சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Dec 2015

"அ.தி.மு.க -வில் அமைச்சர்களே இல்லை... அனைவரும் அரபு நாட்டு அடிமைகள்!”

‘‘நாம ஃபயர் சர்வீஸ் மாதிரி சார். போன் அடிச்சா போகணும். தலைவர் எப்ப வேணும்ணாலும் கூப்பிடுவார். என் போன் ஆன்லயே இருக்கட்டும்.’’  - உடல் அதிரச் சிரிக்கிறார் தி.மு.க-வின் தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன். அரசியல் தாண்டியும் எதுவும் கேட்கலாம். தவிர்க்காமல் பதிலளிப்பார்; அன்றும் அப்படித்தான்.
‘‘ஜெயலலிதாவின் இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியை ஒரு சீனியர் அரசியல்வாதியாக எப்படி மதிப்பிடுவீர்கள்?’’
‘‘என்னத்தைச் சொல்லச்சொல்றீங்க? தொழில்துறையில் ஒரு புரட்சியோ, புதிய  தொழிற்சாலைகள் உருவாக்கமோ எதுவுமே இல்லை. நீங்க புதுசா எந்தத் தொழிலையும் தொடங்கலைனாலும் பரவாயில்லை, இருக்கிறதாவது பக்கத்து மாநிலங்களுக்கு போகாம தக்கவைக்கணுமா இல்லையா? அதுவும் இல்லை. சட்டம் ஒழுங்குனு ஒண்ணு இருக்கான்னே தெரியலை. இந்த மழை வெள்ளத்தைத் தவிர்க்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கலை. மதிப்பிடுற அளவுக்கு எந்த மகத்தான காரியத்தையும் இவங்க செய்யலையே சார்.’’
‘‘ஏன் தொழில் துறையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்த்தது நல்ல விஷயம்தானே?’’
‘‘ஏங்க, அதை நீங்களுமா நம்புறீங்க? அது ஒரு நாடகம். எங்க ஊர்ல ஏற்கெனவே தோல் பதனிடுற தொழில் செய்யுற முஸ்லீம் நண்பர்களை எல்லாம் கூப்பிட்டு உட்காரவெச்சுக்கிட்டு, ‘இவர்கள் எல்லாம் தொழில் முதலீட்டாளர்கள்’னு சொன்னா, என்ன அர்த்தம்? அவங்க இந்தம்மா அரசியலுக்கு வர்றதுக்கு முன்னமே ஆண்டாண்டு காலமா ஷூ, பேக் செஞ்சு ஏற்றுமதி பண்ணிட்டு இருக்காங்க. நீங்க உண்மையிலேயே புதுசா என்ன தொழிலைக் கொண்டுவந்திருக் கீங்க? நாங்க கொண்டுவந்த மாதிரி ஹூண்டாய், ஃபோர்டு, மகேந்திரானு ஏதாவது வந்திருக்கா? இப்ப ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் போய்ப் பாருங்க. தொழில்நகராக்கி விட்டிருக்கோம். அந்தப் பக்கம் செங்கல்பட்டு போற ரூட்டை தொழில் முனையமா மாத்தியிருக்கோம். நீங்க  முனையமாக்கூட வேணாம், ஏதாவது ஒரு தொழிலையாவது புதுசா கொண்டு வந்திருக்கீங்களா? இருக்கிற தொழில்கள் மெள்ள மெள்ள ஆந்திராவுக்குப் போய்க்கிட்டு இருக்கு!’’
‘‘தொழில்கள் அங்கே போவதற்கும் ஜெயலலிதா அரசுக்கும் என்ன சம்பந்தம்?’’
‘‘சென்னை துறைமுகம் முக்கியமான துறைமுகம். அதன் மூலமாதான் ஏகப்பட்ட ஏற்றுமதிகள் நடந்து வந்துச்சு. உதாரணமா இருங்காட்டுக்கோட்டை சிப்காட்ல பொருட் களை ஏத்தினா, அந்த கன்டெய்னரை துறைமுகத்துல இறக்க ஏழெட்டு நாளாகுது. அத்தனை நாட்களுக்கு கன்டெய்னர் கட்டணம் எவ்வளவு ஆகும்? கொஞ்சம் திரும்பினா தடாவுல இருந்து 30வது கிலோ மீட்டர்ல ஒரு ஹார்பர் இருக்கு. வண்டியை நேரா அங்கே விட்டுர்றாங்க. இந்தப் பிரச்னையை சரிசெய்யத்தான் கலைஞர் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் மேம்பாலம்  திட்டத்தைக் கொண்டுவந்தார். இவங்க அதை நிறுத்தி வெச்சுட்டாங்க.
போரூர்ல ஒரு பாலம் போட்டோம். அதையும் நிறுத்தினாங்க. நாங்க கொண்டுவந்ததையும் முடிக்க மாட்டேங்கிறாங்க; அவங்களும் செய்ய மாட்டேங்கிறாங்க. அடுத்து கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா இந்த மூணு மாநில அனல் மின்சார உற்பத்திக்கான நிலக்கரி சென்னை துறைமுகத்தில்தான் வந்து இறங்கும். இங்கிருந்துதான் அங்கே போகும். ஆனால், சென்னை துறைமுகம் நிலக்கரியை கையாளக் கூடாதுனு உச்ச நீதிமன்றம் ஒரு தடை உத்தரவு போட்டுருச்சு. அந்தத் தடையை இது வரையிலும் உடைச்சு எறியலை. இப்படித்தான் எல்லாத்துலயும்...’’
‘‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் கொண்டு வந்ததையும் சாதனையா ஏத்துக்க மாட்டீங்களா?''
‘‘கலைஞர் ஆட்சியில் நான் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் 46 தடுப்பணைகள் கட்டியிருக்கோம். ஆனால் இவங்க ஆட்சியில் ஒரு அணையாவது கட்டியிருக் காங்களா? சும்மா, ‘கெசட்ல போட்டுட்டேன். ஆகையினால எனக்கு காவிரி செல்வினு பட்டம் கொடுங்க’ன்னா, தண்ணி வந்துடுமா? காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கெசட்ல போடவெச்சாங்க. நான் இல்லைனு சொல்லலை. ஆல்ரைட், அதைப் பாராட்டுறேன். ஆனால் அதுவே காவிரியில் வெற்றியைத் தந்துடாது. அதுக்கு அரசியலமைப்பு அதிகாரம் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் அரசியலமைப்பு அதிகாரம் உண்டு. அது இதுவரையிலும் அமைக்கப்படலை. இன்னொரு துரதிர்ஷ்டம், சுப்ரீம் கோர்ட், சூப்பர்வைசரி கமிட்டி போட்டுச்சு. ஆனால், அந்தக் கமிட்டிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ‘இது தப்பு, நாங்க கேக்கிறது சூப்பர்வைசரி கமிட்டி கிடையாது. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி எங்களுக்குத் தேவை மேலாண்மை வாரியம். அதை கொடுங்க’னு இவங்க கேட்கலை. சுப்ரீம் கோர்ட்ல வாதாடி தடைசெய்து நிறுத்தலை. இதுதான் சாதனையா?’’
‘‘இந்த மழை வெள்ளத்தை அரசு சரியாகக் கையாளவில்லை என்பது உண்மைதான்னாலும் இது வரலாறு காணாத மழை. பொதுப்பணித் துறை அமைச்சராக 15 ஆண்டுகள் இருந்தவர் என்றஅடிப்படையில் நீங்க சொல்லுங்க... அரசு என்னதான் பண்ணியிருக்க முடியும்?''
‘‘எதுக்கு எடுத்தாலும் அரசைக் குறை சொல்றேன்னு நினைக்காதீங்க. வானிலை ஆய்வு மைய ரமணன் குரூப், தினமும் டி.வி-யில் வந்து பேசிட்டே இருக்காங்களே... நாம மீட்டிங்குக்கு கூப்பிட்டா வர மாட்டேன்னா சார் சொல்லப் போறாங்க? ‘ஐயா இந்த வருஷம் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை எல்லாம் எப்போ தொடங்கும்? எவ்வளவு பலமா இருக்கும்? புயலுக்கான வாய்ப்பு தெரியுதா?'னு கேட்டா, தெளிவா சொல்லுவாங்கல்ல? அவங்களைக் கூப்பிட்டுக் கேட்டிருக்கணும். அடுத்து வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத் துறைனு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளைக் கூட்டி ‘போன மழையில எங்கெங்க பாதிப்பு, அதில் எதை சரி பண்ணியிருக்கோம், எதை சரிபண்ணலை, அதை சரிபண்ண என்ன பட்ஜெட்’னு பணத்தை ஒதுக்கி வேலைகளைத் தொடங்கி இருக்கணும். அதை செஞ்சிருந்தா, இவ்வளவு சேதம் இருந்திருக்காது.''
‘‘இவ்வளவு பேசும்  தி.மு.க-வினர் முன்வந்து உதவி இருக்கலாமே?’’
‘‘ஏங்க, நிதி தந்தோம். நிவாரணப் பணிகள் செய்தோம். என்ன பேசுறீங்க நீங்க? அவங்க சட்டமன்றத்துலயே எங்களை பேசவிடுறது இல்லை. அவங்ககிட்ட தானாப் போய் எங்கேருந்து உதவுறது? ஆனால், எதிர்க்கட்சியே இல்லைன்னா, ஆளும் கட்சிக்கு மிகப் பெரிய ஆபத்து. அந்த ஆபத்தைத்தான் இப்போ அரசு அனுபவிக்குது. அடுத்து, நாங்க கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் கிடப்புல போட்டாங்க. `கோட்டையில இருந்து புது தலைமைச் செயலகத்துக்கு ஃபைல்களை எடுத்துட்டு வர்றதுக்கு நேர விரயம்; செலவு அதிகம். அரசுப் பணிகள் தாமதமாகும்’னு சொல்லி புது தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கினாங்க. ஆனா, இப்ப சென்னை கோட்டையில் இருக்கிற ஃபைல் கொடநாடுக்கு ஃப்ளைட்ல போயிட்டு வருதே... இது தாமதம் இல்லையா... இது செலவு இல்லையா? கேட்டா அது கேம்ப் ஆபீஸாம். எங்க இருந்தாலும் நீங்க அரசாங்கம் நடத்தப்போறது இல்லை.’’
‘‘அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?’’
‘‘ கைகட்டி நிக்கிறதும், கும்பிடு போடுறதும்தான் மந்திரி வேலைனு நினைக்கிறாங்க. அவங்களுக்கு திறமை இல்லைனு சொல்ல மாட்டேன். நிறையப் படிச்சவங்க, அனுபவம் உள்ளவங்க இருக்காங்க. ஆனால் அவங்க எல்லாரும் அரபு நாட்டு அடிமைகள் மாதிரி இருக்காங்க.''
‘‘தி.மு.க. ஆட்சியிலும் அமைச்சர்கள் கருணாநிதிக்கு கட்டுப்பட்டுதானே நடந்திருப்பீங்க?’’
‘‘எதுவா இருந்தாலும் கலைஞர் எங்களைக் கூப்பிட்டு கேட்பார். ஃபைல்ல நோட் எழுதும்போது என் ஒப்பீனியனை எழுதுவேன். அதுக்கு முதலமைச்சர் சமயங்கள்ல மறுத்து எழுதுவார். அதுக்கு நான் திருப்பி, ‘முதலமைச்சர் கவனத்துக்கு இதை பணிவன்போடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’னு பதில் எழுதுவேன். அந்த விளக்கம் சரியா இருந்தா, ‘பொதுப்பணித்துறை அமைச்சரின் கருத்து ஏற்கப்படுகிறது’னு எழுதி கலைஞர் கையெழுத்துபோடுவார். அந்த ஜனநாயகம் இங்கே இருக்குதா? ‘எனது அரசாங்கம் ஆணையிட்டது, நான் ஆணையிட்டேன்’னு பேசுற இவங்ககிட்ட அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? அதேபோல அ.தி.மு.க மந்திரிசபை  எப்படி நடக்கும்னு  ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்களேன்... உங்களுக்கே பயமா இருக்கும். எந்த மந்திரியாவது எந்திரிச்சு ஒரு வார்த்தை பேசுவாங்களா? ஆனால் அதுக்குப் பேரு மந்திரி சபை.''
‘‘கோவன் கைது, விமர்சனக் கட்டுரை எழுதின விகடன் மீது வழக்கு இதையெல்லாம் எப்படி பார்க்கிறீங்க?’’
‘‘ ‘மந்திரி தந்திரி'யில் எல்லா மந்திரிகளைப் பற்றியும்தான் எழுதுனீங்க. முதல்வரைப் பற்றி எழுதும்போது மட்டும் வழக்கு என்றால், இதுவரை உங்க மந்திரிசபையில் உள்ளவர்களைப் பற்றி எழுதினது எல்லாம் சரின்னு ஏத்துக் கிறாங்களா? ஒரு கருத்துக்கு மறுப்புக் கருத்து சொல்லணுமே தவிர, பேச்சுரிமையை, எழுத்துரிமையைப் பறிக்கிறது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை. விநாயகம், அண்ணாவைப் பார்த்து, ‘யுவர் டேஸ் ஆர் நம்பர்டு’ன்னார். அண்ணா கோபப்படலை. ‘மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்டு’னார். வேறொரு முறை, ‘என் சிலைக்கு முன்னால் காங்கிரஸ் நண்பர்கள் கருப்பு துணியால் முக்காடு போட்டுச் செல்வதாகக் கேள்வி. எனக்கும் ஒருநாள் இறப்பு வரும். அன்று நீங்கள், ‘இந்த சனியன் போய் விட்டது’ என்று சொல்லும் அளவுக்கு போக மாட்டேன். ‘ஐயோ போய்விட்டாரே’ என்று நீங்கள் வருந்தி கண்ணீர் விடும் அளவுக்கு உங்கள் இதயத்தை நான் வருடிவிட்டுதான் போவேன்’னார். ஹண்டே அப்போ சபையில் இருந்தார். கலைஞரைப் பார்த்து, ‘யு ஆர் எ தேர்டு ரேட் சீஃப் மினிஸ்டர்’னார். அப்படியே எல்லாரும் கொதிச்சு எழுந்தாங்க. ‘உட்காருங்க’னு சொன்ன கலைஞர், ‘ஹண்டே அவர்களே, நீங்கள் சொல்வதுபோல் இது மூன்றாம்தர அரசு அல்ல, இது நான்காம் தர ஆட்சி, ஆமாம்... பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று சொல்கிறீர்களே... அந்த நாலாந்தர சூத்திரனின் ஆட்சிதான்’னார். சபை ஸ்தம்பிச்சுப்போச்சு. இதுதான் ஜனநாயகம்.’
 
‘‘மீண்டும் மழைக்கே வருவோம். இந்த மழையில் சென்னை ஸ்தம்பித்ததுக்கு முந்தைய தி.மு.க அரசே காரணம் என்கிறாரே மேயர்?’’
‘‘சென்னைக்கு மேயர் இருக்காரா? நீங்க சொல்லித் தான் சார் அப்படி ஒருத்தர் இருக்காருன்னே தெரியுது. இதுவரை, ‘ஹூ இஸ் சென்னை இன்சார்ஜ்? மேயரைக் கூப்பிடுங் கய்யா’னு சொல்லி, ‘என்னய்யா பண்ணியிருக்க நீ?’னு முதலமைச்சர் கேட்டிருக்காங்களா? அப்புறம் எப்படி நடக்கும் நிர்வாகம்?’’
‘‘மத்தியக் குழு வந்திருக்காங்க. நல்லது நடக்கும்னு நம்புவோம். இந்தச் சமயத்தில் அரசு செய்ய வேண்டியது என்ன?’’
‘‘ஒண்ணே ஒண்ணு கேட்கிறேன்.  இப்ப  பொதுப் பணித் துறை அமைச்சரா இருக்கிற மிஸ்டர் ஓ.பன்னீர்செல்வம் எந்த அணையையாவது விசிட் பண்ணியிருக்காரா...  எந்தக் கால்வாயையாவது போய்ப் பார்த்திருக்காரா? ‘இந்த வேலையில் அதிகாரிகள் தவறு செய்துவிட்டனர்’னு நடவடிக்கை எடுத்திருக்காரா? பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ஆறுகள் தெரியணும். வாய்க்கால்கள் எங்கே போகுதுனு தெரியணும். எது வடிகால், எது பாசன வாய்க்கால்னாவது தெரியணும். அப்படி தெரியலைனா, நிர்வாகம் பண்ண முடியாது. அதைவிடுங்க, கண்ணு முன்ன உள்ள உதாரணம், ‘தானே’ புயல். கடலூர்ல அடிச்சுதுல்ல, அடுத்த புயல் வந்தாலும் இதைவிட மோசமா தாக்கும்னு தெரிய வேண்டாமா? என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க? இவங்களை நம்பினோம். இப்ப மத்தியக் குழுவை நம்புவோம். அவ்வளவுதான்.’’

‘வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி எப்படி அமையும்னு நினைக்கிறீங்க... நீங்க தே.மு.தி.க வோடுதான் கூட்டணி போவீங்கனு சொல்றாங்களே?’’
‘‘நாங்க பாட்டுக்கு, ‘இவரோட சேரப் போறோம்’னு ஒரு வார்த்தை சொன்னா, அடுத்த நிமிஷமே நீங்க போனைப்போட்டு, ‘இவங்களோடுதான் சேரப்போறீங்களாமே’னு அவர்ட்டபோய் கேட்பீங்க. அவர், ‘இல்லை’னு சொல்ல, ரெண்டு பேருக்கும் தகராறை உண்டு பண்ணி நீங்க பரபரப்பை ஏற்படுத்திட்டு விவகாரத்தை ஊத்தி மூடிட்டுப் போயிடுவீங்க. இப்ப சொல்றதுல அதுதான் சிக்கல். அதனால யாரும் இப்ப ஒப்புக்க மாட்டாங்க. நானும் 55 வருஷங்களா இதைப் பாத்துட்டுதானே இருக்கேன். தேர்தல் நெருக்கத்துலதான் கூட்டணி வரும்.’’
‘‘ `இரண்டும் ஊழல் கட்சி, ரெண்டு பேரோடும்  போக மாட்டேன்’னு சொல்றாரே விஜயகாந்த்?’’
‘‘அரசியல்ல அப்படித்தான் சார் சொல்லுவாங்க. `நான் போக மாட்டேன். தனியாவே நிப்பேன்’னு சொல்லியிருக்காரா? இல்லையே? எங்கயாவது போய்த்தானே ஆகணும். சில நேரங்கள்ல தொடர் அலையன்ஸ்ல கூட்டணி வரும். திடீர்னு உங்க கூட்டணியில இருக்கிறவங்க எங்ககிட்ட வருவாங்க, எங்க கூட்டணியில இருந்து உங்ககிட்ட வருவாங்க. உங்களிடம் இருந்து பிரிய ஒரு விளக்கம், என்கிட்ட சேர வேறொரு விளக்கம்னு ரெண்டு விளக்கங்களையும் ரெடி பண்ணிவெச்சிட்டுத்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தையே நடக்கும். ‘கேட்ட சீட் கிடைக்கலைனா, வெளிய வந்துடுவாங்க. கேட்டா, ‘கொள்கை அடிப்படையில்’னு சொல்வாங்க. வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு ஏகப்பட்ட பரபரப்பு காத்திருக்கு. இதெல்லாம் நடக்க பிப்ரவரி, மார்ச் ஆகிடும். அதுவரை யாரும் வாயைத் திறக்க மாட்டாங்க. இப்போதைக்கு இங்க எல்லாரும் சீஃப் மினிஸ்டர்ஸ்தான்.’’


No comments:

Post a Comment