சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Sept 2013

உடல் ஆரோக்கியத்திற்கு எளிய சில வழிகள்

மனதில் நிறுத்த வேண்டிய நான்கு விஷயங்கள்:

1. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசித்து சாப்பிடா விட்டாலும் நோய் ..பசிக்காமல் சாப்பிட்டாலும் நோய் தான் ...

2. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் ..

3. சிறுநீர், மலம் அடக்க கூடாது ...

4. தூக்கம் வரும்போது உடனே தூங்க போக வேண்டும்.

தினமும் காலை மற்றும் இரவு ஆயில் புல்லிங் பண்ணவேண்டும்... காலை எழுந்ததும் வாய் கழுவாமல் இரண்டு ஸ்பூன் () 10 மிலி எண்ணெய் எண்ணெய் (நல்லெண்ணெய் () சமையல் செய்யும் எந்த எண்ணையாகவும்) வாயில் ஊற்றி கொப்பளித்து அந்த எண்ணெய் தண்ணீர் போல நீர்த்து போகும் அளவுக்கு செய்தால் முழு பலனையும் பெறலாம்.. அவ்வளவு நேரம் செய்ய இயலாதவர்கள் 15 நிமிடம் செய்தால் கூட போதுமானது. (ஆயில் புல்லிங் பற்றி எமது இன்னொரு பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்...) பின் பல் தேய்த்து விட்டு கிரீன் டீ, () சுக்கு காபி குடிக்கலாம். .. புகை, மது இரண்டும் அறவே கூடாது... குறைந்தது அரைமணி நேரமாவது தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பசித்தால் உடனே சாப்பிட வேண்டும்...பசித்து சாப்பிடாமல் இருப்பதும், நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பசிக்காமல் சாப்பிடுவதும் என இரண்டுமே தவறு தான்.

தாகமே இல்லாமல் இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தேவையே இல்லாமல் தண்ணீர் குடிக்கவே கூடாது. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்தால் போதுமானது.

வெளி இடங்களுக்கு சென்றால் சிறுநீர், மலம் போக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கழிவறை நன்றாக இருக்காது என்று அடக்கி கொண்டு இருந்தாலும் மிக பெரிய வியாதியை நாமே வரவழைத்துக் கொள்கிறோம் என்பது தான் உண்மையே.....

தினமும் நேரத்திற்கு தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும்...பகல் தூக்கம் அறவே கூடாது...


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு 
பகிர்ந்து  கொள்கிறேன்.பிடித்திருந்தால்  நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !     

No comments:

Post a Comment