சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Dec 2015

காத்திருக்கும் கப்பல்... கைகள் கட்டப்பட்ட சென்னை மேயர்! - 'ரண' களமாகும் நிவா'ரணம்'!

சென்னை மீது இரக்கம் கொண்டு மழையே வெறித்துவிட்டது. ஆனால், அரசு இயந்திரத்துக்கு அந்த இரக்கம் ஏனோ தோன்றவில்லை. சென்னை ரிப்பன் மாளிகையில் குவிந்து கிடக்கும் வெள்ள நிவாரணத்துக்கான உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் ஏக குழப்பம் நிலவுகிறதாம். 
ஒருபுறம், சென்னை துறைமுகத்தில்  மக்களின் தேவைக்கான பொருட்களுடன் மூன்று பிரமாண்ட போர்க்கப்பல்கள் ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் வந்து இறங்கியிருக்கிறது. ஆனால், போதுமான ஆட்கள் இல்லாததால் கப்பல்களில் வந்த பொருட்களை இன்னும் முழுமையாக  இறக்காமலே இருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கும் மேல் காத்திருந்த பிறகே, இரண்டு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கியிருக்கிறார்களாம்.
தன்னார்வத் தொண்டர்கள், தனியார் நிறுவனங்கள், அரசுப் பணியாளர்கள், திரைத்துறையினர் என்ற வரிசையில் பலர் சுயமாக  துயர்துடைப்பு களத்தில் இறங்கியுள்ளனர். சிலர்  உதவிக்கான பணம், பொருட்களை அரசின் நேரடி கண்காணிப்புக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.. அப்படிப்பட்ட பொருட்களும் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலைபோல் குவிந்து கொண்டிருக்கின்றன.

சமூக வலைதளங்களில் உதவி கேட்போர் விபரங்களும், உதவிடுவோர் விபரங்களும் அதேபோல் குவிந்து கொண்டே போகிறது. உணவு பொருட்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோருக்கு போய்ச் சேரவில்லையென்றால் அவைகள் கழிவுக் குவியலாகவே சென்னையை நாறடித்து விடும் அபாயமும் இருக்கிறது.
சென்னை மேயர் கையில் எதுவுமே இல்லையா...? 

சென்னை ரிப்பன் மாளிகையில் குவிந்திருக்கும் நிவாரணப் பொருட்களை எங்கெங்கு அனுப்புவது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தற்போதைய நிலவரப்படி மேயரின் கையில் இல்லையாம். அந்த அதிகாரம் குறிப்பிட்ட ஐந்து அமைச்சர்கள் வசம் இருக்கிறதாம். 
சரியோ... தவறோ... சென்னையின் சூழலையும் பகுதிகளையும் முழுக்கத் தெரிந்தவர்களிடம்தான் நிவாரணப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அதுவும் வெள்ளம் மிக மோசமாகப் பாதித்த சென்னை சைதாப்பேட்டை வாசியான மேயர் துரைசாமி,  நிவாரணப் பணிகளில் ஓரங்கட்டப்படுகிறார் என்பது என்ன மாதிரியான நிர்வாகம் என்றே தெரியவில்லை. 

துரைசாமியை மட்டுமல்ல, சென்னைவாசிகளாக இருக்கும் முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., மாண்புமிகுக்களையும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தலாம். ஆனால், பொதுமக்களை கோபமூட்டாமல் இருக்க, இப்போதைய கவுன்சிலர், அமைச்சர்களை ஏரியாவுக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது என்று அ.தி.மு.க. நலம் விரும்பிகளே சொல்கிறார்கள். 

‘என்ன கொடுமை சார் இது?’ என்றுதானே தோன்றுகிறது!? 


No comments:

Post a Comment