சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Apr 2014

நடிகை - நாட்டிய தாரகை ஷோபனா


பரதம் என்றாலே நினைவிற்க்கு வரும் பெண்களில் நடிகை ஷோபனாவும் ஒருவர். 14 வயதில் தன் முதல் திரைப்படத்தில் நடித்த இவர் இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னும் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இன்னமும் நிலையான இடத்தை பெற்று இருக்கும் கதாநாயகி. நடிப்பிற்காக இரண்டு தேசிய விருதுகளும் நாட்டியத்திற்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
               

ஷோபனாவின் குழந்தை பருவம் மைலாப்பூரில் தான்.அங்குதான் அவர் தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.இரண்டரை வயதில் நாட்டிய பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.தாயார் ஆனந்தம் கண்டிப்பானவர்.ஆனால் அப்பா சந்திரகுமாரோ வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவர். ஷோபனா தன் அப்பாவுடன் சிறு வயதில் பைக்கிலேயே சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்வார். சந்திரகுமார் தான் ஆசையாக பிடித்து வரும் மீன்களை சாப்பிட்டுதான் ஷோபனா உயரமாக வளர்ந்துவிட்டதாக இன்றும் சொல்லி சிரிப்பாராம்.

அப்பா சந்திரகுமாருடன் பிறந்தவர்கள் தான் தென்னிந்திய திரை உலகை கலக்கிய மூன்று சகோதரிகள் லலிதா, ராகினி, பத்மினி. பத்மினி அமெரிக்காவில் இருந்து வரும் போது ஷோபனாவிற்க்கு நிறைய சாக்லேட்டுகளும், பரிசு பொருட்களும் கொண்டு வருவராம். ஆனால் ஷோபனா சினிமாவில் முதன்முதலாக நடிக்கும் போது பத்மினிக்கு வயதாகிவிட்டது. இருந்தாலும் ஷோபனா நடிக்க வந்ததில் பத்மினிக்கு மிகுந்த சந்தோஷமாம். அதனால் ஷோபனாவின் மீது பத்மினிக்கு அளவு கடந்த பாசமாம்.





ஷோபனா தன் எட்டு வயதில் யாரிடமும் சொல்லாமல் , தியேட்டருக்கு தனியாக சினிமா பார்க்க சென்று விட்டாராம்.ஏதோ ஒரு குடும்பம் தியேட்டர் உள்ளே சென்ற போது இவரும் உள்ளே சென்று விட்டார். இப்போது கேட்டாலும் ராஜ பார்வை, ஜகன்மோகினி படங்களை பார்த்ததாக நினைவில் வைத்து சொல்கிறார். தென்னகத்தின் அனைத்து மொழிகளிலும் தவிர்க்க முடியாத கதாநாயகியாக ஆனார்.பிரமாண்டமான சினிமாக்களில் நடித்தார்.அன்று முன்னணியில் இருந்த ரஜினி, மம்மூட்டி ,மோகன்லால் என அனைத்து நடிகர்களுடனும் நடித்தார். தான் ஏற்க்கும் பாத்திரத்துக்கு ஏற்றவாறு தன்னை மிக விரைவாக மாற்றி கொண்டார். அதுவே அவரை வெற்றி படியில் ஏற்றியது.

அவர் நடித்ததில் அவருக்கு மறக்கமுடியாத படம் " யாத்ரா ".அதில் நடித்து கொண்டிருக்கும் போது இயக்குனர் பாலுமகேந்திரா ஷோபனாவை ஷோபனா என்று அழைத்ததில்லையாம்.அந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரான "பீனா" என்று தான் அழைப்பாராம்." அவர் அப்படியே அழைத்ததால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன்.படப்பிடிப்பு முடியும் போது என் பெயர் பீனாவா? ஷோபனாவா? என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.அதுபோல் மணிசித்திரத்தாழ் படத்தில் " கங்கா " " நாகவல்லி " என்ற இரட்டை வேடங்களில் நடித்ததும் ஷோபனாவிற்க்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

நல்ல நடிகையாக இருந்த போதும் அவர் நாட்டியத்திற்க்கும் நேரம் ஒதுக்கினார். திரையுலகின் உச்சத்தில் இருந்தபோதே தன் நாட்டியப்பள்ளியான " கலார்ப்பணா " வை தொடங்கிவிட்டார். அதன் பின்பு அதிக படங்களில் நடிக்காமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். இது பற்றி கூறும்போது " என்னை பொறுத்தவரையில் அது ஒரு கதாபாத்திரத்திலிருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாறுவது போலத்தான் இருந்தது.





தற்போது கூட நடிகை சுஹாசினி என்னிடம் " தமிழ் சினிமா கொண்டாட்டம் " நிகழ்ச்சிகாக இருவர் படத்தில் இடம்பெறும் " நறுமுகையே" பாடலுக்கு ஆடவேண்டும் என்றார்.அந்த பாடலுக்கு ஆட என்னோடு இணைந்து ஆட ஒரு நடிகர் தேவை. ஆனால் அந்த நாளில் எல்லா நடிகர்களும் பிசியாகி விட நான் என் சகோதரியின் மகன் கிருஷ்ணாவை அழைத்தேன். அவன் என் மகன். இருந்தாலும் மேடையில் நான் அவனை காதலிப்பது போல நினைத்து ஆடவேண்டும்.இது போன்ற சூழ்நிலைகள் தான் ஒரு நடிகைக்கு சவாலானவை. நான் என் நாட்டியக்கலையை நேசிக்கும் அளவுக்கு வேறு எதையும் நேசித்ததில்லை." என்கிறார்.

ஷோபனா படங்களில் நடிப்பதை நிறுத்தி பத்தாண்டுகள் ஆகிறது.ஆனால் இன்னமும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து கொண்டு இருக்கிறார்.அதற்க்கு மிக முக்கிய காரணம் அவரின் நடிப்பு திறமையும், அவர் நடித்த நல்ல கதையம்சமுள்ள திரைபடங்கள் இன்றும் தொலைகாட்சிகளில் ரசிகர்கள் பார்த்துக்கொண்டு இருப்பதுதான்.

அவரின் கலைப்பயணம் இன்னும் சிறப்பானதாக அமைய நம் " விஸ்வரூபம் " வலைத்தளம் உங்களின் வாழ்த்துகளுடனும் வாழ்த்துக்கிறது.



No comments:

Post a Comment