உங்களுக்கு தமிழில் ஏதேனும் நூல்கள் தேவைப்படலாம்.அப்போது நீங்கள் இவரை ஒரு முறை அழையுங்கள்.புத்தகம் இருந்ததால் கொடுப்பார்,இல்லை தேடியாவது கொடுப்பார்.தொலைவில் இருந்தால் அனுப்பிவைப்பார் .ஏனென்றால் இதுதான் பல ஆண்டுகாலமாக இவரது வாழ்க்கை.
நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் முனைவர் பட்ட ஆய்வுக்கு குறிப்புதவி நூல்களை தேடி கொடுத்து உதவியவர்.ஐயா முருகேசன் அவர்கள்.அகவை 70 கடந்தவர்.மதுரை காமராஜ் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்களுக்கு இந்த தமிழ்ப்பெரியவரை தெரியாமல் இருக்க முடியாது.
ஒரு மளிகைக் கடைக்கரராக வாழ்வை தொடங்கி,பழைய புத்தக விற்பனையளராக மாறி,பின்னர் தன்னிடம் சேர்ந்த நல்ல தமிழ் நூல்களின் பெருமையை அறிந்த பின் இத்தகைய நூல்கள்,அறிவாக பயன்படவேண்டும் என்று மாணவர்களை தேடிச்சென்று அளிப்பார்.இப்படி தொடங்கிய வாழ்க்கை அப்படியே தொடர்கிறது.பிள்ளைகள் அனைவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.துணைவரும் இல்லை.ஒரு தனி மனிதராக தம் வாழ்க்கையை தொடர்கிறார்.வீடெல்லாம் புத்தகம் தான்.நடைபாதையை தவிர அனைத்து இடமும் புத்தக அடுக்குகள் தான்.
மாணவர்கள் ஆய்வு முடிந்த பின் நூல்களை
திரும்ப கொடுத்துவிடவேண்டும்.இல்லையேல் எப்படியாவது வாங்கிவிடுவார்.நூல்களை
விலைக்கு தரமாட்டார்.ஏனென்றால் நூல்கள் பிறருக்கும் பயன்படவேண்டும்,அடுத்து யாராவது ஆய்வுக்கு தேவைப்படும் என்பதால் பயன்பெற்றவர்கள்
திரும்ப தந்து விடுவார்கள்.யாரிடமும் பணமும் கேட்க மாட்டார்.விரும்பி கொடுத்தால்
மட்டுமே ஏதேனும் பெற்றுக்கொள்வார்.தினமும் நூல்களை தேடிசென்று மாணவர்களுக்கு
கொடுப்பதும்,மாணவர்கள் தேடும் நூல்களை தாமும் தேடிச்செல்வதும் தான்
அன்றாட வாழ்க்கை.
எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முனைவர் அம்பிகா சரண் ,அவர்களின் மூலம் அறிமுகமானார்.இப்போது ஐயாவுக்கு ஒரே
சிக்கல் அனைத்து நூல்களும் ஒரு வாடகை வீட்டில் தான் இருக்கின்றது.அவற்றை பாதுகாக்க
ஒரு இடம் வேண்டும்.அதை தேடி அலைந்து வருகிறார்.அவ்வாறு ஒரு இடம் தனக்கும்,தமது நூல்களுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும்
என்கிறார்.மதுரை புறநகரில் இருந்தாலும் பரவாயில்லை என்பதே இவரது
தேடல்.....தமிழ்ப்பிள்ளைகளுக்கு பயன் பட
வேண்டும் என்று,இந்த நூல்களை தம் பிள்ளைகள் போல பேணி காத்து
வருகிறார்.உங்களுக்கு புத்தகம் தேவைப்படாவிட்டலும் இவரை அழைத்து பேசுங்கள்
மகிழ்வார்.தமிழ் மொழியின் நூல்கள் பாதுகாக்கப்படுகிறது என்றால் இவர் போன்ற
மனிதர்களின் எதிர்ப்பார்ப்பற்ற உழைப்பால் தான் .... 9578797459.
No comments:
Post a Comment