சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Dec 2015

சென்னை வெள்ளம்: ஒரு கடைநிலை ஊழியனின் கரிசனம்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில், பிணங்களை பரிசோதனை செய்யும் ஊழியர் விஜயன், தனது 1 மாதம் சம்பளம் 13 ஆயிரம் மற்றும் வீட்டில் வைத்திருந்த 7 ஆயிரம் ஆக மொத்தம் ரூ. 20 ஆயிரத்தை, வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு வழங்கும்படி இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த நிகழ்வு,  அனைவரையும் நெகிழ வைத்தது.

மிகக் குறைவான ஊதியத்தில், மருத்துவ மனையில் யாரும் பார்க்க சங்கடப்படும் மிக கஷ்டமான வேலையை செய்யும் விஜயனிடம் பேசினோம்.

 "சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் படும் துன்பங்களை பார்த்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். என் வீட்டில் உள்ளவர்களிடம் இந்த மாத வீட்டு செலவுக்கு அட்ஜஸ்ட் பண்னிக் கொள்வோம் சம்பளத்தை கொடுக்க போகிறேன் என்று சொன்னேன் ஒத்துக் கொண்டார்கள். இப்போதுதான் சம்பளம் வந்தது. அதோடு வீட்டில் என் மகள் கொடுத்த பணத்தையும் சேர்த்து இருபதாயிரத்தை கலெக்டரிடம் கொடுக்க வந்தேன்" என்றார்.

மனிதம் மலரட்டும்!


No comments:

Post a Comment