21-ம் நூற்றாண்டு கிட்டத்தட்ட கூகுளின் நூற்றாண்டாகவே மாறிவிட்டது. கூகுளின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலைமைக்கு நாமெல்லாம் வந்துவிட்டோம். சாம்பார் வைப்பது எப்படினு தேடுறது தொடங்கி, சாருக்கானோட அடுத்த படம் என்னனு தேடுறது வரைக்கும் எல்லாத்துக்கும் கூகுள நம்பித்தான் இருக்கிறோம். கூகுள் அதோட வாடிக்கையாளர்களோடு உறவை வலுப்படுத்த தினமும் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
அப்படி கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் புத்தம் புது 'தெறி' டெக்னாலஜி தான் இந்த 'ஸ்பீக் அவுட் சர்ச் மாதிரி'. கூகுள் வாய்ஸ் சர்ச் எல்லோரும் பயன்படுத்தியிருப்போம். அதை இன்னும் எளிமையாக்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டெக்னாலஜிதான் இது.
வட்டமாக வாக்கி டாக்கி போன்று இருக்கும் இந்த மாதிரியை அறிமுகப்படுத்திய கூகுளின் மூத்த தலைவர் மற்றும் மென்பொருள் பொறியாளர் அமீட் சிங்கால் கூறுகையில், "இது ரொம்ப சின்ன வாக்கி டாக்கி போன்ற மாதிரி. இதை வச்சு நீங்க மொபைலை உங்க பாக்கெட்டிலிருந்து வெளிய எடுக்காமலே பயன்படுத்தலாம். இது உங்க மொபைல் கூட ப்ளூ டூத் மூலமா இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி நீங்க உங்க மொபைல் போனுக்கு வாய்ஸ் கமெண்ட் கொடுக்கலாம். மொபைலை வெளியே எடுக்காமலே இதுல உள்ள ஸ்பீக்கர் மூலமா சர்ச் ரிசல்ட தெரிஞ்சிக்கலாம்" என்றார்.

கூகுள் நிறுவனம் தற்போது வெறும் மாதிரியை மட்டுமே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் முழு வடிவம் பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகுமாம். எனவே நாம் எல்லோரும் மொபைலை பார்த்து தலை குனிந்து நடந்த காலம் போய் பழையபடி வாக்கி டாக்கியுடன் பேசி நிமிர்ந்து நடக்கும் காலம் வெகுசீக்கிரத்தில் வரப்போகிறது.
No comments:
Post a Comment