சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Nov 2015

இன்று மழைவெள்ளம்... நாளை வறட்சி! - தமிழகத்தை மிரட்டும் 'எல்நினோ'

சிபிக் கடலில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள எல்நினோ காரணமாக தமிழகத்தில் அதிகப்படியான மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய கடலாக பசிபிக் கருதப்படுகிறது. இந்தக் கடலில் அதிக குளிர் தன்மையும், மைல் கணக்கில் ஆழமும் கொண்ட இடங்களும் உண்டு. இந்த கடலையொட்டிய தென் அமெரிக்காவின் பெரு மற்றும் ஈகுவடார் நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக ஒருவித கால நிலை உருவாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் அல்லது ஜனவரி மாதங்களில்  இந்த எல்நினோ பசிபிக் பெருங்கடலில் தோன்றுகிறது.

கிழக்கு மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து எல்நினோவின் தாக்கமானது அதிகமாவதாகவும், குறைவதாகவும் கண்டுபிடிக்கப்படுகிறது. எல்நினோ தாக்கத்தின் போது,  காற்று வீசும் வழக்கமான  கிழக்கு மேற்கு என்ற திசை மாறி, அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசையில் வீசுகிறது.  இதனால், மேற்கு மற்றும் கிழக்கு பசிபிக்கின் கடலையொட்டி உள்ள நாடுகளில் காலநிலை முற்றிலும் மாறுகிறது.

எல்நினோ தோன்றினால் ஒன்று வழக்கத்திற்கு மாறாக அதிகமாக மழை  பெய்யும் அல்லது மழை அறவே இல்லாமல் வறட்சி ஏற்படக் கூடும்.எல்நினோ உலகின் சில பகுதிகளில் அதிக மழைப் பொழிவையும் சில பகுதிகளில் கடும் வறட்சியையும் ஏற்படுத்தும்.  கடந்த 1997 -98-ம் ஆண்டுகளில் எல்நினோ காரணமாக  ஈகுவடார்,  பெரு, பொலிவியா, சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்து ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.
இந்த எல்நினோ ஆண்டில், அமெரிக்காவிலும் அதே வரலாறு காணாத மழை கொட்டி உயிர்களை பலி வாங்கியது. இந்த நேரத்தில் அமெரிக்க மக்களை தாங்க முடியாத குளிரும் வாட்டியது. வீட்டில் இதமான சூழலையும் வெப்பத்தையும் அதிகரிக்க, இந்த ஆண்டில் மட்டும் ஹீட்டர் போன்ற சாதனங்களை  வாங்குவதற்காக அமெரிக்கர்கள் 5 பில்லியன் முதல்  7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் எல்நினோவால் தமிழகத்திற்கு மட்டும்தான் அதிக மழை கிடைக்கும். ஏனென்றால் வடகிழக்க பருவமழையால் மழை பெறும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.இதே ஆண்டில் தமிழகத்திலும் வரலாறு காணாத அளவில் மழை பெய்து, தமிழகமே வெள்ளத்தில் தத்தளித்தது. பொதுவாக எல்நினோ இல்லாத ஆண்டுகளில் தமிழகத்தில், மழைக் காலங்களில்  காற்றழுத்த தாழ்வு நிலை அதிகமாக இருந்ததில்லை. ஆனால் எல்நினோ ஆண்டு காலத்தில் அதிகமாக காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலங்கள் உருவாகும். கடந்த 1997-ம் ஆண்டும் இதே போன்றுதான் அதிகமான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலங்கள் உருவாகி, அதிகப்படியான மழைப் பொழிவை ஏற்படுத்தின.
தற்போதும்  எல்நினோ காரணமாக அடிக்கடி காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலங்கள் உருவாகி,  அதிகப்படியான மழை பொழிந்து, பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த எல்நினோ காரணமாக அதிகபட்சமாக சென்னையில் வழக்கத்தை விட 329 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் வழக்கத்தை விட 656 சதவீதமும், வேலூரில் வழக்கத்தை விட 572 சதவீதமும் மழை அதிகமாக பெய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, எல்நினோ எப்படி அதிகப்படியான மழை பொழிவிற்கு காரணமாக இருக்கிறதோ அது போலவே அதிகப்படியான வறட்சிக்கும் காரணமாக இருக்கக் கூடும். 

ஒவ்வொரு ஆண்டும் எல்நினோவின் தாக்கம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் அதிகப்படியான வறட்சி ஏற்பட்டதற்கு இந்த எல்நினோ மாற்றமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. எல்நினோ பாதிப்பால் வருங்காலத்தில்,  இந்தியாவில் எல்நினோவால் தமிழகம்தான் அதிகமாக பாதிக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே 62 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் இந்த மாநிலம், எல்நினோ காரணமாக வருங்காலத்தில் மழைப் பொழிவு இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில் அதிகப்படியாக வெப்பம், வெப்பக் காற்று வீசக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து  தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினரும் நீர் மேலாண்மை நிபுணருமான பி.எம். நடராஜன் கூறுகையில்,  ''இந்தியாவில் மக்களிடையே நீர் மேலாண்மை குறித்த போதுமான அறிவு இல்லை. நாட்டில் தண்ணீரைச் சேமிப்பது, மழைக் காலங்களில் தண்ணீரை வீணாகமால் தடுப்பது, கடல்நீரை குடிநீராக மாற்றுவது, தொழிற்சாலைகளில் பயன்படுத்திய நீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துவது போன்ற முறைகளை நாம் இன்னும் அதிகரிக்க வேண்டும். 2050-ம் ஆண்டில், நம்நாட்டில் இருக்கப்போகும் மக்கள் தொகைக்கு 420 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய வேண்டியது இருக்கும். அத்தகைய சூழலில், எல்நினோ பாதிப்பால் வருங்காலத்தில் இந்தியாவில் மழை குறைவாகவே கிடைக்க வாய்ப்பிருக்கிறது'' என்று எச்சரிக்கை மணி அடித்தார்.


No comments:

Post a Comment