சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Dec 2015

'அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும்...!'- சத்தியம் வாங்கி நிவாரணம் வழங்கும் அ.தி.மு.க.வினர் அராஜகம்!

அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும்!' என்று சத்தியம் வாங்கிக் கொண்டு  அ.தி.மு.க.வினர் அராஜக போக்குடன் நிவாரணம் வழங்குவதால், கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் ஆல்பேட்டையில், சேட்டு நகர், சேகர் நகர், முத்தையா நகர் போன்ற பல பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்,  வெள்ள நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-பாண்டி சாலையில் வெகு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் தலைமையிலான போலீசார்,  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் மக்கள் பயந்து கொண்டு அலறியடித்தபடி அங்கும் இங்கும் என சிதறி ஓடியதால்,  அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஸ்கர் என்பவர் நம்மிடம், ''கடலூர் நகராட்சியில் எட்டாவது வார்டில் ஆளுங்கட்சி கவுன்சிலராக இருக்கிறார் ரமேஷ். எங்க பகுதிக்கு வருகின்ற நிவாரணத்தை எல்லாம்,  'நான் கொடுத்துகிறேன்'  என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து போட்டு வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வத்துள்ளார்.
அதை உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்காமல், கட்சிகாரர்களை மட்டும் வீட்டுக்கு வரச் சொல்லி கொடுத்துகிட்டு இருக்கார்.

உண்மையாக பாதிக்கப்பட்ட நாங்க போய் கேட்டதற்க்கு, 'நீங்க எனக்கா ஓட்டு போட்டீங்க. யாருக்கு ஓட்டு போட்டீங்களோ அவங்ககிட்டபோய் வாங்கிக்குங்க'ன்னு சொல்றார்.
மேலும், 'வர்ற எலக்‌ஷன்ல அ.தி.மு.க.வுக்குதான் ஓட்டு போடுவேன்னு சத்தியம் பண்ணுங்க, உங்களுக்கு நிவாரண பொருட்களை கொடுக்கிறேன்' என்கிறார். அப்படிதான் அப்பாவி மக்களிடம் சத்தியம் வாங்கிட்டு யாரோ கொடுத்த உதவி பொருட்களை இவர் கொடுக்கிறது மாதிரி கொடுக்கிறார்.
இதை கண்டிச்சு நாங்க சாலை மறியல் போராட்டம் நடத்தியதற்கு, போலீசைவிட்டு அடிக்கிறார். இவர் இப்படி செய்வதால், உண்மையாக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரும் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதையெல்லாம் மாவட்ட நிர்வாகமும் கண்டுக்கொள்ளமாட்டேங்குது. அரசாங்கத்தில் இருந்து கொடுக்கலனாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுக்க நினைக்கிறதை கூட மாவட்ட நிர்வாகம் கொடுக்கவிடமாட்டேங்குது" என்றார் வேதனையோடு.

மேலும், பாதிக்கப்பட்ட சில பெண்கள் கூறும்போது, ''வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்களை கடலூர் மாவட்டத்தில் கொடுக்க வருபவர்களை மாவட்ட ஆட்சியர், நான் சொல்லும் பகுதிக்குதான் கொண்டு சென்று கொடுக்க வேண்டும் என்று கூறி அவர்களுடன் 2 காவலர்களையும் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கிறார். இப்படி கொடுக்கப்படும் நிவாரணப் பொருட்களை தாசில்தார், வி.ஏ.ஓ. போன்ற அதிகாரிகள்தான் வினியோகிக்க வேண்டும்.
ஆனால் அப்படி நடக்காமல், அதை எல்லாம் ஆளும் கட்சிக்காரர்கள் வாங்கிச் சென்று வழங்கி வருகிறார்கள். ஆளுங்கட்சிக்காரர்கள் வழங்கும்போது, நிவாரண உதவிகளை பெறுபவர்களிடம் ரேஷன் அட்டையை வாங்கி அதில் 'பெய்டு' (வழங்கப்பட்டுவிட்டது) என்று சீல் குத்திவிடுகிறார்கள். அவர்கள் வழங்கும் நிவாரண பொருட்களில் வெறும் ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் மட்டும் வழங்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கிவிட்டதாக கூறி 'பெய்டு' என்ற சீலை குத்திவிடுகிறார்கள்.

இதனால், அரசாங்கம் பின்னாளில் கொடுக்கும் நிவாரணம் எங்களை போன்ற உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். அதனால் ஆளுங்கட்சியினரின் இந்த அராஜக செயலுக்கு துணைப்போகும் அதிகாரிகளையும் அந்த ஆண்டவன்தான் தண்டிக்கணும்" என்றனர் ஆதங்கத்துடன்.


No comments:

Post a Comment