சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Oct 2013

ஆனந்த விகடனின் உண்மை நிலை என்ன ?

சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நாட்டில் நடக்கும் மோசமான நிலையைப் பற்றி இந்த வார ஆனந்த விகடனில் "ஆண் திமிர் அடக்கு" என்ற தலைப்பில் கட்டுரை வந்துள்ளது

ஆண் ஆதிக்கம் , காம கண்ணோட்டம், என்று பல பார்வைகளில் அலசும் தவிர்க்க முடியாத கட்டுரை , மறுக்க முடியாத உண்மை . அதில் " செய்ய வேண்டியவை " என்ற பெட்டிச் செய்தியில் ,

1)
கட்டற்று பெண்களின் உடலை போக பொருளாக மாற்றும் சினிமா , தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை முறை உருவாக்க வேண்டும் .

2)
இந்த மாற்றங்களை நமது வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். பெண்கள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும் விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தரவேண்டும்.

இந்த இரண்டு கருத்தையும் ஆனந்த விகடனில் படித்தேன். பெண்கள் வாழவும் , ஆண்கள் மாறவும் தேவையான கருத்து .

பெண்களை போகப் பொருளாகக் காட்டும் சினிமா , தொலைக்காட்சி கட்டுப்பாடு வேண்டுமென்று எழுதிய ஆனந்த விகடனின் உண்மை நிலை என்ன ?

ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு நடிகையின் மார்பும் , இடுப்பும் விகடனின் விருந்து , டைம் பாஸ் என்ற அவர்கள் குழுமத்தின் பிரத்யேக புத்தகத்தில் பக்கங்களில் எல்லாம் பெண்களின் அங்கங்கள். டீக்கடைகளிலும் , பேப்பர் கடைகளிலும் , தொங்க விடும் விளம்பர ஆபாசப் படங்கள் வளரும் மாணவர்களுக்கும் , வளர்ந்த ஆண்களுக்கும் , நல்ல சிந்தனையைத் தரும் என்று விகடன் நினைக்கிறதா ???

திரைப்படங்களின் கட்டுப்பாடு வேண்டும் என்று எழுதிய கருத்தினை நான் ஏற்கிறேன் . ஆனால் அந்த நடிகைகளின் அங்கங்களை அச்சிட்டு வியாபாரம் செய்யும் உங்களுக்கு வேண்டாமா கட்டுப்பாடு??

"
இன்பாக்ஸ் " நடிகைகளின் பேட்டி , அட்டைப்படம் என ஒவ்வொரு பக்கத்திலும் , நடிகைகளின் ஆபாசப் படங்கள் .

இது பல வருடங்களாக நடக்கின்றது . அப்படியொரு கீழ்த்தரமான படங்களைக் காட்டி அந்த ஆண்களின் மனதில் நீங்களும்தானே விஷம் ஏற்றி உள்ளீர்கள் ... மாற வேண்டியது சமூகம் என்றால் நீங்கள் முதலில் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.ஆண்களின் டைம் பாஸ் எல்லாம் பெண்களின் அங்கம் தான் என்று சொல்லாமல் செயல்படும் உங்கள் வழக்கத்தை மாற்றுங்கள்.

உங்கள் இதழின் உள்ளே அறிவுள்ள பகுதிகள் இருக்கின்றது . அதை நான் மறுக்கவில்லை . ஆனால் வியாபாரத்திற்கு அழகுப் பெண்களின் அழகைத்தான் நம்புகிறீர்கள்.இதுதான் நீங்கள் பெண்மைக்குத்தரும் மரியாதையா ? விகடன் மட்டும்தான் இந்த செயலைச் செய்கிறது என்று கூறவில்லை . இன்று பெரும்பாலான பத்திரிக்கைகள் இதே பாணியில் தான் சந்தைகளில் விற்கப்படுகின்றன.

இத்தனை நாள் இப்படி பெண்களை வைத்து பிழைப்பு நடத்திய விகடன் இன்று ஆண்களுக்கு அறிவுரை செய்ததால் இந்த கேள்வியை எழுப்புகிறேன்...

இப்படி நீங்கள் உங்கள் இதழை விற்பதை மதிப்பிற்குரிய ஐயா, S.S.வாசன் அவர்களின் ஆன்மா பார்த்தால் மிகவும் மனம் வெதும்பி ரத்தக் கண்ணீர் வடிக்கும் .

ஆண்களிடம் மாற்றம் விரும்பும் உங்களிடம் உடனடியாக வேண்டும் ஒரு மிகப்பெரிய மாற்றம்.

திரைப்படம் , நாடகம் , பத்திரிக்கை என அனைத்து ஊடகங்களிலும் பெண்மையை போகப் பொருளாகக் காட்டும் நிலையை மாற்ற நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ வாழ்த்துகள்.

No comments:

Post a Comment