சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Apr 2014

கோச்சடையான் வெளியீடு எப்போது?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் " கோச்சடையான்திரைப்படம் எப்போது வெளியாகும் என இந்திய திரை  உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் உடல்நிலை சரியானபின் நடிக்கும் படம் என்பதால் எதிர் பார்ப்பு அதிகமாக உள்ளது.கோச்சடையான் திரைப்படம்  ஹாலிவுட்டின்" அவதார் " திரைப்படத்தை போல எடுக்க படுகிறது. மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைக்க போகிறது. சௌந்தர்யாவின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இன்னும் சரத்குமார், ஆதி என பல நட்ச்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

கோச்சடையான் படத்தை பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறும் போது" மோஷன் கேபசரிங் டெக்னாலஜியை பயன்படுத்தி  எந்தவொரு நடிகரின் நடிப்பையும் துல்லியமாக பதிவு  செய்ய முடியும் என்பதை நிருபிக்கவே, கடந்த ஆறு ஆண்டுகளாக இரவு பகல் பாராமல் கோச்சடையான் படத்துக்காக உழைத்து வருகிறேன். என் சின்ன வயதில் என் அப்பா தான் எனக்கு ஹீரோ. அவரை அப்போது நான் எப்படி பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படிதான் கோச்சடையானில் அவரை உருவாக்கியுள்ளேன்.

இந்த படத்தில் என் தந்தை ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதுவரை பார்க்காத ரஜினியை இந்த படத்தில் பார்க்கலாம். கோச்சடையானின் ஆடியோ ரிலிஸ் ஆனதுமே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. கோச்சடையான்  விரைவில் உலகம் முழுவதும் 9 மொழிகளில் வெளியாகும் என்றார்.ஒரு நடிகர் இருக்கும் உயிருடன் இருக்கும் போதே அவரை அனிமேஷன் தொழில்நுட்பத்தில் படம் எடுப்பது இதுவே முதல் முறை. அதிநவீன தொழில்நுட்பத்தில்  எடுத்தாலும் சூப்பர் ஸ்டார் ரியல் சூப்பர் ஸ்டார் இல்லையென்றால் ரசிகனுக்கு படம் பார்த்த திருப்தி இருக்காது. திரையில் ரஜினி தோன்றினாலே போதும் கதை தேவையில்ல  என்று நினைக்கும் ரசிகனுக்கு படத்தில் ரியல் ரஜினியை பார்ப்பதில்லை எனும் போது படத்தின் வெற்றி சிறிது சந்தேகத்திற்குரியதே..


ஆனாலும்  ரஜினியின் கோச்சடையான் கோடை விடுமுறையில் தான் வெளியாகும். அதனால்   வசூலில்  அடுத்த கட்டத்தை தாண்டி சாதனை படைக்கும்.

No comments:

Post a Comment