சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Nov 2015

அருந்ததி ராய் - குரல் அற்றவர்களின் குரல்!

ருந்ததி ராய் - முற்போக்கு இந்தியப்பெண் முகங்களில் ஒருவர். எழுத்தாளர், சமூக சேவகர், அணு உலை எதிர்ப்பாளர், அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் என பல முகங்கள் கொண்டவர். இந்திய எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசு வென்றவர் இவரே. இன்றளவும் இவரின் 'காட் ஆப் ஸ்மால் திங்ஸ்' விறுவிறுப்பான விற்பனையில் உள்ளது. அருந்ததி குறித்த சின்னஞ்சிறிய குறிப்புகள் இங்கே... 

அப்பா ரஜித் ராய் மேகாலயாவில்  டீ எஸ்டேட் மேனேஜர் - அங்கு பெண்கள் அமைப்பு ஒன்றில் வேலை செய்த, கேரளாவை சேர்ந்த அருந்ததியின் அம்மா மேரிக்கும் பிறந்தவர் அருந்ததி ராய். அருந்ததி பிறந்த ஒரே ஆண்டில் அப்பா -அம்மா பிரிந்தனர். அதன் பின்னர் 22 ஆண்டுகள் கழித்தே தன் தந்தையை பார்த்தார்.
தன் நண்பரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான பிரதீப் கிருஷெனை திருமணம் செய்த அருந்ததி ராய், பின்னர் பிரிந்தார். விவாகரத்துக்குப் பின்,  "திருமணம் உனக்கு சரிப்பட்டு வராது என என் தாய் சொன்னார், நான்தான் கேட்கவில்லை" என அது குறித்து பின்னர் தெரிவித்தார் ராய். 

சமூக அளவில் பல்வேறு முகங்கள் கொண்ட அருந்ததி ராய் பற்றி வெளியே தெரியாத இரண்டு விஷயங்கள். அவர் 'ஏரோபிக்ஸ் பள்ளி' ஒன்றை டெல்லியில் வெற்றிகரமாக நடத்தியவர், மற்றொன்று அவர் என்.டி.டி.வி நிறுவனர் பிரணாய் ராயின் தூரத்து சகோதரி என்பதும். 

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிட இருந்த சமயத்தில், இவர் எழுப்பிய 13 கேள்விகளுக்கு இன்றளவும் அதிகாரப்பூர்வ பதிலை அரசுத்தரப்பு சொல்லவில்லை. 

கடந்த நவம்பர் 6-ம் தேதி,  தான் வாங்கியிருந்த 'சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான' தேசிய விருதை திருப்பி அளித்தார் அருந்ததி. "மாட்டை போல மனிதர்களை கொல்கிறார்கள். இது என்னால் முடிந்த எதிர்ப்பு" என பதிவு செய்தார்.  

2001 இரட்டை கோபுர தாக்குதலை காரணமாக வைத்து ஆப்கன் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது நியூயார்க் நகரத்தில் அமெரிக்காவின் போரை கண்டித்து இவர் ஆற்றிய உரை பெரும் கவனத்தை ஈர்த்தது. ஒரிசா மாவோயிஸ்ட்கள் குறித்து ஒரு சார்பான பார்வை நிலவிய நேரத்தில், நேரடியாக அவர்கள் இருக்கும் காட்டிற்குள் பயணம் சென்று, அவர்கள் தரப்பு நியாயத்தை வெளிக்கொண்டு வந்தார்.

97-ல் புக்கர் பரிசு வாங்கிய பின், அருந்ததியின் பொருளாதார பிரச்னை தீர்ந்தது. அவருக்கே ஆச்சர்யமளிக்கும் விதமாக, அவரது குடிகார அப்பாவின் பரம்பரை சொத்தான சிறிய டீ எஸ்டேட்டும் அவரது கைக்கு வந்தது. தற்போது அதை பெண்கள் சுயஉதவிக்குழு நிர்வகித்து வருகிறது.

No comments:

Post a Comment