சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Apr 2014

காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்குள் தேட புதிய தொழிநுட்பம்.



கடந்த மார்ச் 8 ஆம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து  பெய்ஜிங் சென்ற மலேசிய  விமானம் தீடிரென்று காணாமல் போனது. 48 நாட்கள் கடந்த பிறகும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
தினம் தினம் புதுபுது வதந்திகள் மட்டும் பரவி வருகிறது.




இந்த விமானம் இந்தியபெருங்கடலின்  தெற்கு பகுதியில் விழுந்து நொருங்கியதாக கருதப்படுவதால் பல நாடுகள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர்.எனினும் இன்னும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.



மாயமான விமானத்தின் பிளாக் பாக்ஸில் இருந்து பின் எனப்படும் சமிக்கைகள் ஏப்ரல் 8ஆம் தேதி கிடைக்க பட்டதால் அமெரிக்காவின் புளுபின் -21 என்ற நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்த பட்டது.இந்த முறையில் பத்துக்கும் மேற்பட்ட முறை முயற்சி செய்தும் விமானத்தை பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.



அதனால் அடுத்த முயற்சியாக டைட்டானிக் கப்பலை கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு தேடிய அதே தொழில் நுட்பத்தில் தேட ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. சைட் ஸ்கேன் சோனார் முறையில் தேட முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய  பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் ஜான்ஸ்ட்டன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment