சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Dec 2015

ஏ.ஆர்.ரஹ்மான் செல்லம்

‘இந்தியாவின் மோஸ்ட் வான்ட்டட் பேஸ் கிடாரிஸ்ட் யார்?’ - யூட்யூபில் ‘மோஹினி டே' எனத் தட்டிப்பாருங்கள். பேஸ் கிடாரைவிட ஒல்லியான 19 வயதுப் பெண் வருவார். மதியம் ஜாகீர் ஹுசேனுடன் ஜாமிங், மாலை சோலோ கிடார் பெர்ஃபார்மென்ஸ், இரவு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோ... என ‘மோஹினி டே’வின் காலண்டர் எப்போதும் இசையால் நிரம்பியிருக்கிறது. 
இந்திய மெட்ரோக்களில் இருக்கும் எல்லா மால்களிலும் ‘மோஹினி டே’ இசை ஒலித்திருக்கும். மோஹினியை லட்சக்கணக்கான ரசிகர்கள்  யூட்யூபில் பார்க்கிறார்கள்.
‘‘இவ்வளவு சிறிய வயதில் பேஸ் கிடார் ஆர்வம் எப்படி வந்தது?’’
‘‘எங்க வீட்டுச் சுவரை இப்பவும் அலங்கரிக்கும் சூப்பர்ஸ்டார், பேஸ் கிடார்தான். சின்ன வயசுல அந்த கிடாரை எடுத்து விளையாட ஆரம்பிச்சேன். அப்புறம், வாசிக்கவும் தொடங்கினேன். என் அப்பா சுஜோய் டே, பாலிவுட்டில் 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பேஸ் கிடார் வாசிச்சிருக்கார். அம்மா ரோமியா டே, பின்னணிப் பாடகி. வீடே எப்போதும் இசைமயமா இருக்கும்.’’
‘‘உங்கள் இசைப்பயணத்தில் திருப்புமுனை எது?’’
 ‘‘பதினொரு வயதில் அப்பா என்னை ‘வி.ஐ.பி’ படத்தின் இசை அமைப்பாளர் ரஞ்சித் பரோட் ஸ்டுடியோவுக்கு அழைச்சுட்டுப்போனார். அங்கே நான் கிடார் வாசிச்சதைப் பார்த்த அவர், ‘இந்த மாதிரி, பெரியவங்ககூட வாசிக்க முடியாது’னு ரொம்பப் பாராட்டினார். அவரைச் சந்திச்சதுதான் என் வாழ்க்கையோட திருப்பு முனை.''
‘‘ஜாகீர் ஹுசேனைச் சந்தித்தது எப்படி?’’
‘‘ரஞ்சித் அங்கிள் என்னை அவரோட ‘jamming’ நிகழ்ச்சி களுக்கு அழைப்பது உண்டு. ஒருநாள் மொபைலில் அழைத்து, `உடனே கிளம்பி பிரித்வி தியேட்டருக்கு வா’னு சொன்னார். நானும் போனேன்.  பார்த்தால் அங்கே ஜாகீர் ஹுசேன். செம சர்ப்ரைஸ். ‘உன்னைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டேன். நல்லா வாசிக்கணும்’னு உற்சாகப்படுத்தினார் ஜாகீர் அங்கிள். அன்று முதல் அவரோட ட்ரூப்பில் நானும் ஒருத்தி. அவருடன் பல சர்வதேச இசை நிகழ்ச்சிகளில் வாசிச்சிருக்கேன்.''
‘‘ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நீங்கள்தான் ஃபேவரிட் பேஸ் கிடாரிஸ்ட்போல?"
 ‘‘ஒருநாள் ஏ.ஆர்.ரஹ்மான் மேனேஜரிடம் இருந்து போன் வந்தது. கோக் ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னார்கள். ‘இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை வாசிக்க வைக்கலாம்னு நினைச்சேன். ஆனால், உன் கிடார் இசையைக் கேட்டதும் நீதான் வேணும்னு முடிவு பண்ணிட்டேன்’னு ரொம்ப கேஷுவலா சொன்னார் ரஹ்மான் அங்கிள். அப்போ எப்படி ரியாக்ட் பண்றதுனுகூடத் தெரியாம அப்படியே நின்னுக்கிட்டிருந்தேன். கடந்த மூணு வருஷமா ரஹ்மான் அங்கிளுக்கு நான்தான் பேஸ் கிடாரிஸ்ட். அவருடைய மிக முக்கிய புராஜெக்ட் ‘Nafs’-ல் இருக்கும் ஒரே ஒரு ரிதம் கலைஞர் நான்தான். அது ஒரு ‘acapella’ இசைக்குழு. பாடகர்களும் ரிதமும் மட்டும்தான். என்னை நம்பி அவ்வளவு பெரிய பொறுப்பைத் தந்தார்.
ரஹ்மான் அங்கிளை ஸ்டுடியோவில் எல்லோரும் ‘ஏ.ஆர்'னுதான் கூப்பிடுவாங்க. எனக்கோ ரொம்பச் சின்ன வயசு. அவரை எப்படிக் கூப்பிடுறதுனு ஒரே குழப்பம். அவர் அருகில் போய்ப் போய் நிற்பேன். ஒருநாள் அசட்டுத் துணிச்சலில் நானும் ‘ஏ.ஆர்'னு கூப்பிட்டேன். மெல்லிய சிரிப்புடன் ‘யெஸ் மோனிஷா'னு திரும்பினார். எனக்கு ஆடிப் போயிருச்சு.”

 
 ‘‘தமிழ்ப் பாடல்கள் கேட்டது உண்டா?'' 
‘‘ ‘கோச்சடையான்’ படத்தில் நான் கிடார் வாசிச்சதால, அந்தப் படப் பாடல்கள் கேட்டிருக்கேன். சிவமணி அங்கிள் இசையில்  ‘அரிமா நம்பி' படத்துக்கும் வாசிச்சிருக்கேன்.  விஜய் டி.வி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு கிடாரிஸ்ட்டா வந்தப்போ நிறையத் தமிழ்ப் பாடல்கள் கேட்டேன்.’’
‘‘இந்திய ரசிகர்கள் ‘சோலோ கி்டார்’ பெர்ஃபார்மென்ஸை ரசிக்கிறார்களா?''
‘‘ஆமா... ரொம்பவே ரசிக்கிறாங்க. இப்போ ‘இன்ஸ்ட்ரூமென்டல்’க்குனு தனி ரசிகர் கூட்டம் உருவாகிருச்சு. சொல்லப்போனா, லைவ் பெர்ஃபார்மென்ஸில் அதற்குத்தான் அதிக எதிர்பார்ப்பு. முன்பு ஜாகீர் ஹுசேன் போல ஒரு சிலர் மட்டுமே பிரபலம் ஆனாங்க. இனி அப்படி நிறையப் பேர் வருவாங்க.’’
 ‘‘இசைத் துறையில் உங்க இலக்கு?''
‘‘நான் நடப்பதை அப்படியே ஏத்துக்குவேன். ரஞ்சித் அங்கிள் முதல் ரஹ்மான் அங்கிள் வரை நான் யாரையும் திட்டமிட்டுச் சந்திக்கலை. என் பாதை இசை. அது என்னை எங்கே அழைச்சுட்டுப்போனாலும் சந்தோஷம்தான்.''

No comments:

Post a Comment