சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Nov 2015

மிஸ்டர். நாஞ்சில் சம்பத் நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா?

மேடைகளிலும் களத்திலும் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர், பேசக்கூடியவர் நாஞ்சில் சம்பத். திமுக வில் இருந்தார். வைகோவின் விசுவாசியாக மதிமுகவில் வலம் வந்தார். மேடைக்கு மேடை 'வைகோவின் தம்பி ' என்று அடிக்கடி தன்னை கூறிக் கொள்பவர். பல அறிஞர்களை தந்த கன்னியாகுமாரி மாவட்டத்தில் இருந்து வந்தவர். எம்.ஏ எம்.பில் படித்தவர். ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.
மதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து வைகோவுக்கு உறுதுணையாக இருந்தவர். 'மதிமுகவே அழிந்தாலும் நான் ஒருவன் வைகோவுடன் இருப்பேன்' என்று உறுதியாக சொன்னவர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 51 நாட்கள் சிறையில் இருந்தவர். இவர் மதிமுகவில் இருந்த காலத்தில், மேடைக்கு மேடை அதிமுக தலைமையை கண்டபடி பேசி விமர்சித்தவர். 

பின்னர் என்ன காரணத்தினாலோ வைகோவுடன் பிணக்கு ஏற்பட்டது. அந்த பிணக்கினை சரிசெய்ய பலர் முயற்சித்தும் முடியவில்லை. வைகோ இவரை புறக்கணித்து விட்டதாகச் சொல்லப்பட்டது. தொடர்ந்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு 'இன்னோவா ' காரை பரிசாக பெற்றுக் கொண்டார். தற்போது அதிமுகவில் கொள்கை பரப்பு துக்ச் செயலாளர் பதவியில் இருக்கிறார். அந்த பதவியை வைத்துக் கொண்டு தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்பது இவரது வழக்கம். 

அந்த வகையில் இன்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கற்ற இவரது வாத விபரம் இங்கே...''அதான் மழை வரும்னு சொன்னாங்கல்ல என்ன செய்தீங்க என்று கேள்வி....  'மழை வரும்னு தான் சொன்னாங்க இப்படி வரும் இவ்ளோ பெய்யும்ன்னு சொன்னாங்களா?'ன்னு திருப்பி இவர் கேள்வி கேட்கிறார். 3 மாதத்தில் 500 மில்லி மீட்டர் மழை மட்டும்தான் பெய்யுமாம். ஆனால் ஆனால் இப்போது மூன்றே நாளில் கொட்டி 
கொட்டி விட்டதால் என்ன செய்ய முடியும்? ''என்கிறார்.. 


இதற்கு முன் பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதை யும்  எச்சரித்தையும் தான் இப்போது சார்ந்திருக்கும் கட்சிக்காக வசதியாக மறந்து விட்டார் நாஞ்சில் சம்பத். 30 ஆண்டுகளுக்கு முன் தேதி குறித்து இது போன்று மழை தமிழகத்தில் வரும் என்று அறிவித்திருந்தால் கூட கழக அரசுகள்  மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டிருக்கப் போவதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும்,  பண்பட்ட அரசியல்வாதியாக அறியப்படும்,  நாஞ்சில் போன்றவர்களும் மாறி போனதுதான் வியப்பை அளிக்கிறது.


No comments:

Post a Comment