கை சாப்பிடும் போது அந்த சாயம் கை, நாக்கில் ஒட்டாது. அதேபோல் வெண்ணைக்கு பதிலாக மார்ஜரின் என்ற பொருளை சிலர் பயன்படுத்திகிறார்கள். ஆனால் அதை நான் பயன்படுத்த மாட்டேன்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய கேக்கையும், சைவப் பிரியர்களுக்காக முட்டை சேர்க்காத கேக்கையும் தயாரிக்கிறேன். இது தவிர என்னுடைய ஸ்பெஷல் தயாரிப்பு கம்ப்யூட்டர் மூலம்  போட்டோ பிரிண்டட் கேக் வகைகளையும் தயாரித்து கொடுக்க முடியும். இதன் மூலம் தலைவர்களின் உருவங்கள், புதுமண தம்பதியர்களின் உருவங்களையும் கேக்கில் பதித்து கொடுக்க முடியும்.அதற்காக சாயங்கள் கொஞ்சம் அதிகம் கலக்க வேண்டி இருப்பதால் கேக்கின் சுவை கொஞ்சம் மாறுபடும். இப்போது பட்டர் ஸ்காட்ஸ் , பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட் போன்ற கேக் வகைகளைத்தான் பலரும் விரும்பி வாங்குகிறார்கள். இது என் தொழில் என்றாலும் படிக்கும் நேரம் போக தினமும் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு மட்டுமே ஆர்டர் எடுத்து கொள்கிறேன்" என்றார்.


19 வயது மாணவியான சஞ்சனா கல்லூரியில் மாணவி என்றாலும் கேக் தயாரிப்பு துறையில் ஆசிரியை.விரும்புகிறவர்களுக்கு கேக் தயாரிக்கும் பயிற்சியும் கொடுக்கிறார்.பயிற்சிக்கான அறிவிப்பை பேஸ்புக் மூலம் வெளியிடுகிறார்.முதலில் கப்கேக் தயாரிக்க கற்று கொடுக்கிறார்.இவரிடம் வெளிநாட்டில் இருந்து வந்தும் கேக் தயாரிப்புக்கான பயிற்சியை எடுத்து கொண்டு செல்கிறார்கள். தற்போது கேக் விற்பனை மூலம் படித்து கொண்டே மாதம் 19 ஆயிரம் சம்பாதிக்கும் சஞ்சனா " பெண்கள் திறமையும், கலை நயமும் கொண்டவர்கள். அவர்களால் சுய தொழிலை கற்று கொண்டு வீட்டில் இருந்த படியே தங்களின் தேவைக்கு சம்பாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார். இனி நீங்கள் எப்போதாவது கேக் சாப்பிட்டால் மாணவி சஞ்சனாவின் நினைவு வரமால் போகாதுதானே?

இங்கு முக்கியமான ஒரு வேண்டுகோளை " விஸ்வருபம் " உங்கள் முன் வைக்கிறது. நீங்கள் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பின் உங்கள் அருகில் வசிக்கும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் , வறுமை , மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாணவி சஞ்சனாவை பற்றியும் அவரது பயிற்சி வகுப்பினை பற்றி கூறி அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள். இதனால் ஒருவருடைய வாழ்க்கையில் மாற்றம் வந்தாலும் இந்த கட்டுரையை எழுதிய எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

சஞ்சனாவின் லட்சியம் லண்டன் சென்று கேக் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை கற்று கொண்டு கோவையில் உலகத்தரத்துடன் கூடிய கேக் மையத்தை தொடங்குவது தான். விரைவில் அவரது எண்ணம் நிறைவேறி நாமும் அவரது கேக் ஷாப்பில் அமர்ந்து மாணவி சஞ்சனாவின் கேக் வகைகளை ஒரு ருசி பார்ப்போம்.


No comments:

Post a Comment