சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Apr 2014

கல்லூரி காதல் - இன்றைய இளைய தலைமுறையினரின் நிலை.


இன்றைய சினிமா நம் கலாச்சாரத்தை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பதை கல்லூரியில் படிக்கும் மாணவர், மாணவிகளை பார்த்தாலே தெரிந்துவிடும். அப்பா கடன் வாங்கி கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்து சேர்த்து விட்டால் அவர்கள் கல்லூரி சென்றதும் முதலில் பார்ப்பது எதிர் பாலினரைத்தான். பசங்க கேர்ள் பிரெண்ட் இருக்க வேண்டும் என்பதை கவுரவ பிரச்சனையாக நினைக்கிறார்கள். இங்கு பிரெண்ட் என்பதை " நட்பு" என்று நீங்கள் நினைத்தால் ( சொல்வதற்க்கு மன்னிக்கவும் ) நீங்கள் தான் இந்த உலகின் மிக முக்கியமான முட்டாள். ஒரு பெண்ணும் பையனும் நட்பாக இருக்க முடியாது என்பது இந்த காலத்தில் நடக்கவே நடக்காது. அப்படி இருந்தாலும் உடன் இருக்கும் நண்பர்கள் அல்லது இந்த சமூகம் , இவை எல்லாவற்றையும் விட இன்றைய இளவட்டத்தினரின் மிக முக்கியமான நண்பனான மீடியாவின் வழிகாட்டுதலில் அவர்கள் தங்கள் சுய கட்டுப்பாட்டை இழந்து தான் போகிறார்கள்.

                    



ஒரு பையன் காலேஜ் போனதும் தன் கிளாஸ் ( வகுப்பறை தாங்க - எத சொன்னாலும் வில்லங்கமாக தெரியுது இந்த கட்டுரைக்கு ) தேடிகிறானோ இல்லையோ தனக்கு ஏற்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வதே அவனது தலையாய வேலையாக இருக்கிறது. அப்படி ஒரு பெண்ணை பார்த்ததும் அவளுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என தெரிந்து கொண்டு தன் நடை , உடை, ஸ்டைல் என எல்லாவற்றையும் மாற்றுகிறான். நல்லவேளையாக அவன் அப்பா, அம்மாவை மாற்ற வேண்டும் என்று யோசிப்பதில்லை.ஏனென்றால் அவர்கள் இல்லையென்றால் காசு வராதே?

பெண்களை கவர வேண்டும் என்ற எண்ணம் ஆண்களிடம் மிக அதிகமாக இருக்கிறது.அழகான பெண்களை " மடக்குவது " என்பது தனக்கு கைவந்த கலை என்று நினைத்து வேண்டாத வீபரீத விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் உயிரிழந்தவர்களும் உண்டு. ஆனாலும் இன்றைய பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. பாய்பிரெண்ட் விஷயத்தில் கவனமாகவே இருக்கிறார்கள். தங்கள் பின்னால் வரும் ஆண்களை அவர்கள் பார்க்காதது போல்தான் இருக்கும். ஆனால் அவன் ஆதி முதல் அந்தம் வரை "நோட்" செய்துவிட்டு கொஞ்சம் பந்தா காட்டிவிட்டு எந்த பையனின் "பர்ஸ்" கனமாக இருக்கிறதோ அவனை தேர்தெடுக்கும் கில்லாடி பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை உணர்ந்து பசங்களும் தங்களின் நிலையை மற்ற பசங்களை விட உயர்த்தி கொள்ள வீட்டில் அடம்பிடித்து அப்பா கடன் வாங்கி கொடுக்கும் காசில் " காஸ்ட்லி மொபைல் " காஸ்ட்லி பைக் " காஸ்ட்லி துணிகள் " என வலம் வருகிறார்கள்.

               

நன்றாக செலவழிக்கும் பையனின் பின்னால் ஒரு கூட்டமே இருக்கும்.அவர்களுக்கு எல்லாம் அவன் தான் அறிவிக்கப்படாத தலைவன். அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பான். சிலருக்கு ரூம், சிலருக்கு சாப்பாடு செலவு, சிலருக்கு காலேஜ் பீஸ் கூட கட்ட வேண்டும். அப்போது தானே அவன் பெண்களிடம் ஹீரோவாக தெரிவான். பெற்றொற் கஷ்டப்பட்டு மகனை படிக்க வைப்பது போன்ற சினிமா காட்சிகளை பார்க்கும் போது கூட தன் தாய் தந்தையின் நினைவு வராது நம் ஹீரோவுக்கு. ஏனென்றால் இவன் தான் மிகவும் பணக்காரனாக நடித்து கொண்டு இருக்கிறானே. தன் அப்பா ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பதாகவோ அல்லது வேறு எதாவது பொய்யை சொல்லியிருப்பான். இப்படித்தான் இருக்கிறது இன்றைய கல்லூடி மாணவர்களின் வாழ்க்கை.

இதற்க்கு காரணம் இன்று வரும் சினிமாக்கள் தான். நான் எல்லா படங்களையும் சொல்லவில்லை. முந்நூறு வருட பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை சொன்ன " கும்கி " போன்ற படங்களும் வரத்தான் செய்கிறது. ஆனால் நம் ஆட்கள் அந்த படத்து சென்று " சொய், சொய் " பாடலுக்கு ஆடி தீர்த்து விட்டு தான் வருகிறார்களே தவிர அதில் சொன்ன கருத்தை யாரும் யோசிப்பதில்லை. இதை நான் எதற்கோ எழுத ஆரம்பித்து எங்கோ என்னை இழுத்து வந்துவிட்டது என் எண்ணங்கள். அவ்வளவு துயரத்தில் இருக்கிறது என் மனம். காரணம்?

என் நெருங்கிய நண்பனின் தம்பி ஒருவனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் தான் என்னை தற்போது வெகுவாக பாதித்து விட்டது. அவன் பள்ளி பருவத்திலேயே சுமாரான படிப்பு ஆர்வம் உள்ளவன். ஆனாலும் எப்படியோ பிளஸ் டூ பாஸ் செய்து காலேஜில் சேர மிக ஆர்வமாக இருந்தான். மிக குறைந்த மார்க்கே எடுத்திருந்த போதும் மேலும் படித்தே தீருவேன் என்று அடம்பிடித்து 50 கிலோமீட்டர் தள்ளியுள்ள ஒரு நகரத்தில் கல்லூரியில் சேர்ந்தான்.முதல் வருடம் ஒழுங்காக சென்று வந்தவன் அடுத்த வருடம் அவனின் பழக்கங்கள் மாறியது. இரவு நேரம் கழித்து வர ஆரம்பித்தான். கேட்டால் பார்ட் டைம் ஜாப் பார்க்கிறேன் என்றான். ஆனால் வாங்கும் சம்பளம் போக வீட்டிலும் வாங்கி செலவு செய்தான். இரண்டாம் வருடம் பாதி முடிந்த நிலையில் கல்லூரியில் இருந்து பெற்றோரை அழைத்திருக்கிறார்கள். பதறியடித்து தன் அப்பா அம்மாவை கூட்டி கொண்டு கல்லூரிக்கு சென்றிருக்கிறான் என் நண்பன்.

               

அங்கு அவன் தம்பியுடன் ஒரு பெண்ணும் இணைத்து பேசப்பட பெற்றோரும் என் நண்பனும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். நடந்தது என்னவென்றால் அந்த பெண்ணை காதலித்து அவளுக்கு செலவு செய்ய பார்ட் டைம் ஜாப்பில் சம்பாதித்து காலேஜ்க்கு கட் அடித்து விட்டு ஊர் சுற்றியிருக்கிறார்கள். பிரச்சனை ஆன அன்று கிளாஸில் அந்த பெண் தொடர்ந்து வாந்தியெடுக்க சந்தேகமடைந்த ஆசிரியை கூப்பிட்டு மிரட்டி விசாரிக்க உண்மை வெளிவந்து விட்டது. பின் பெண்ணின் பெற்றோரும் வர கல்லூரி நிர்வாகம் இருவரையும் கல்லூரியை விட்டு நீக்கியது. இப்போது இருவரின் எதிர்காலமும் கேள்விக்குறிதான்.

தற்போது அந்த பெண்ணும் அவன் வீட்டிலேயே இருக்கிறாள். திருமணம் ஆகாத என் நண்பன் வயதான பெற்றோரையும் பார்த்துக் கொண்டு தன் தம்பிக்கும் அந்த பெண்ணுக்கும் சேர்த்து இப்போது உழைக்கிறான். அவனின் நிலை இனி என்ன ஆகும்? அந்த இருவரின் நிலையும் என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.
இன்றைய கல்லூரி பசங்களை பார்த்து நான் பலமுறை பெருமை பட்டு இருக்கிறேன். நமக்கு கிடைக்காத தொழில் நுட்பம் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதை முறையாக பயன்படுத்தி தங்கள் அறிவை வளர்த்து கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது இவனை போன்ற மாணவர்களும் நம் கண்முன் வந்து நம் நம்பிக்கையை தளர்த்துகிறார்கள்.

எனவே பெற்றோர்களே உங்கள் மகன், மகளிடம் தாய், தந்தை என்ற உறவில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு அவர்களின் நண்பர்களில் ஒருவராக உங்களையும் நினைக்கும் படி அவர்களுடன்  நடந்து கொண்டு அவர்கள் தங்கள் பாதையில் இருந்து விலகும் போது உடன் இருந்து அவர்கள் போகும் தவறான பாதையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை சரியான பாதைக்கு திருப்புங்கள். அவர்களின் வளமான வாழ்வுக்கு உங்களை விட்டால் வேறு யாராலும் நல்ல அடித்தளம் அமைக்க முடியாது.



No comments:

Post a Comment