சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jul 2015

ரஞ்சனியின் ஃபேஸ்புக் பதிவால் ஹீரோவான ஆட்டோ ஓட்டுநர்!

ட்டோ ஓட்டுநர்கள் என்றாலே எதிர்மறையான சிந்தனை எழும். ஃபேஸ்புக்கில் பெண் ஒருவரின் பதிவு  உன்னதமானவர்கள்ஒவ்வொரு பிரிவிலும் உள்ளனர் என்பதை எடுத்து காட்டும் வகையில் அமைந்துள்ளது.
இசைக்கலைஞரான ரஞ்சனி என்பவர்  பெங்களூரு சென்றிருக்கிறார். நகரத்தில் வேலையை முடித்து விட்டு, தங்கியிருந்த இடத்துக்கு இரவில் தனியாகச் செல்ல வேண்டிய நிலை. ஓலா ஆட்டோவை அவர் பதிவு செய்தார் . ஓட்டுநர் காஸம்ஃபர் அலியுடன் ஆட்டோ ரஞ்சனியை தேடி வந்தது. ரஞ்சனி செல்ல வேண்டிய இடம் சற்று மோசமானது. எனவே கவனத்துடன்தான் செல்ல வேண்டுமென்றும் காஸம்ஃர் அலி, ரஞ்சனியிடம் கூறியுள்ளார்.

ரஞ்சனிக்கு உள்ளுர பயம் ஏற்படத் தொடங்கியது. எனினும் ஆட்டோ ஓட்டுநர் ஆறுதலான வார்த்தைகள் அவருக்கு ஆறுதலை அளித்தன. ஆட்டோ ஓடத் தொடங்கியது.  அரை மணிநேரம் கழிந்து நகரத்தை தாண்டி ஆட்டோ வந்திருந்தது.  சாலையில் கும்மிருட்டு மனித நடமாட்டம் இல்லை. அங்கேயும்  இங்கேயுமாக மின்மினிகள் போல இரவு விளக்குகள் தென்பட்டன. 


ரஞ்சனி சொன்ன இடத்தில் அவருக்காக காத்திருக்க வேண்டிய நண்பர் இல்லை. ரஞ்சனிக்கு என்ன செய்ய வென்று தெரியவில்லை. போக்குவரத்து நெரிசலில் நண்பர் சிக்கி கொள்ள ரஞ்சனி கையை பிசைந்து கொண்டிருந்தார். இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் பயத்துடன் தவித்துக் கொண்டிருந்தார் ரஞ்சனி.  ஆட்டோ ஓட்டுநர்கள் பற்றிய நெகட்டிவான செய்திகள் ரஞ்சனியின் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 

அப்போது ரஞ்சனியிடம் வந்த ஆட்டோ ஓட்டுநர்,  நண்பர் வரும்வரை அவருடன் காத்திருப்பதாக கூறினார். உங்கள் நண்பரிடம் ஒப்படைத்து விட்டே நான் போவேன் என்று உறுதியாக தெரிவித்தார். அதுமட்டுமல்ல  சொன்னபடி செய்து விட்டுதான் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். சுமார் 20 நிமிடங்கள் நண்பருக்காக காத்திருந்த சமயத்தில்தான், அந்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை, பொறுப்புணர்வு குறித்து ரஞ்சனி ஃபேஸ்புக்கில் தனது பதிவை எழுதினார்.  ஆனால் ரஞ்சனி எழுதிய அந்த பதிவு ஆட்டோ ஓட்டுநர் காஸம்ஃபர் அலியை ஒரே நாளில் ஹீரோவாக்கி விடும் என்று ரஞ்சனிக்கே தெரியாது. 

"நாம் பெரும்பாலும் எதிர்மறையான செய்திகளையே கேட்க பார்க்க நேரிடுகிறது. முக்கியமாக டாக்ஸி பயணங்களைப் பற்றியும், டாக்ஸி ஓட்டுநர்களைப் பற்றியும். நேர்மறையான விஷயங்கள் யாருடைய கவனத்துக்கும் எட்டப்படுவதே இல்லை. முரட்டுத்தனமான, ஆபத்தான ஓட்டுநர்களைப் பற்றி மட்டுமே பேசி வரும் நாம் ஏன் ஒரு நல்லவரை, உழைப்பாளியைப் பற்றிப் பேசக்கூடாது என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு. இருட்டு, தனிமை, பயமுறுத்தும் சாலையில் ஒரு பெண் தனியாகப் பயணிக்க நேர்ந்த நிலைமையை அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது உதிர்க்கப்பட்ட ஓட்டுநரின் தைரியமூட்டும் வார்த்தைகள், அப்பெண்ணுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும் என்பதையும் உணர முடிந்தது என்று தனது பதிவில் ரஞ்சனி எழுதியிருந்தார். 

ரஞ்சனியின் பதிவையடுத்து  பொறுப்புணர்வுடன் செயல்பட்ட காஸம்ஃபர் அலிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. செய்திதாள்களிலும் அவரது பொறுப்பான செயல் பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. காவல்துறை ஆணையாளர் காஸம்ஃபர் அலியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படி ஒரே நாளில் அவர் வெகு பிரபலமாகி விட்டார். 

காஸம்ஃர் அலியின் நேர்மையையும் பயணியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட்டது ஓலா நிறுவனத்தை கவர்ந்தது.  அவரது செயலுக்கு பரிசாக ஆட்டோவுக்கான கடனைத் செலுத்த முன்வந்தது. அத்தோடு ரஞ்சனியை அழைத்து காஸம்ஃர் அலியை மீண்டும் சந்திக்க முடியுமா எனவும் ஓலா நிறுவனம் கேட்டது. இதையடுத்து, காஸம்ஃர் அலியின் வீட்டுக்கு சென்ற ரஞ்சனி, அவரது மனைவி மற்றும் 
ஆட்டோவுடன் கொடுத்த போஸ்தான் இது. 

  காஸம்ஃர் அலி , ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு  ரோல் மாடல்.



No comments:

Post a Comment