காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள்
கடலில் காணப்பட்டதாக ஆஸ்திரேலியா தகவல் அளித்துள்ளது.
கடந்த மார்ஸ் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து
பெய்ஜிங் சென்ற மலேசிய விமானம் காணாமல் போனது. அது இந்திய கடலில் நொறுங்கி விழுந்து
நொறுங்கி இருக்கலாம் என கருதி உலக நாடுகள் தேடுதல் வேட்டையை தொடங்கின.
ஒரு மாதம் ஆகியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அதன்
பின்னர் கடந்த வாரம் ஆஸ்திரேலியா 27 வருடங்களுக்கு முன் பனிமலையில் மோதி கடலில் மூழ்கிய
"டைட்டானிக்" கப்பலை தேடிய சைட் ஸ்கேன் சோனார் தொழில் நுட்பத்தில் தேட ஆஸ்திரேலிய அரசு முடிவு
செய்தது. தற்போது மலேசிய விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப் பட்டதாக ஆஸ்திரேலியா
அறிவித்தது.
செயற்கைக்கோள் படத்தில் கடலில் விழுந்த மலேசிய
விமானத்தின் உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டதாகவும், அவை தற்போது தேடிக்கொண்டிருக்கும்
இடத்திலிருந்து ஐயாயிரம் கடல் மைல் தொலைவில் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் டேவிட் ஜான்ஸ்ட்டன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment