சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Nov 2015

எம்எல்ஏ சிவக்கொழுந்துவை மீண்டும் அடித்த விஜயகாந்த்!

கடலுாரில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன் கட்சி எம்.எல்.ஏ.வை திடீரென பொதுமக்கள் மத்தியில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வந்திருந்தார்.  கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் கிராமத்திற்கு வந்த விஜயகாந்த் மழை பெய்ய ஆரம்பிக்கவே  அவசர அவசரமாக நிவாரண பணிகளை முடித்துவிட்டு தன்னுடைய டெம்போ ட்ராவலரில் ஏறினார். அப்போது மாவட்ட செயலாளரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவகொழுந்து  விஜயகாந்த் பின்னாலேயே அதே டெம்போ ட்ராவலரில் ஏறப்போனார்.

இதில் கடுப்பாகிப்போன விஜயகாந்த் சிவகொழுந்து தலையில் பளீர்.... பளீர்... என்று நான்கு வைத்துவிட்டு, நாக்கை கடித்துக்கொண்டு அதன்பின் கோபம் குறையாத அவர், ''சீக்கிரம் வண்டியை எடுடா" என்று வேனுக்குள் இருந்த டிரைவரை காலால் உதைத்ததும் வேன் விர் என்று கிளம்பியது. இதைப்பார்த்த கட்சிக்காரர்களும், பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

  

சிவகொழுந்து எம்.எல்.ஏ, விஜயகாந்திடம் அடி வாங்குவது முதன்முறையல்ல. இது இரண்டாவது முறை. முன்பு சட்டமன்ற தேர்தலின்போது பிரசாரத்திற்கு வந்த விஜயகாந்த், தம் பேச்சினிடையே திடீரென வேட்பாளரான  சிவக்கொழுந்துவை தாக்கினார். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 

விஜயகாந்திடம் அடி வாங்கிய அவர் தேர்தலில் வெற்றிபெற்றார். இப்போது இரண்டாவது முறை அடி வாங்கியிருப்பதால் அடுத்து அண்ணனுக்கு அமைச்சராகும் யோகம் இருக்கிறது என்று சமாளிபிகேஷன் தட்டிக் கொண்டிருக்கிறார்கள் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள். 

சரிதான்..! 


No comments:

Post a Comment